நடப்பு சம்பியன் நைஜீரியா
இதுவரை நடந்துள்ள ஜூனியர் உலகக்கிண்ண போட்டியில் இருந்து சில சுவாரஸ்யமான ஒரு அலசல்
வருமாறு:–
சிங்கப்பூர் கால்பந்து சங்கம் 1977 ஆம் ஆண்டு லயன் சிட்டி கோப்பைக்கான போட்டியை
உருவாக்கியது. அது தான் உலக அளவில் நடத்தப்பட்ட முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டியாகும். இந்த போட்டி தான் ஜூனியர் உலகக்கிண்ண போட்டியின் முன்னோடியாகும். அதனால் கவர்ந்திழுக்கப்பட்ட
சர்வதேசஉதைபந்தாட்ட சம்மேளனம் ஜூனியர் உலகக்கிண்ண போட்டியை நடத்த முன்வந்தது.
முதலாவது ஜூனியர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி சீனாவில் 1985 –ம் ஆண்டு
நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதலில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டது. 1991–ம் ஆண்டில் இருந்து வயது வரம்பு 17 ஆக உயர்த்தப்பட்டது.
2005–ம் ஆண்டு வரை 16 அணிகள் பங்கேற்றன. 2007–ம் ஆண்டு போட்டியில் இருந்து பங்கேற்கும்
அணிகளின் எண்ணிக்கை 24 ஆக
அதிகரிக்கப்பட்டது.
ஜூனியர் உலகக்கிண்ணப் போட்டியில் அதிக முறை பங்கேற்ற அணிகள் பிரேசில், அமெரிக்கா.
இரு அணிகளுக்கும் இது 16–வது உலகக்கிண்ணப் போட்டியாகும்
அதிக முறை சாம்பியனான அணி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா. அந்த அணி 5 முறை (1985, 1993, 2007, 2013, 2015) மகுடம் சூடியிருக்கிறது. 3 முறை இறுதிஆட்டத்தில் தோற்று இருக்கிறது.
ஆச்சரியம் என்னவென்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி இந்த உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவில் .தகுதி
சுற்றோடு வெளியேற்றப்பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாக 4 முறை உலகக் கிண்ண இறுதி ஆட்டத்துக்கு (1991, 1993, 1995, 1997) தகுதி பெற்று சாதனை படைத்த அணி, மற்றொரு
ஆப்பிரிக்க தேசமான கானா.
நைஜீரியாவை தவிர்த்து, பிரேசில் (3 முறை), கானா (2,')இ மெக்சிகோ (2), சோவியத் யூனியன்,
சவுதி அரேபியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து (தலா ஒரு முறை) ஆகிய அணிகளும் ஜூனியர் உலகக்கிண்ணக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
சோவியத் யூனியனும் (1987),
சுவிட்சர்லாந்தும் (2009) தங்களது முதல் போட்டியிலேயே வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தின.
ஜூனியர் உலகக்கிண்ணம் ‘இளம்புயல்’களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, அடுத்த
கட்டத்துக்கு அவர்களை கொண்டுசெல்வதற்கு ஒரு வடிகால் என்றால் அது மிகையாகாது.
இப்போது பிரபலங்களாக உள்ள நெய்மார் (பிரேசில், இனியஸ்டா (ஸ்பெயின்), டோனி குரூஸ்
(ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிகஸ் (கொலம்பியா), 2014–ம் ஆண்டு சீனியர் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி அணிக்காக
வெற்றிக்குரிய கோலை அடித்த மரியா கோட்சே உள்ளிட்டோர் ஜூனியர் உலகக்கிண்ணக் கிண்ணப் விளையாடியவர்கள் தான். இகேர் கேசில்லாஸ், சேவி
ஹெர்னாண்டஸ், பெர்னாண்டோ டோரஸ், டேவிட் சில்வா (4 பேரும் ஸ்பெயின்) லான்டன் டோனவன் (அமெரிக்கா),
ரொனால்டினோ (பிரேசில்,
ஜியான்லுகி பப்போன் (இத்தாலி, உள்ளிட்டோரும் இந்த
பட்டியலில் அடங்குவர்.
அதே சமயம் ஜூனியர் பிரிவில்
கால்பதித்தால் தான் சீனியர் மட்டத்திலும் ஜொலிக்க முடியும் என்பது அல்ல. இப்போது
கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் கொடி கட்டி பறக்கும் கிறிஸ்டியானா ரொனால்டோ
(போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), தாமஸ் முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் ஒரு
போதும் 17
வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பந்தை உதைத்து கிடையாது. ஜூனியரில் 5 முறை பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கும்
நைஜீரியா, சீனியர் அளவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டியதில்லை என்பது
ஆச்சரியமான உண்மை.
ஜூனியர் மற்றும் சீனியர் இரண்டிலும்
உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே வீரர் பிரேஸிலின் ரொனால்டினோ தான். 1997–ம் ஆண்டு ஜூனியர், 2002–ம் ஆண்டு சீனியர் ஆகிய உலகக்கிண்ணக்
கிண்ணத்தை வென்ற பிரேஸிலின் இரு
அணியிலும் ரொனால்டினோ இடம் பெற்றிருந்தார்.
மெக்சிகோ – உருகுவே இடையே 2011–ம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தை 98,943 பேர்
கண்டுகளித்தனர். ஜூனியர் உலகக்கிண்ணக்
கிண்ணப் போட்டியை அதிகமானவர்கள் நேரில் ரசித்த ஆட்டம் இது தான்.
2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் 52 ஆட்டத்தில் 172 கோல்கள்
பதிவாகின. அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி இது தான்.
அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் பிரேஸில் (166 கோல்) முதலிடத்திலும், நைஜீரியா (149) 2–வது இடத்திலும் உள்ளன.
1997–ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து 0–13 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது,
ஒரு அணியின் மோசமான தோல்வியாகும்.
இந்தியா, நைஜர், நியூகலிடோனியா ஆகிய
மூன்று நாடுகள் இந்த முறை அறிமுக அணிகளாக களம் காணுகின்றன. இதில் ஜூனியர் உலகக்கிண்ண கிண்ணப் போட்டியில் அடியெடுத்து
வைக்கும் 18–வது ஆசிய நாடு
என்ற சிறப்பை இந்தியா பெறுகிறது.
இந்தியாவில் நடக்கும் இந்த கால்பந்து
திருவிழாவை சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
அத்துடன் 185 நாடுகளுடன்
ஒளிபரப்பை பகிர்ந்து கொள்கிறது. இதனால் தொலைக்காட்சி மூலம் ஏறக்குறைய 20 கோடி பேர் இந்த போட்டியை கண்டுகளிப்பார்கள்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment