கிரிக்கெற் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த
அவுஸ்திரேலிய தற்போது வெற்றி பெற முடியாது தவித்துவருகிறது. தொடர் தோல்விகளால்
துவண்டிருந்த அவுஸ்திரேலியாவை வார்னர் தலைமையிலான வீரர்கள் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ரி20 போட்டியில் தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற்ற
இந்தியாவின் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரி 20யில் இந்தியா பாகிஸ்தானிடம்
தோல்வியடைந்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில்
நேற்றிரவு நடந்தது. இங்கு அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதன் மூலம்
இந்தியாவின் 49-வது சர்வதேச
கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை.அவு அணியில்
டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டார். நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற வார்னர்
களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
அவுஸ்திரேலியாவின்
ஜாசன் பெரென்டோர்ப் பந்து வீச்சில் அச்சுறுத்தினார். வரிசையாக இந்திய அணியின்
ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, மணிஷ் பாண்டே, ஷிகர் தவான் ஆகியோரை வெளியேற்றினார். முதல் 5 ஓவர்களிலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 4 பேரை வெளியேற்றினார் ஜாசன் பெரன்டோர்ப். கோஹ்லி ரி20 யில் முதன் முதலாக டக் அவுட்டானார்.
4.3 வது ஓவரில் இந்திய அணி வெறும் 27 ஓட்டங்கள் கள் எடுத்து இருந்த நிலையில் 4 விக்கெட்களை
பறிகொடுத்தது. இதனையடுத்து ஜாதவுடன், டோனி களம் இறங்கினார். இருவரும் நின்று
விளையாட தொடங்கினர். இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சி
காணப்பட்டது. ஆனால் அதனையும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் ஜம்பா
விடவில்லை. 9.5 வது ஓவரில் இந்திய அணி 60 ஓட்டங்கள் கள் எடுத்து இருந்த நிலையில் டோனி 13 ஒட்டங்களில்
வெளியேறினார். ஜாதவுடன், ஹர்திக் பாண்டியா இணைந்து விளையாடினார். இந்த கூட்டணியும் நிலைக்கவில்லை,
ஜாதவும், ஜம்பாவின் பந்துவீச்சில் 27 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
11.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் தவித்தது. புவனேஷ் குமார் ஒரு ஓட்டத்துடன்
வெளியேறினார்.இதனையடுத்து இந்திய அணியை 100 ஓட்டங்களைக் கடக்க
செய்த ஹர்திக் பாண்டியாவும் 25 ஓட்டங்களில் அட்டம் இழந்தார். பும்ரா 7 ஓட்டங்களில்
ரன்அவுட் ஆனார். எதிர்முனையில் ஆடிய குல்தீப் யாதவ் 19.6 வது ஓவரில் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்தியா சகல
விக்கெற்களையும் இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தது. . அவுஸ்திரேலியா பந்து
வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும்
அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
119 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலியா இரண்டு விக்கெற்களை இழந்து வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய
அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டன் டேவிட் வார்னர் இரண்டு ஓட்டங்களுடனும் ஆரோன் பிஞ்ச் எட்டு ஓட்டங்களுடனும் சீக்கிரம்
வெளியேற்றப்பட்டாலும், மோசஸ் ஹென்ரிக்சும், டிராவிஸ் ஹெட்டும் அணியை தூக்கி
நிறுத்தினர்.
சிறிய இலக்கு
என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.
இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சை பின்னியெடுத்தனர். குறிப்பாக ஹென்ரிக்ஸ்,
இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பின் ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டார்.
அவுஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து 122ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெற் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது. ஹென்ரிக்ஸ் 62 ஓட்டங்களுடனும் களுடனும் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்),
டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களுடனும் (34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில்
இருந்தனர்.
No comments:
Post a Comment