சம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்
|
அவுஸ்திரேலியாவுக்கு
எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ரோகித்தின் சதமும் அக்ஷர் படேல்,புவனேஸ்வர்
குமார், பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சும் கைகொடுக்க இந்திய ஏழு விக்கெற்றால்
வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா தொடரைக் கைப்பற்றியது.நாக்பூரில்
நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தர வரிசைப் பட்டியலில்
முதல் இடத்துக்கு முன்னேறியது.
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர்
முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கிய ஆரோன் பிஞ்சும், டேவிட்
வார்னரும் இந்தியப் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டனர். 10 ஒப்வர்களில் 60 ஓட்டங்கள் எடுத்த இந்த ஜோடியை பாண்ட்யா
பிரித்தார். 32 ஓட்டங்களில் பிஞ்ச்
வெளியேற வார்னருடன் கப்டன் ஸ்மித் இணைந்தார். 16 ஓட்டங்கள் எடித்த ஸ்மித்தை கேதார் ஜாதவ்
வெளியேற்றினார். அக்சர் படேலின்
பந்தி வீச்சு திருப்பு முனையை ஏற்படுத்தியது.. வார்னர் 53 ஓட்டங்களிலும்
ஹென்ஸ்கோம்ப் 13 ஓட்டங்களிலும்
அக்சர் படேலின் சுழலில் சிக்கினர்.
14 ஆவது சதம் அடித்த ரோகித்
சர்மா |
ஹெட், ஸ்டாய்னிஸ்
ஆகியோர் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை
அதிகப்படுத்தினர். 42 ஓட்டங்களை எடுத்த
ஹெட்டை அக்சர் வெளியேற்றினார். பும்புரா,
புவனேஸ்வர் குமார் ஆகியோரின் வேகம்
அவுஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது. 46 ஓட்டங்கள் எடுத்த ஸ்டாய்னிஸும் 20 ஓட்டங்கள் எடுத்த மத்தியு வேட்டும் பும்புரவின் பந்து
வீச்சில் ஆட்டமிழந்தனர். பால்க்னர் 12 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
அவுஸ்திரேலியா 50 ஓவர்களில்
விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள்
எடுத்தது. அக்சர் படேல்3 விக்கெற்களையும், பும்புரா 2 விக்கெற்களையும், பிரவின் குமார்,பாண்ட்யா
ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர்.
243 என்ற இலகுவான் ஒட்ட எண்ணிக்கையுன் களம் இறங்கிய
இந்தியா 42.5
ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து
வெற்றிபெற்றது. ரகனே ரோகித் சர்மா ஜோடி வலுவான அடித்தளமிட்டு இந்தியாவின்
வெற்றியை இலகாக்கியது. 124 ஓட்டங்கள் எடுத்தபோது
இந்த ஜோடி பிரிக்கப்பட்டது. ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டு அதிக பட்சமாக 8 முறை 100 அல்லது
அதற்கு மேல் இந்திய ஜோடி ஓட்டங்களைக் குவித்தது. முன்னதாக 2002 ஆம் ஆண்டும் 2007 ஆம்
ஆண்டும் . முதலாவது இணைப்பாட்டம் 100
ஓட்டங்களுக்கு
மேல் எடுத்தது.
மூன்று விக்கெற்களைக் கைப்பற்றிய
அக்சர் படேல் |
பால்க்னரின் பந்து
வீச்சில் தொடர்ச்சியாகைரண்டு பவுண்டரிகள் அடித்த மனிஷ் பண்டே வெற்றியை உறுதி செய்தார். ஜாதவ் 5 ஓட்டங்களுடனும் மனிஷ் பாண்டே 11 ஓட்டங்களுடனும்
ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகவும் ஹர்த்திக்
பண்டையா தொடர் நாயகனாகவும் தெரிவு
செய்யப்பட்டனர்.
இளம் வீரர்களுடன் டோனி
|
நாக்பூரின் ரம்மியமான காட்சி
|
No comments:
Post a Comment