Sunday, October 8, 2017

பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இந்தியா வென்றது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கோஹ்லி, தவான்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ரி20 போட்டியில்  மழை குறுக்கிட்டதால் "டர்க்வொத்-லீவிஸ்" முறைப்படி இந்தியா ஒன்பது விக்கெற்களால் வெற்றி பெற்றது.
  ஒரு நாள் தொடரில் ஆடாத ஷிகர் தவான் அணிக்கு திரும்பினார். லோகேஷ் ராகுல், மூத்த வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஆகியோருக்கு ஆ டும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கப்டன் ஸ்மித் விலகியதால்  நேற்றைய முதலாவது 20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார். எஞ்சிய இரு ஆட்டத்திற்கும் அவரே கப்டனாக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்திய கப்டன் விராட் கோஹ்லி   முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கப்டன்  டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினர். புவனேஷ்வர்குமாரின் மூன்றாவது நான்காவது பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய வார்னர் ஐந்தாவது பந்தில்  8 ஓட்டங்களுடன்      விக்கெற்றைப் பறிகொடுத்தார்.  மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்சுடன் இணைந்தார்.  .ஆரோன் பிஞ்ச், வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தார்.  அணியின் எண்ணிக்கை  55 ஓட்டங்களை  எட்டிய போது 17 ஓட்டங்கள் எடுத்த  மேக்ஸ்வெல்,யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தை பும்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டம்இழந்தார்.
விக்கெற்றை வீழ்த்தி துள்ளிக் குதிக்கும் குல்தீப்
குல்தீப்பின் சுழலில்   ஆரோன் பிஞ்ச்சை (42 ஓட்டங்கள் )  ஹென்ரிக்ஸ் (8 ஓட்டங்கள் )  டிராவிஸ் ஹெட் (9ஓட்டங்கள் ) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். சாஹல்-குல்தீப்பின் சுழலில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். சாஹலின் பந்து வீச்சில் சிக்கிய பெய்ன் மூன்றுமுறை தப்பிப்பிழைத்தார். சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தல ஒரு கச்சைத் தவறவிட்டனர். டோனி ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார்.
பெய்னை பும்புரா வெளியேற்றினார். அதே ஓவரில் கூல்டர் நைலையும் பும்புரா வெளியேற்றினார்.கிறிஸ்டியன் ரன் அவுட் ஆனார். அவுஸ்திரேலிய அணி 18.4   ஓவரில் 8 விக்கெற்களை இழந்து  118   .ஓட்டங்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ்  ஆகியோர் தலா 2 விக்கெற்களும், புவனேஷ்வர்குமா,இ ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா தலா ஒரு விக்கெற்ரையும் வீழ்த்தினர்
விக்கெற்றை பறிகொடுக்கும் ஆரோன் பிஞ்ச்
மழைக்குப் பின்னர்  போட்டி மீண்டும்  ஆரம்பமானபோது    "டர்க்வொத்-லீவிஸ்" முறைப்படி 6 ஓவர்களில்  48 ஓட்டங்கள் என்ற இலக்கு இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் சர்மா 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 5.3 ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து  இந்தியா வெற்றி பெற்றது. 
ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு  செய்யப்பட்டார்.




No comments: