Monday, April 1, 2024

மோடியை எதிர்க்கும் ஸ்டாலின் ஸ்டாலினை விமர்சிக்கும் எடப்பாடி

இந்தியப் பொதுத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க  முயற்சி செய்யும் மோடியின்  கவனம் முழுவதும் தமிழகத்தில் உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்டாலினையும், தமிழக அரசையும்  மோடி தாக்கத் தவறுவதில்லை.

மோடியின் மாயப் பிரசாரம் தமிழகத்தில் இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நிதர்சனம்.

 தமிழகத்தில் ஒரே  ஒரு  வெற்றியையாவது  பெற வேண்டும் என மோடி கங்கணம் கட்டியுள்ளார். அதற்காகவே பாட்டாளி  மக்கள் கட்சியைத் தன்பக்கத்தில் வைத்திருக்கிறார். செல்வாக்கு  மிக்க  பிரமுகரான பாரிவேந்தரைக்  கைக்குள் வைத்திருக்கிறார்.

கடந்த  பாராளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற பாரிவேந்தர் இம்முறை தாமரையின் பக்கம் சாய்ந்துள்ளார்.

தமிழகத்தைல் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தலா 30 சதவீத்த்துக்கு மேல் வாக்கு வங்கியை வைத்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேதான் தமிழ்கத்தேர்தல் போட்டி நடைபெறுவது வழமை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தைப் பிடிக்க  பாரதீய ஜனதா  முயற்சிக்கிறது.

மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என்பதில்  ல்ஸ்டாலின்  உறுதியாக இருக்கிறார். பாரதீய ஜனதாவை எதிர்த்துக்கும் எடபாடி, மோடியை எந்த இடத்திலும் விமர்சிக்க வில்லை.தமிழக முதல்வர் ஸ்டாலினை எதிர்ப்பதில்  எடப்பாடியும், மோடியும் கை கோர்த்துள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதி பாரதீய ஜனதாவின் குறிக்கோள் அல்ல. வாக்கு வங்கியை  உயர்த்துவதற்காகவே  கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது பாரதீய ஜனதா. அண்ணாமலையின்  குறிக்கோளும் அதுதான். எடப்பாடி இணங்காததால்வேறு வழியின்றி த‌னியாகக் களம் கண்டுள்ளது பாரதீய ஜனதா.

லோக்சபா தேர்தல் முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட இதுவரை 1403 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

  664 மனுக்கள் நிராகரிப்பு!   1085 வேட்புமனுக்கள் ஏற்பு

 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் 1,749 வேட்புமனுக்களில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 664 வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

 அதிகபட்சமாக தென்சென்னையில் 53 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக வடசென்னையில் 49 மனுக்களும், நாமக்கல்லில் 48 மனுக்களும், ஈரோட்டில் 47 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.   நாகப்பட்டினத் தொகுதியில் குறைந்த  9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19 ம் திக‌தி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 14 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன'

எதிர்க் கட்சிகளின் சின்னங்கள்  முடக்கம்

தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தில் உள்ள எதிரக் கட்சிகளின் சின்னங்களை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. 

வைகோவின் கட்சிக்கு  பம்பரம் கிடையாது, சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடையாது, அவர்கள் கேட்ட சின்னமும் கிடையாது என்று கூறிய தேர்தல் ஆணையம் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்ட பானை சின்னத்தை ஒதுக்க மறுத்து விட்டது.

பாரதீய ஜனதாவுன் கூட்டாளிகளான  வாசனும், தினகரனும்   கேட்ட சின்னங்கள் மறு பேச்சின்றி கொடுக்கப்பட்டன.  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

   தமிழ் மாநில காங்கிரஸ் கேட்ட சைக்கிள் சின்னம், டிடிவி தினகரன் கேட்ட குக்கர் சின்னம் என யாருக்கும் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. யாரெல்லாம் எந்த சின்னம் கேட்டார்களோ எல்லோருக்கும் டக் டக்கென்று சின்னம் கிடைத்து விட்டது.

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  வெற்றி பெற்றே பல வருடங்கள் ஆகி விட்டது. வாக்கு வங்கியும் கூட அதலபாதாளத்தில் தான் உள்ளது. இருந்தாலும் அது கேட்ட சின்னம் பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் கிடைத்து விட்டது. தினகரனின் கட்சியில்  எம்எல்ஏவோ, எம்.பியோ யாரும் இல்லை. அதன் வாக்கு வங்கியும் கீழேதான் கிடக்கிறது. இருந்தாலும் அந்தக் கட்சிக்கும் கூட கேட்ட குக்கர் சின்னம் கிடைத்து விட்டது.

நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே கரும்பு விவசாயி சின்னத்தில்தான் போட்டியிட்டது. இந்த முறை அது மறுக்கப்பட்டு விட்டது. அதேபோல அவர்கள் கேட்ட சின்னத்தையும் தேர்தல் ஆணையம் தர மறுத்து விட்டது.

வைகோ கேட்ட பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டு விட்டது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அது கேட்ட பானைச் சின்னம் மறுக்கப்பட்டது.

  விடுதலைச் சிறுத்தைகள் வசம் தற்போது 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் உள்ளனர். இதில் நான்கு எம்எல்ஏக்களும், ஒரு எம்.பியும் பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ரவிக்குமார் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் போட்டியிடும் சிறுத்தைகள் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும்   கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. நீதிமன்றத்தில் முறையிட்டு பானை சின்னத்தை  விடுதலைச் சிறுத்தைகள்  பெற்றது.

                       ஓ.பி.எஸ்ஸை எதிர்க்கும்  .பி.எஸ்கள்

 ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக  .பன்னீர்ச்செல்வம்  போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து . பன்னீர்ச்செல்வம் என்ற  பெயரில் நான்கு  பேர் போட்டியிடுகின்றனர். பன்னீருக்கு எதிராகத் திட்டமிட்டு நாகு பேர்  களம்  இறக்கப்பட்டுள்ளனர்.  ருக்கு ரத்த கொதிப்பு' சாங்! முன்னாள் முதல்வர் .பன்னீர்செல்  அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன. இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

 கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் மூத்த அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து 6 ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுதான் அதிக நபர்கள் ஒரே பெயரில் போட்டியிட்ட தொகுதி ஆகும்.  இது போல நடப்பது தற்செயல் நிகழ்வு அல்ல, இது கவனமாக கட்டமைக்கப்பட்ட அரசியல் திட்டமிடல் மூலம் நடப்பது ஆகும். 2016 சட்டமன்றத் தேர்தலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொல் திருமாவளவனின் தோல்விக்கு பெயர் குழப்பம் முக்கிய காரணம். அவரின் பெயரை கொண்ட டி.திருமாவளவன், சுயேட்சையாக 289 வாக்குகள் பெற்றார். இதுவும் கூட திருமா தோல்வி அடைய காரணம் ஆகும். அதே போன்ற சவால் தற்போது பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டு உள்ளது.   

தம்பதியராக களத்தைக் கலக்கும் அரசியல்வாதிகள்.

எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அதேபோல முன்னெப்போதையும் விட இப்போது அரசியலிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர். அதிலும் கணவர் மனைவியாக இணைந்தே சாதிக்கும் அரசியல்வாதிகள் அதிகரித்து விட்டனர். அப்படிப்பட்ட ஜோடி தலைவர்களை இங்கே பார்க்கலாம், வாங்க.

அரசியலில் வாரிசுகள் வருவது என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகின்ற செயலாக உள்ளது. அதாவது தந்தை அல்லது தாய் அரசியல் இருப்பார்கள். அவர்களுக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பிள்ளைகள் வருவாங்க.  அப்பா, அப்பாவுக்கு அடுத்த படி மகன் அல்லது மகள் என்ற அடிப்படையில் அரசியலில் வருவது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இப்போது கணவன் மனைவியாக அரசியலுக்கு வருவோர் அதிகரித்து விட்டனர். தம்பதியர்களாக இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட ஜோடிகளைத்தான் பார்க்கப் போகிறோம்.

 அகிலேஷ் யாதவ் -டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி)

அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர். இப்போது சட்டமன்ற உறுப்பினராக, உத்தரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவராக  தற்போது செயல்பட்டு வருகிறார். இவருடைய தந்தை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ். இவர் உத்திரபிரதேசத்தின் மையின்பூரில் இருந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மாமனார், கணவர் வரிசையில் டிம்பிளும் தேசிய அளவில் தெரிந்த முகமாக மாறியிருக்கிறார். பலரின் அன்பையும் பெற்றவர். நோ நான்சென்ஸ் அரசியல்வாதியாக அறியப்பட்ட ஒரு பெண் தலைவரும் கூட. மாநிலத்தில் கணவரின் அரசியலுக்கு பக்க பலமாகவும், தேசிய அரசியலில் கட்சிக்கு நல்ல முகமாகவும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார் டிம்பிள்.

ராஜீவ் காந்தி- சோனியா காந்தி (காங்கிரஸ்)

இந்த ஜோடியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்திரா காந்தி  மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்திக்கு மனைவியாக மிகப் பெரிய உதவியாக இருந்தவர், தோளோடு தோள் நின்றவர் சோனியா காந்தி.  ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்கும் பொறுப்பு இவரை நோக்கி வந்தபோது தயங்காமல் அதை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியை வழி நடத்தினார். பிரதமர் பதவி தேடி வந்தபோதும் கூட அதை மன்மோகன் சிங்கிடம் கொடுத்து விட்டு கட்சிப் பணியாற்றியவர். இப்போது வரை கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவரும் கூட.

                டி. ராஜா-ஆனி ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர். இவர் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும் கூட. இவருடைய மனைவி ஆனி ராஜா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆவார். பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன் நிற்பவர். இவர் கேரளா வயநாட்டு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக களம் கண்டுள்ளார். கணவரும் மனைவியுமாக அரசியல் களத்தில் முன்னேறி வந்தவர்கள் இவர்கள் இருவரும்.


 டாக்டர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா அன்புமணி (பாட்டாளி மக்கள் கட்சி)

தர்மபுரியில் பாமக வேட்பாளராக போட்டியிடுகிறார் சவுமியா. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது சகோதரர் விஷ்ணுபிரசாத் ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருக்கிறார்.இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். சவுமியா தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். டாக்டர் அன்புமணிக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பவர் சவுமியா. இப்போது தனது கணவரின் அரசியலில் நேரடியாக பங்கேற்று அவருக்கு உற்ற துணையாக மாற களம் கண்டுள்ளார்.

பிரகாஷ் காரத்-பிருந்தா காரத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய செயலாளராக  பணியாற்றியவர். தற்போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆவார். இவருடைய மனைவி பிருந்தா காரத். இவர் அனைத்திந்திய ஜனநாயகப் பெண்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும், மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தவர். பிரகாஷ் காரத்தைப் போலவே, பிருந்தா காரத்தும் நாடறிந்த ஒரு பெண் தலைவராக திகழ்பவர் ஆவார்.

              விஜயகாந்த் -பிரேமலதா (தேசிய முற்போக்கு திராவிட கழகம்)

தமிழ்நாட்டில் தேமுதிக கட்சியை நிறுவியவர் விஜயகாந்த். இவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இவர் அரசியலில் நுழையும் போதே தனது மனைவியுடன்தான் வந்தார். மனைவியையும் கூடவே கூட்டிட்டு வர்றீங்களே என்ற விமர்சனம் எழுந்தபோது, மனைவி கணவருக்கு துணையாக வர்றாங்க. இதில என்ன தப்பு இருக்கு. ஒரு கணவர் வேலை  செய்யும் போது மனைவி உதவி செய்றாங்க. இதை அரசியல் வாரிசு என்று சொல்லாதீங்க என்று கூறியவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் இருந்தபோதே அவரது அரசியலில் துணை நின்றவர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் இறப்பிற்கு பின்னர் தேமுதிகவின் பொது செயலாளராக தற்போது செயல்பட்டு வருகிறார். இவர்களுடைய மகன் விஜய பிரபாகரன். இவரும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

சரத்குமார் - ராதிகா (பாஜக)

நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சியின் நிறுவனர் ஆவார். இவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக விளங்கியவர். இவருடைய மனைவி நடிகை ராதிகா. இவர் சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர். தற்போது சரத்குமார் ராதிகா இருவரும் பாஜகவில் இணைந்து விட்டனர். வரும் லோக்சபா தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகரில் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய வெற்றிகரமான கணவன் மனைவி அரசியல் ஜோடிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதில் பலர் புகழ் பெற்று விளங்கியுள்ளனர்.. சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் மக்கள் அவர்களுக்குத் தர வேண்டியதை சரியாக கொடுக்கத் தவறுவதில்லை. இதில் நாம் பார்க்க வேண்டியது, பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் காட்டுவதைத்தான்.. அதை நாம் வரவேற்க வேண்டும்.

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் பெண்கள் அதிகம் இருக்கும்போது அந்த இடத்தில் நேர்த்தியான, தெளிவான, சரியான நிர்வாகம் இருக்கும். அரசியலிலும் அது உருவாக வேண்டும்.. அதற்குத் தகுதியான, திறமையான பெண்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்.

No comments: