அஹமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 17வது லீக் போட்டியில் குஜராத டைடான்ச் நிர்ணயித்த 200 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கை எட்டிய பஞ்சாப் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப்க் முதலில்பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் 20 ஓவர்கலில் 4 விக்கெற்களை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது.பஞ்சாப் 19.4 ஓவர்களில் 7 விக்கெற்கள்:ஐ இழந்து 200 ஓட்டங்கள் எடுத்து வெற்ரி பெற்றது.
ரித்திமான்
சஹா 11, கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட
முயற்சித்து 26 (22) ஓட்டங்கள் எடுத்தனர்.
இம்பேக்ட் வீரராக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன்
3வது விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரியுடன் அதிரடியாக
33 (19), விஜய் சங்கர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய சுப்மன் கில் கடைசி
வரை ஆட்டமிழக்காது 4 பவுண்டரி 6 சிக்சருடன்
89* (48) ஓட்டங் கள் குவித்தார். அவருடன் கடைசி
நேரத்தில் ராகுல் திவாட்டியா சரவெடியாக 23* (8) ஓட்டங்காள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால்
20 ஓவவர்களில் குஜராத் 4 விக்கெற்களை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது.
200 ஓட்டங்களைத்
துரத்திய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கப்டன் ஷிகர் தவான் ஒரு ஓட்டம் எடுத்து உமேஷ்
யாதவ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஜானி பேர்ஸ்டோ 22 , பிரப்சிம்ரன்சிங் அதிரடியாக
35[ 24) , ஷாம் கரன் 5, ஓட்டங்களில் ஆட்டமிழந்தகால் 4 விக்கெட்கலை இழந்த பஞ்சாப் 74 ஓட்டங்கள்
மட்டுமே எடுத்தது. அந்த சமயத்தில் லோயர்
மிடில் ஆர்டரில் வந்த சசாங் சிங் அதிரடியாக விளையாடிய நிலையில் அவருடன் 41 ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்த சிக்கந்தர் ராசா தடுமாறி 15 (16) ஓட்டங்களிலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து
16 (8) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இம்பேக்ட் வீரராக வந்த அசுதோஷ் சர்மா அதிரடி காட்டியதால்
வெற்றியை நெருங்கிய பஞ்சாப்புக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
தர்ஷன் நல்கண்டே வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே அசுதோஸ் சர்மா 31 (17) ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் பரபரப்பை உண்டாக்கியது. ஆனாலும் எதிர்ப்புறம் தில்லாக விளையாடிய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ஓட்டங்களை 210.34 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.5 ஓவரில் 200/7 ரன்கள் எடுத்த பஞ்சாப் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி மும்பையின் (5 முறை) சாதனையை உடைத்த பஞ்சாப் (6 முறை) புதிய சாதனை படைத்தது. சசாங் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
32 வயதில் சாதித்த சசாங் சிங்
டிசம்பர்
19ஆம் திகதி துபாயில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 19 வயதாகும் சசாங் சிங் எனும் இளம் வீரரை பஞ்சாப் நிர்வாகம் வாங்க முயற்சித்தது. அப்போது அதே வீரர்களின் பட்டியலில் 32 வயதாகும் சசாங் சிங் பெயரும் இருந்தது. எனவே ஏலதாரர் மல்லிகா அந்த பெயரை ஏலத்திற்காக அழைத்தார். அப்போது பஞ்சாப் அணியினர் 19 வயதாகும் சசாங் சிங் என்று நினைத்துக் கொண்டு அந்த வீரரை வாங்கியது. ஆனால் வாங்கி முடித்த பின்பே அது 32 வயதாகும் சசாங் சிங் என்று தெரிய வந்ததால் பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அதைத் திரும்ப பெறுமாறு ஏலதாரரிடம் கேட்டுக் கொண்டார். இருப்பினும்
விதிமுறைப்படி அதை செய்ய முடியாது என மல்லிகா மறுப்பு
தெரிவித்துவிட்டதால் வேறு வழியின்றி 32 வயதாகும் சசாங் சிங்கை 20 லட்சத்துக்கு பஞ்சாப் வாங்கியது. அது பற்றிய சில வதந்திகள் வந்த போதிலும் கடைசியில் தாங்கள் சரியான வீரரை வாங்கியதாக பஞ்சாப் நிர்வாகம் அறிவித்தது.
துரதிர்ஷ்டவசமாக வாங்கப்பட்ட சசாங் சிங் இப்போட்டியில் 70/4 என தடுமாறிய நிலையில் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறிய போது அபாரமாக விளையாடி பஞ்சாப்புக்கு வெற்றி எனும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுத்தார். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உள்ளூரில் 55 டி20 போட்டிகளில் 724 ரன்கள் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற அணிகளில் வாங்கப்பட்டும் வாய்ப்பு பெறாமல் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் 32 வயதாகியும் மனம் தளராமல் போராடி இப்போட்டியில் சாதித்துள்ளார்.
11 பந்துகளில் யுவராஜ் ஜின் சாதனையை அசுடோஸ் சர்மா
இம்பேக்ட்
வீரராக வந்த அசுடோஸ் சர்மா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (17) ஓட்டங்கள் குவித்து திருப்பு முனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார்.
அந்த வகையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக வந்து உண்மையிலேயே வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்திய அசுடோஸ் சர்மா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். தற்போது 25 வயதாகும் அவர் மத்தியப்பிரதேசத்தில் பிறந்து 2018ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட துவங்கினார். அதன் பின் ரயில்வேஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்த அவர் 2023 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக விளையாடினார். அந்தப்
போட்டியில் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் வெறும் 11 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். அதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் அதிவேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற ஜாம்பவான் யுவராஜ் சிங் சாதனையையும் அவர் உடைத்தார். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு
ரி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸருடன் 12 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தது யாராலும் மறக்க முடியாது.
பஞ்சாப் அணிக்காக 20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அவர் கடந்த ஜனவரி மாதம் நடந்த ரஞ்சிக் கோப்பையில் குஜராத்துக்கு எதிராக சதமடித்து அசத்தினர். அதனால் இப்போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் பஞ்சாப் சிறப்பான வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த வாய்ப்பைக் கொடுத்த பஞ்சாப் அணிக்கும் ஷிகர் தவானுக்கும் போட்டியின் முடிவில் அவர் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment