ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்தையும் முறியடிப்பதற்கு பிரான்ஸ் முன்னுரிமை கொடுக்கிறது. பிரான்ஸ் நகரத்தில் தெருவோரத்திலும், கைவிடப்பட்ட கட்டடங்களிலும் வசிக்கும் வீடற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் பிரான்ஸ் தீவிர கவனம் செலுத்துகிறது.
நகரத்தை
விளையாட்டுகளுக்கு சிறப்பாகக் காட்டுவதற்காக
வீடற்றவர்களை தெருக்களில் இருந்தும் , அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் இருந்தும்
அகற்ற அதிகாரிகள் விரும்புவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன
பாரிஸின்
தெற்கு புறநகரில் உள்ள பிரான்ஸின் மிகப்பெரிய க்ட்ட்டடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர்
, ஒலிம்பிக்கிற்கு முன்னதாக தலைநகர் பகுதியில் இருந்து அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள்
,வீடற்றவர்கள் ஆகியோரை அகற்ற அதிகாரிகள் முயல்வதாக
தொண்டு நிறுவனங்களின் புதிய குற்றச்சாட்டுகளைத் தூண்டியது.
கைவிடப்பட்ட
பேருந்து நிறுவன தலைமையகக் கட்டடத்தில் சுமார்
450 பேர் வரை வசித்து வந்தனர், அவர்களில் பலருக்கு அகதி அந்தஸ்து, சட்டப்பூர்வ ஆவணங்கள்
, பிரான்ஸில் வேலை செய்யும் ஆவணங்கள் ஆகியவை
உள்ளன. ஆனால் அவர்களுக்கு சரியான வீடுகள் கிடைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து வெளியேற்றி பிரான்சின் பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் அனுப்பினர்.
வெளியேற்றப்பட்ட 450 பேரில் 50 பெண்களும் 20 குழந்தைகளும் அடங்குவர்.
உள்ளூர் பள்ளிகளில் குறைந்தது 10 குழந்தைகள் படிக்கின்றனர். மத்திய நகரமான ஓர்லியன்ஸ்
அல்லது தென்மேற்கு நகரமான போர்டியாக்ஸுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் கட்டடத்தில் இருந்த பலர் பிரான்ஸை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஏனெனில்
அங்கு வேலைகள் உள்ளன. சூடானைச் சேர்ந்த 29 வயதான அபாகர், “நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்"
என்றார். லாஜிஸ்டிக்ஸ் படிப்பை மேற்கொள்வதற்காக பாரிஸில் இருந்த அவருக்கு ஒரு சூப்பர்
மார்க்கெட்டில் வேலை தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மனிதாபிமான
அமைப்பான Médecins du Monde இன் பால் அலௌசி, மூன்று ஆண்டுகளாக அங்கு தங்கி இருந்தவர்களுக்கு சுகாதார ஆதரவை அளித்து வந்தார். அவர் Revers de
la Médaille (The Medal's Other Side) இன் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார், இது பரிஸ்
பகுதியில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீடற்ற மக்கள் மீது ஒலிம்பிக் தாக்கத்தை
ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின்
கூட்டு அமைப்பாகும்.
அந்தக்
கட்டடத்தில் வசித்தவர்களில் 80% பேர், சூடான், எத்தியோப்பியா , எரித்திரியாவைச்
சேர்ந்தவர்கள். பலர் அகதி அந்தஸ்து பெற்றவர்கள்
அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களைக் கொண்டிருப்பவார்கள்.
தாக அலௌசி கூறினார். பலருக்கு கட்டிடத் தளங்கள் மற்றும் தச்சு வேலைகள் உட்பட வேலைகள்
இருந்தன.
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் அவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கு மீண்டும் அழைத்து வரப்படுவார்களா? அல்லது புதிய இடத்தில் தங்க வைக்கப்படுவார்களா என்பது பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment