"எனது ஒலிம்பிக் பதக்க இலக்கு 2024 அல்ல, ஆனால் 2028 அல்லது 2032 இல் ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே எனது கனவு" என்று இலங்கையின் பூப்பந்து வீரன் வீரன் நெட்டசிங்க [28] தெரிவித்தார்.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 13 வரை பிரான்சில் 2024 பரிஸ்
ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.
சர்வதேச
தர வரிசையில் 72வது இடத்தில் உள்ள நெட்டசிங்க,
சீசன் முழுவதும் ஈர்க்கக்கூடிய 24,030 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று, இந்த ஆண்டு ஒலிம்பிக்
போட்டிகளுக்கான தகுதி பெற்ற வீரர்களில் 32வது இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
, தகுதிகாண் பட்டியலில் உள்ள இளைய வீரராக உள்ள
, தனது அபார திறமையை வெளிப்படுத்தி, விளையாட்டில் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறார்.
தந்தையான ரொஷான் தம்மிக்கவின் பயிற்சியில் நெட்டசிங்க முன்னேற்ற மடைந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்
பின்னர் உலக தரவரிசையை 50 க்குக் கீழே குறைப்பதே அவரது பிரதான இலக்காகும்.
பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்காக விளையாட்டு அமைச்சு 8.2 மில்லியன் ரூபாவை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment