Sunday, April 21, 2024

இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஜனநாயகத்திருவிழா

உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றான இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலின்  முதல் கட்ட வாக்குப் பதிவு  நடந்து முடிந்து விட்டது. 120 தொகுதிகளின் மக்கள் தமது  எம்.பிக்களைத் தேர்வு செய்து விட்டனர்.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும்புதுச் சேரியிலும்  மக்கள் வாக்களித்து விட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணிகளு, சீமானின் வழிகாட்டலில் நாம் தமிழர் கட்சி  தனியாகவும்  போட்டியிடுகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது நான்கு முனைப் போட்டியாகத் தெரிகிறது.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சீமானின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள். ஆனால், வெற்றி பெற மாட்டார்கள்.நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நான்காம் இடத்தைப் பிடிப்பார்கள். சகலரும் கட்டுப் பணத்தை இழப்பார்கள்.

தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும்  மோடி, அடுத்த  பிரதமராவார் என்ரு சொல்கின்றன. முன்னரைப் போன்று பிரமாண்டமான வெற்றி கிடைக்காது எனவும்  கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.தமிழகத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பிரமாண்டமான வெற்றியைப் பெறும் எனக் கருத்துக் கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டின்  ஒரு தொகுதியிலாவது  தாமரை மலர வேண்டும் என  பாரதீய ஜனதாக் கட்சி என பாரதீய ஜனதாக் கட்சி பகீரத பிரயத்தனம் செய்கிறதுபிரதமர்  மோடி எட்டு முறை தேர்தல் பரப்புரை செய்தார். அமித்ஷா உட்பட எட்டு அமைச்சர்கள் தமிழகத்தில்  பிரசாரம் செய்தார்கள். ராகுல் காந்தி  ஒருநாள் விஜயம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை வாக்கு வங்கி சிதறியுள்ளது. பன்னீரும்,தினகரனும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைப் பறிப்பதில் பெரும் பங்கு வகிக்கப்போகிறார்கள். கட்சி தனது கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் எடப்பாடி இருக்கிறார்.

பாரதீய ஜனதாவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் எனவும்  கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதிகரிக்கப் போகும் வாக்குகள் பாரதீய ஜனதாவின்  வாக்கு அல்ல. தொகுதியில் பிரபலமான, செல்வாக்கு உடைய பாரிவேந்தர்,.சி.சண்முகம், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் வாக்குகளும், பாட்டாளி  மக்கள் கட்சியின்  வாக்குகளும் பாரதீய ஜனதாவின்  வாக்கு சத வீதத்தை உயர்த்தப் போகின்றன.

தமிழகத்தில்   தொலைக் காட்சி  நடத்திய ருத்துக் கணிப்பில் வெற்றி பெறும் வேட்பாளர், தோல்வியடையும் வேட்பாளர் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. 28 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும்,  11 தொகுதிகளில் கடும் சவால் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளதுசில தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பின்னுக்குத் தள்ளி பாரதீய ஜனதா  இரண்டாம்  இடத்தைப் பிடிக்கும் என்ற  அதிர்ச்சியும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகள்

கன்னியாகுமரி   தொகுதியில் விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், பாரதீய ஜனதா வேட்பாளர் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார்.

கன்னியாகுமரியில்    காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்பாரதீய ஜனதாவுக்குச் செல்வாக்கு அதிகம். இங்கு ரப்பர் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக மீன் பிடி தொழிலும், சுற்றுலாவும் அதிகமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். விஜய் வசந்த் இந்த முறை 34 முதல் 40 சதவீதம் வாக்குகள் பெறுவார். பாரதீய ஜனதாவின்    வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 31 முதல் 37 சதவீதம் வாக்குகள் பெறுவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்   பசலியன் நசரேத் 16 முதல் 22 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபர் 8 முதல் 11 சதவீதம் வாக்குகளை பெறுவார் என்றும் தொலைக் காட்சி  கணித்துள்ளது

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெறுவார்.

தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து சந்திரகாசன் [அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்],  வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி [ பாரதீய ஜனதாக் கட்சி],   ஜான்சிராணி [ நாம் தமிழர் ]ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 41 சதவீதம் 47 சதவீதம்வரை வாக்கு   கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகரில்  மீண்டும் போட்டியிடும்  காங்கிரஸ் எம்.பி  மாணிக்கம் தாகூர்  வெற்றி பெறுவார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், பாரதீய ஜனதாவின் சார்பில் ராதிகா ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

மாணிக்கம் தாகூருக்கு  39 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇரண்டாவது  இடத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 30 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும்   நடிகை ராதிகா 17 முதல் 23 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் எனவும், சீமானின் நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வாக்குகள் பெறும்.

சிவகங்கை தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்  மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதியில் கடந்த முறை திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்  ஆர். ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பரதீய ஜனதாவும்  இணைந்து கூட்டணியாக போட்டியிட்டன. இந்த முறை தனித்தனியாக களம் இறங்கி உள்ளன. நீலகிரி தொகுதியில் இந்த முறை  ஆர். ராசா 36 சதவீதம் முதல் 42 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 30 முதல் 46 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 21 முதல் 27 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சியின் ஜெயகுமார் 3 முதல் 6 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், மற்றவர்கள் 1 முதல் 3 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என்றும்தொலைக் காட்சியின்  கணிப்பில் கூறப்பட்டுள்ளது.  . ராமநாதபுரத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் .பன்னீர்ச்செல்வம் கரைசேர்வது கடினம்.

தென்சென்னையில் நான்கு டாக்டர்கள்  போட்டியிடுகின்றனர். திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் டாக்டர் ஜெயவர்தன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த  டாக்டர்  தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் வேட்பாளராக களம் காண்கிறார். நாம் தமிழர் வேட்பாளரும் டாக்டர்தான். தமிழிச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார்.

தருமபுரியில் அன்புமணியின் மனைவி செளமியா  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்  போட்டியிடுகிறார். வெல்வது கடினம்.  

வேலூர்தொகுதியின் எம்.பியான கதிர் ஆனந்த் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தாமரை சின்னத்தைல் .சி.சண்முகம்  போட்டியிடுகிறார். கடும் போட்டி நிலவும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு அதிகம்.

கோவையை சகலரின் கண்களும் உற்று நோக்குகின்றன. : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை களம் காணும் தொகுதி. கோவை குண்டு வெடிப்புக்குப் பின்னர் பாஜக வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துள்ளதாக நம்புகிறதுஅண்ணாமலை போட்டியிடுவதாக் இந்தியாவே எதிர் பார்ப்பில் உள்ளது. கடும்போட்டி நிலவும். அண்ணாமலைக்கு எதிராக இரண்டு திராவிடக் கட்சிகளும் வியூகம் வகுத்துள்ளன. அண்ணாமலைக்கு அக்கினிப் பரீட்சை.

2009-ல் பாஜகவின் செல்வகுமார் 37,909 வாக்குகள்தான் பெற்றார். ஆனால் 2014-ல் பாஜகவின் வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் (தற்போது ஆளுநர்) 3,89,701; 2019-ல் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளைப் பெற்றிருந்தார். இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி வலுவாக உள்ளது.


 கருத்துக் கணிப்புகள்  சொல்லும் செய்தி

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் தமிழக தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் திராவிடமுன்னேற்றக் கழக  கூட்டணியே 39 தொகுதிகளிலும் என்று  வெல்லும்  கூறியுள்ளன. சில கணிப்புகளில் ஒரிரு இடங்களில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வரும் என்று கணித்துள்ளன.

 தமிழ்நாட்டின் பிரபல செய்தி ஊடகமான தொலைக் காட்சி  தனது இரண்டாவது கருத்துக்கணிப்பினை   வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த  பெப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி, திமுகவின் வாக்கு சதவீதம் ஒரே அளவில் உள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், அதிமுக, பாஜகவின் வாக்கு சதவீதம் உயரும் என்றும் கூறியுள்ளது. அதேநேரம் கடந்த முறையைவிட இந்த முறை எடுத்த கணிப்பில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

 திமுகவிற்கு 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்  அதேநேரம் அதிமுகவிற்கு கடந்த பெப்ரவரி மாத நிலவரப்படி 30 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், ஏப்ரலில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாஜக கூட்டணிக்கு கடந்த பெப்ரவரியில் 13 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது ஏப்ரலில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரம் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறை 8 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் ஏப்ரலில் எடுத்த கணிப்பில் 5 சதவீதமாக சரிந்துள்ளதாக தொலைக் காட்சி  கணித்துள்ளது.

தமிழகத் தேர்தல் நிலைவரம்

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் (சுமார் 6.23 கோடி) உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்- 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467 பேர் ஆவர். இதில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் ஆவர். .

20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.

30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 29 லட்சத்து 263.

40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.

50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை - 1 கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.

60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.

70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களிக்க ஏற்ற வகையில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.  

தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 1.3 லட்சம் பொலிஸார்  ஈடுபடுத்தப்பட்டனர்மொத்தமாக  3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 1,58, 568 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனஅத்துடன் 81,157 கட்டுபாட்டு இயந்திரங்களும் 86,858 விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் அனைத்துக் கட்சிகள், சுயேச்சைகளைச் சேர்த்து மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-874 பேர், பெண்கள்- 76 பேர். மாற்றுப் பாலினத்தவர் ஒருவர் கூட இல்லை. மொத்த வேட்பாளர்களில் 606 பேர் சுயேச்சைகள்.

2019 மக்களவைத் தேர்தலில், மாநிலம் முழுவதும் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒவ்வொரு தேர்தலிலும் மாநகரங்களில் மிகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. குறிப்பாக சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 , 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகள் எட்டப்படவில்லை.

 இந்தியாவின்  எதிர்காலம் யாருடைய கையில் இருக்கும் என்பது   ஜூன் மாதம் 4 ஆம் திகதி தெரிந்து விடும்.

ரமணி

      

 

No comments: