ஐபிஎல் தொடரில் 17 இன்னிங்ஸ் முடிவில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்ஷன்
2023 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மாறினர். அந்த தொடரின் இறுதிப்
போட்டியில் 96 ஓட்டங்கள் குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்
பின் இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார்.
024 ஐபிஎல்
தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார் சாய் சுதர்ஷன். பஞ்சாப்
கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்தார். அதன் மூலம்
ஐபிஎல் தொடரில் 667 ஓட்டங்கள் அடித்துள்ளார். 17 இன்னிங்ஸ்களில் 667 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்
சாய் சுதர்ஷன். ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்கள் குவித்த
இந்திய வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்டை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார்
சாய் சுதர்ஷன்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீர், நான்காவது இடத்தில் திலக் வர்மா, ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். கம்பீர், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களை எல்லாம் முந்தியதோடு, அடுத்த தலைமுறையின் முக்கிய வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோரையும் முந்தி இருக்கிறார் சாய் சுதர்ஷன்.
ஐபிஎல் தொடரில் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள்
குவித்த இந்திய வீரர்கள் :
667 ஓட்டங்கள்
- சாய் சுதர்சன்
611 ஓட்டங்கள்
- ருதுராஜ் கெய்க்வாட்
565 ஓட்டங்கள்
- கௌதம் கம்பீர்
540 ஓட்டங்கள்
- திலக் வர்மா
530 ஓட்டங்கள் - ரோஹித் சர்மா
509 ஓட்டங்கள்
- தேவ்தத் படிக்கல்
505 ஓட்டங்கள் - ராகுல் ட்ராவிட்
No comments:
Post a Comment