மும்பை
இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 சிறுவர்கள்
நீதா அம்பானியுடன் சேர்ந்து டில்லிக்கு எதிரான மும்பையின்
போட்டியைகண்டு ரசித்தனர்.
மும்மையில்
உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற
20 வது லீக் போட்டியில் மும்பை
இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ்
அணிகள் விளையாடின. மும்பை
இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 சிறுவகள் வான்கடே மைதானத்தில்
அமர்ந்து நேரடியாக போட்டியை கண்டு ரசித்தனர். அவர்கள்
அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின்
உரிமையாளர் நீதா அம்பானி சார்பில்
அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஹர்திக் பாண்டியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கவே குழந்தைகளை
அழைத்து வந்து இருக்கின்றனர் என்ற
விமர்சனமுமெழுந்தது. ஆனால் உண்மை அதுவல்ல.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஒரு பிரிவான ரிலையன்ஸ்
அறக்கட்டளை ( Corporate
Social Responsibility ) மூலம்
அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு
(Education & Sports For All) என்ற
பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மும்பை
இந்தியன்ஸ் அணி ஆடும் ஒரு
போட்டியை காண ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அம்பானி
குழும நிறுவனங்களின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர்.
ஐபிஎல் டிக்கெட்கள் விற்கும் முன்பே குழந்தைகளை எந்தப் போட்டிக்கு அழைத்து வருவது என்பதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்து விடும். இச்சூழலில் தான் சுமார் 18,000 சிறுவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டியை நேரடியாக பார்ப்பதற்கு அழைத்து வந்திருக்கிறது ரிலையன்ஸ் அறக்கட்டளை.
No comments:
Post a Comment