Monday, April 29, 2024

டோனியின் ரசிகருக்கு 103 வயது

 ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு  உலகலாவிய ரீதியில் இலட்சக்ககக்கான இரசிகர்கள்  உள்ளனர். சென்னை அணியின்  போட்டி என்றால் மைதானமே மஞ்சள் நிறமாக மாறிவிடும். டோடியைப் பார்ப்பதற்காகவெ ரசிகர் படாளம் மைதானத்தை நீக்கிப் படையெடுக்கிறது.

ஆறிலிருந்து அறுபது வரை எனப் பொதுவாக வரையறை செய்வார்கள். சென்னையைச் சேர்ந்த 103 வயதான எஸ் ராம்தாஸ்  என்பவர் சென்னை அணியின் தீவிர ரசிகராவார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, நீரிழிவு நோயுடன் போராடும்  ராமதாஸ், சிஎஸ்கே விளையாடும்  ஐபிஎல் ஆட்டத்தைத்  தவறவிட்டதில்லை.

 1920ல் கோவையில் உடுமலைப்பேட்டையில் பிறந்தார். அவர் தனது பியுசியை முடித்துவிட்டு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ராணுவத்தில் ஏர்-ரைட் முன்னெச்சரிக்கை என்ற பிரிவில் இருந்தார். திருச்சியில் பணியமர்த்தப்பட்டார். அந்தக் காலத்திலும் கிரிக்கெட் விளையாடினார். “நான் 103 மூத்த வாலிபன். நான் வயதானவன் அல்ல. நான் மூத்த இளைஞன், நான் கிரிக்கெட்டை விரும்புகிறேன், நான் கிரிக்கெட்டைப் பார்க்கிறேன், ”என்று சூப்பர் ரசிகன் ராம்தாஸ் சமூக ஊடகங்களில் உரிமையாளரால் பகிரப்பட்ட வீடியோவில் கூறினார்.

சிஎஸ்கே ஜெர்சி அணிந்த ராம்தாஸ், இந்த சீசனுக்கு முன்பு சிஎஸ்கே கேபடன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் தோனியைப் பற்றி பேசும்போது உற்சாகமாக ஒலித்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகன், டோனி, ரவீந்திர ஜடேஜா  ,சுரேஷ் ரெய்னா ஆகியோரின் படங்களையும் காட்டினார், அதில் ராமதாஸ் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினார்.

எம்எஸ் டோனியைப் பார்க்க விரும்புகிறீர்களா என்றும் ராமதாஸிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், “ஆம். அவருக்கு (டோனி) நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் அழைக்கும்போது, நாங்கள் செல்ல வேண்டும். அவருடைய நேரத்திற்கு ஏற்ப நாம் செல்ல வேண்டும் என்றார்..

No comments: