இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி 526 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 526 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு மிகக் கடுமையான இலக்கு. பங்களாதேஷ் அணி இரண்டு இன்னிங்ஸிலும் 500 ஓட்டங்களை அடிப்பதே சந்தேகம். அப்படியான நிலையில் 526 ஓட்டங்களை நினைத்துப் பார்க்க முடியாது. மிகப் பிரமாண்டமான இலக்கு. ஆனால், அணித்தலைவர் மொஹமட் அஷ்ரபுல் சஹிட் அல் ஹசன், முஜிபுர் ரஹிம் ஆகியோர் இணைந்து இலங்கை அணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தனர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 387 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்றது அண்மையில்தான் நடைபெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை அடித்து பங்களாதேஷ் அணி வெற்றி பெற முடியாது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த உண்மை.
ஆனால், இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 413 ஓட்டங்கள் அடிக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் யாரும் எதிர்வு கூறவில்லை.
பங்களாதேஷûடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி தட்டுத்தடுமாறி 293 ஓட்டங்கள் எடுத்தது. அதில் அல்ஹசன் 70 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தினார்.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது இன்னிங்ஸில் விட்டதவறை திருத்திய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 405 ஓட்டங்கள் எடுத்தது.
மஹேல, சங்கக்கார, சமரவீர ஆகிய மூவரும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தனர். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பங்களாதேஷûக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுக்கவில்லை. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களின் முன்னால் இலங்கை அணி வீரர்களின் துடுப்பாட்டம் எடுபடவில்லை.
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்ட பங்களாதேஷ் அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தமது விஸ்வரூபத்தைக் காட்டி இல ங்கை அணியை மிரட்டினார்கள்.
தமிழ் இக்பால் முகமட் அஷ்ரபுல், சஹிட் அல் ஹுசேன், முஜிபுர் ரஹிம் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து தமது திறமையை வெளிப்படுத்தினர்.
மொஹமட் அஸ்ரபுல் 70 ஓட்டங்களுடனும் சஹிட் அல் ஹுசைன் 34 ஓட்டங்களுடனும் 5ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
பங்களாதேஷ் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஆறாவது இணைப்பாட்டமாக விளையாடிய மொஹமட் அஷ்ரபுல், சாஹிட் அல் ஹுசைன் ஜோடி இலங்கை அணியை சோதித்தது. மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் அஷ்ரபுல் 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சமிந்த வாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 193 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் 16 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 112 ஓட்டங்கள் எடுத்தனர்.
பலமான ஜோடியை பிரித்த சந்தோஷத்தில் இலங்கை அணி இருந்த வேளையில் களமிறங்கிய சஹிட் அல் ஹஜுசேன் முஜிபுர் ரஹீம் ஜோடி இலங்கை அணியை சோதித்தது.
இவர்கள் இருவரும் இணை ந்து 111 ஓட்டங்கள் எடுத்தனர். சஹிட் அல் ஹுஸைன் 96 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க முஜிபுர் ரஹீம் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில 413 ஓட்டங்கள் எடுத்தது. முரளிதரன் 141 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக சஹீட் அல்ஹசே செய்யப்பட்டார்.
100 ஓட்டங்கள்
மஹேல ஜயவர்த்தன 166, மொஹமட் அஷ்ரபுல் 101,
5 விக்கெட்டுகள்
சஹிட் அல் ஹுøஸன் 70/5, முரளிதரன் 49/6
சதத்தை தவறவிட்டவர்கள்: சமரவீர 90, சஹீட் அல் ஹுசேன் 96.
No comments:
Post a Comment