Tuesday, January 13, 2015

பெடரர் 1000


ரென்னிஸ் உலகின் சக்கரவர்த்தியான ரொஜர் பெடரர் 1000 ஆவது போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஏரிபி ரென்னிஸ் போட்டியில் விளையாடிய ரொஜர் பெடரர் தன்னை எதிர்த்து விளையாடிய மிலோஸ் ரொனிக்கை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப் படைத்துள்ளார்.

ஜிம்மி கோனோஸ் 1253 போட்டிகளிலும், இவான்லென்டி 1071 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 1000 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரனாக பெடரரின் பெயர் பதியப்பட்டுள்ளது. ஏடிபி போட்டியில் முதன் முதலாக சம்பியனாகியுமுள்ளார்.

பால்மணம் மாறாத பாலகனாகத் தோற்றமளித்த பெடரர் 1998 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் முதலாவது வெற்றியைப் பெற்றார்.

21 வயதில் 100 ஆவது வெற்றியைப் பெற்றார். எதிராளியைக் கலங்கடிக்கும் உத்தி அவருக்கு பெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. 17 கிராண்ட்ஸ்லாம் விருதுகளின் சொந்தக்காரனான பெடரர் தன்னை எதிர்த்து விளையாடிய அனைவரையும் தோல்வியடையச் செய்தார்.

பெடரரை எதிர்த்து விளையாடுபவர்கள் கொஞ்சம் அசந்தால் தோல்வியடைவது நிச்சயம். 2003 - 2004 ஆண்டு தோல்வியடையாது 36 போட்டிகளில் வெற்றிபெற்றார்.

1000 போட்டிகளில் 737 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 706 போட்டிகளில் வெற்றிபெற்று நடால் இரண்டாவது இடத்தில் உள்ளார். 125 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். 83 போட்டிகளில் சம்பியனானார்.

அன்டிமுரேயை அதிகபட்சமாக 21 முறை தோல்வியடையச் செய்துள்ளார். அடுத்த இடத்தில் இவானோவிச் உள்ளார். இவர் 19 முறை தோல்வியடைந்துள்ளார். 22 போட்டிகளில் ஐந்து செற்களில் விளையாடி வெற்றிபெற்றார். 737 முறை நேர் செற்களில் வெற்றி பெற்றார்.

2007 ஆம் ஆண்டு டேவிட் பெரரை வீழ்த்தி 500 ஆவது வெற்றியைப்பெற்றார். 210 அமெரிக்க வீர்ரர்களையும், 111 பிரான்ஸ் வீரர்களையும் தோல்வியடையச்செய்தார். புற்தரை மைதானத்தில் 131 வெற்றியைப் பெற்றுள்ளார்.

No comments: