ரஜினியின் படம் என்றால் விநியோகஸ்தர்களுக்கு ஒரே
கொண்டாட்டம்தான். ரஜினியின் பெயரைச்சொன்னாலே லாபம்தான். ஆனால் அண்மையில் ரஜினியின்
படங்கள் சொல்லும்படியான லாபத்தைக்கொடுக்கவில்லை. கோ ச்சடையான் நஷ்டம் என்பதை ரஜினியே
ஒப்புக்கொண்டார். லிங்கா லாபத்தைக்கொடுக்கவில்லைஎன்று விநியோகஸ்தர்கள் போராட்டம்
நடத்துகின்றனர்.
திரைப்படங்களின் வெற்றியை கொண்டாடும் விதிமுறை
இப்போது மாறிவிட்டது. வெள்ளிவிழா, என்பது
எட்டாக்கனவாக உள்ளது. 100 நாள் ஓடிவிட்டால் அது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
டீசரை அதிகம்பேர் பார்த்தால் படம் வெற்றியடைந்ததுபோல் விளம்பரம் செய்யப்படுகிறது. பாடல் வெளியிடுவதற்கு கோடிக்கணக்கில்
செலவு செய்யப்படுகிறது. தயாரிக்கப்பட்ட படம் மிகப்பெரிய வெற்றியடைந்துவிட்டது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அந்த மாயைமறைவதற்குமுன் அதிக லாபத்துடன் விற்கப்படுகிறது. இறுதியில் படத்தை
வாங்கிய விநியோகஸ்தர் தலையில் கையை வைக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தியாவில் 600 தியேட்டர்கள், வெளி
நாட்டில் 1000 தியேட்டர்கள் என கணக்கு காட்டுவார்கள் இறுதியில் நஷ்டம் என்று
போராட்டம் நடத்துவார்கள். முதல் முன்று நாட்கள் கூட்டம் அலைமோதும். பாலாபிஷேகம்,கற்பூர
ஆராதனை போன்ற கேலிக்கூத்துகளும்
அரங்கேறும்.
லிங்கா படத்தால் தமக்கு நஷ்டம் என தஞ்சை
விநியோகஸ்தர் சிங்காரவேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உட்பல பலர் சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் போராட்டம் செய்தனர்.லிங்காவால் நஷ்டம் இல்லையென்று வேந்தர் மூவீஸ் சிவா கூறியுள்ளார். இதனால் ரஜினியின் பெயருக்கு
களங்கம் ஏற்பட்டுள்ளது. கோச்சடையான் பட
விவகாரத்தால் லதாவின் சொத்து வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் படத்துக்கு மட்டுமல்லாது ஏனைய நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும் இதே
நிலைதான். நஷ்டக்கணக்கு காட்டி நஷ்ட
ஈட்டுக்காக விநியோகஸ்தர்கள் கையை நீட்டுவார்கள்.
கையை கடிக்காத வகையில் முதலீடுசெய்தால் நஷ்டம்
ஏற்பட வாய்ப்பு இருக்காது. நட்சத்திர நடிகர்கள் தமது சம்பளத்தை பாதியாக குறைத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.
No comments:
Post a Comment