Sunday, January 18, 2015

அவுஸ்திரேலியாவுக்கு இந்தியா, தென்ஆப்பிரிக்கா சவாலாக இருக்கும் இயன்சப்பல்




அவுஸ்திரேலிய முன்னாள் கப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான  இயன்சப்பல் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உலக  கிண்ண   போட்டியில் அவுதிரேலியாவுக்கு இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் அவுஸ்திரேலியா எல்லா வகையிலும் மேன்மையானதாக இருக்கிறது. ஆனால் இந்தியா பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து வகையிலும் சிறந்தது. இதனால் இந்த இரு அணிகளும் அவுஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக விளங்கும்.

மேலும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அணியாக நியூசிலாந்து உள்ளது. அந்த அணியின் கேப்டன் மேக்குல்லம் ஆக்ரோஷம் நிறைந்தவர்.

உலக கோப்பை போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி தேர்வு சில கேள்விகளை எழுப்பி உள்ளது. மிகப் பெரிய போட்டிக்கு எலக்ஸ் பின்னரை தேர்வு செய்யாதது தவறான முடிவாகும். சுமித்தை துணை கேப்டனாக நியமிக்காததும் சரியான முடிவு அல்ல. காலக் கெடுவுக்குள் கிளார்க் உடல் தகுதி பெறுவது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து முன்னாள் பிரபல வீரர் ரிச்சர்டு ஹேட்லி கூறும்போது, உலக கோப்பையில் விளையாட இருக்கும் நியூசிலாந்து நல்ல நிலையில் உள்ளது என்றார்.

உலக கோப்பை போட்டியை 23 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தும் ஆஸ்திரேலியா 4 தடவை (1986, 1999, 2003, 2007) சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. நியூசிலாந்து இதுவரை இறுதிப் போட்டி வரை நுழைந்தது கிடையாது.

உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர் தெண்டுல்கர். அவர் 9 முறை மேன்ஆப் தி மேட்ச் விருதை பெற்றுள்ளார்.

78 வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த விருதை பெற்றுள்ளனர். 7–வது வீரர் அடித்த அதிக ரன் 77 ரன் ஆகும். 1983–ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சதீத் மெக்பூர் இலங்கைக்கு எதிராக இந்த ரன்னை எடுத்தார்.

உலக கோப்பை போட்டியில் அதிக எக்ஸ்ட்ராக்களை கொடுத்த அணி ஸ்காட்லாந்து ஆகும். 1999–ம் ஆண்டு உலக கோப்பையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிராக 59 ரன்களை எக்ஸ்ட்ரா மூலம் கொடுத்தது.

உலக கோப்பை போட்டி 1975–ம் ஆண்டு அறிமுகம் ஆனது. ஆனால் அதற்கு 2 வருடங்களுக்கு முன்பே 1973–ல் பெண்கள் உலக கோப்பை போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து வென்றது.

No comments: