Thursday, January 15, 2015

பலோன் டிஓ விருது வென்ற ரொனால்டோ


ரொனால்டோ, மெஸி, மனுவல் நொயர் ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டனர். ரொனால்டோவுக்கும் மெஸிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது. உலகக்கிண்ண இறுதிப்போட்டி வரை தனது அணியை அழைத்துச் சென்றவர் ஆர்ஜென்டீனா அணியின் மெஸி. ரொனால்டோவுக்கும் மெஸிக்குமிடையேயான போட்டியில் ரொனால்டோ வெற்றி பெற்றார். பலோன் டிஓ விருதை 2008ஆம் ஆண்டு ரொனால்டோ பெற்றார். 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மெஸி பெற்றார். 2013ஆம் ஆண்டு மீண்டும் ரொனால்டோ விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து. இந்த ஆண்டும் விருதை தக்க வைத்துக்கொண்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக ரொனால்டோவும் மெஸியும் இந்த விருதை பங்கு போட்டு வருகின்றனர். ரொனால்டோ, நாட்டுக்காகவும் கழகத்துக்காகவும் 61 கோல்கள் அடித்துள்ளார். சம்பியன் லீக், கோபாகப், லாலிகா ஆகிய போட்டிகளில் 9 கோல்கள் அடித்துள்ளார். டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலையமைப்புகள் மூலம் 142 மில்லியன் விசிறிகள் இவரை பின்தொடர்கின்றனர். சிறந்த வீராங்கனைக்கான விருதை ஜெர்மனியின் நாடின் கெப்லர் தட்டிச்சென்றார். ஆண்டின் சிறந்த கோல் அடித்த வீரருக்கான விருதை கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வென்றார். சிறந்த பயிற்சியாளர் விருதை உலக கிண்ண சம்பியனான ஜெர்மனி அணியின் ஜோச்சிம் லோவ் கைப்பற்றினார். 


பிபா– 2014 உலக லெவன் அணி கோல்கீப்பர் மானுவல் நொயர் (பேயர்ன் முனிக் கிளப், ஜேர்மனி) தற்காப்பு வீரர்கள் - செர்ஜியோ ரமோஸ் (ரியல் மாட்ரிட்,, ஸ்பெயின்), டேவிட் லூயிஸ் (செல்சி, பாரிஸ் செயின்ட், பிரேசில்) தியாகோ சில்வா (பாரிஸ் செயின்ட், பிரேஸில்), பிலிப் லாம (பேயர்ன் முனிக்,ஜெர்மனி). மத்திய கள வீரர்கள் - இனியஸ்டா (பார்சிலோனா, ஸ்பெயின்), ஏஞ்சல் டி மரியா (ரியல் மாட்ரிட், மான்செஸ்டர், அர்ஜென்டினா), டோனி குரூஸ் (பேயர்ன் முனிக், ரியல் மாட்ரிட், ஜேர்மனி) முன்கள வீரர்கள் - அர்ஜென் ராபென (பேயர்ன் முனிக், நெதர்லாந்து), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட், போர்ச்சுகல்), மெஸ்சி (பார்சிலோனா, அர்ஜென்டினா).  ரியல் ஹீரோ கடந்த 2014இல் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணி முதல் சுற்றுடன் நடையைக்கட்டியது. இதில், ரொனால்டோ ஒரு கோல் மட்டுமே அடித்தார். அதேநேரம், தான் விளையாடிய ரியல் மாட்ரிட் கிளப் அணியின் ஹீரோவாக அவர் ஜொலித்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில், ரியல் மாட்ரிட் அணி 10ஆவது முறையாக கோப்பை வெல்ல கைகொடுத்தார். தவிர, கடந்த ஆண்டில் நடந்த 'சூப்பர் கோப்பை' கிளப் அணிகளுக்கான உலக கோப்பை போன்றவற்றில் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். 
தமிழ்மிரர்

No comments: