Showing posts with label மெக்ஸிகோ மொராக்கோ. Show all posts
Showing posts with label மெக்ஸிகோ மொராக்கோ. Show all posts

Friday, July 10, 2026

சிறந்த இளம் வீரர் விருது பட்டியலில் ஐந்து ஆப்பிரிக்க நட்சத்திரங்கள்


  உலகக்கிண்ண சிறந்த இளம் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அடையாளம் காணப்பட்ட 11 வீரர்களில் ஐந்து பேர் ஆப்பிரிக்கர்கள், இது இப்போட்டியில் அந்த கண்டத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 கிறிஸ்ட் இனாவோ ஓலாய் (ஐவரிகோஸ்ட்)

டியோமாண்டே இப்போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

19 வயதான லைப்சிக் முன்கள வீரர், குராசோவுக்கு எதிரான போட்டியில்  2-0 வெற்றி ஆட்டத்தில் ஒரு கோல் அடிக்க உதவியதுடன், தனது முதல் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் 10 முறை பந்தை கடத்திச் சென்று 10 கோல் வாய்ப்புகளை உருவாக்கிய இந்த நூற்றாண்டின் ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இப்ராஹிம் மாசா (அல்ஜீரியா)

அல்ஜீரியாவின் மாசா மூன்று குழுப் போட்டிகளிலும் இடம்பெற்றார்.  ஜோர்டானுக்கு எதிரான வெற்றியில் அவர் 'சிறந்த ஆட்டக்காரர்' என விருது பெற்றார். அந்த வெற்றி, அவரது நாட்டின் இடத்தை நொக்-அவுட் சுற்றுகளுக்கு உறுதி செய்தது.


அய்யூப் புவாடி (மொராக்கோ)

மொராக்கோவின் 18 வயது நடுக்கள வீரரான புவாடி, தனது நிதானம் , ஆட்டத்தை வழிநடத்தும் திறனால் அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் அட்லஸ் லயன்ஸ் அணி  போட்டிக்குத் தகுதி பெற்றது.

நெதர்லாந்துக்கு எதிரான தனது நாட்டின் நொக்-அவுட் சுற்று வெற்றியிலும் அவர் விளையாடினார். 79 நிமிடங்கள் விளையாடிய அவர், இரண்டு முறை கோல் அடிக்க முயற்சித்தார்.

இப்ராஹிம் மபாயே (செனகல்)

செனகல் விங்கர் மபாயே, இந்தப் போட்டியின் தொடக்கத்தில் பிரான்சுக்கு எதிராக கோல் அடித்ததைத் தொடர்ந்து, 18 வயது, 143 நாட்களில் உலகக்  கிண்ணப் போட்டியில்  கோல் அடித்த மிக இளைய ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

லமின் யமால்   (ஸ்பெயின்)

18 வயதான யமால், உருகுவேக்கு எதிரான ஸ்பெயினின் 1-0 வெற்றியில் முக்கிய பங்காற்றினார். கடுமையான தடுப்பாட்டத்தையும் மீறி, வெற்றி கோலை உருவாக்கிக் கொடுத்தார். சென்டர்-பேக் நிலையில் குபார்சியின் நிதானம் ஸ்பெயின் அணியின் தற்காப்புக்கு ஒரு தூணாகத் தொடர்கிறது.

கெரிம் அலாஜ்பெகோவிக் (போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா)

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்த 18 வயதான கெரிம் அலாஜ்பெகோவிக், தனது அணி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உதவியதன் மூலம்,   சிறந்த இளம் வீரர்களில் ஒருவராகவும் இடம்பெற்றார்.

இந்த அட்டாகிங் மிட்ஃபீல்டர், குழுச் சுற்றின் போது உலகக்  கிண்ண  வரலாற்றில் எட்டாவது இளம் கோல் அடித்த வீரர் ஆனார்.

ரயான் (பிறேஸில்)

19 வயதான போர்ன்மவுத் விங்கர், 1958-ல் பீலேவுக்குப் பிறகு உலகக்  கிண்ணப் போட்டியில்  கோல் அடிக்க உதவிய இளம் பிரேசிலியர் ஆனார்.

ஜோஹான் மன்சாம்பி (சுவிட்சர்லாந்து)

கனடாவுக்கு எதிரான சுவிட்சர்லாந்தின் 2-1 வெற்றியில் கோல் அடித்து, கோல் அடிக்க உதவினார். இதன் மூலம் இந்தத் தொடரில் தனது கோல்களின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.

லூக் டி ஃபௌஜெரோல்ஸ் (கனடா)

பெல்ஜிய அணியான FCV டெண்டருக்காக 31 தொழில்முறைப் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தபோதிலும், இந்த இளம் வீரர் ஏற்கனவே தனது நாட்டிற்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கனடிய தடுப்பாட்ட வீரரான இவர், தொடர்ந்து பந்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும்போது, அவரது நிதானம், திறமை மற்றும் உடல் வலிமை ஆகியவை வெளிப்படுகின்றன. மேலும், அவர் ஆடிய மூன்று போட்டிகளில் 18 தடுப்பாட்டப் பங்களிப்புகளையும் 12 பந்து வெளியேற்றங்களையும் பதிவு செய்துள்ளார்.

டி ஃபௌஜெரோல்ஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 32-வது சுற்றுப் போட்டியில் கனடா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் 32 நிமிடங்கள் விளையாடி, தனது நாடு 16-வது சுற்றுக்கு முன்னேற உதவினார்.

  2005  ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த சிறந்த வீரருக்கு  உலகக்கிண்ண  இளம் வீரர் விருது வழங்கப்படுகிறது.

 

ரமணி

12/7/26