Monday, June 26, 2023

பா.ஜ. கவுக்கு எதிராக களமாடும் தி.மு.க

திராவிட முன்னேற்றக் கழகம்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றிருந்த தமிழக அரசியலில் தன் இருப்பை பாரதீய ஜனதா அழுத்தமாகப் பதித்துள்ளது. ஜெயலலிதா  உயிருடன்  இருக்கும் வரை பம்மிக்கொண்டிருந்த பரதீய ஜனதா பன்னீரையும், எடப்பாடியையும் மோத விட்டு தான் நினைத்ததைச் சாதித்துள்ளது.

அமுலக்கத் துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ததால் அமைதியாக அரசியல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகவே  பாரதீய ஜனதாவுக்கு எதிராகக் களம்  இறக்கி உள்ளார். செந்தில் பாலாஜியின் மீதான விராசணைக்கு எதுவித தையும் இல்லை என தமிழக அறிவித்தது. அமுலாக்கத் துறையில் தொடர் விசாரணைகளால் அமைச்சர் நெஞ்சுவலியால் பாதிக்கபப்ட்டார்.  ஆவருக்கு  இதய மாற்று சிகிச்சை நடை பெற்றது.  ஆறு  வாரங்கள் வைத்தியர்களின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்க வேண்டும் ஆனால், அவரைக்  கைது செய்த அமுலாக்கத்துறை அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறுகிறது. மேலும்  மூன்று அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும் என தச்கவல்  வெளியாகியுள்ளது.

    அறிக்கை, காட்டமான பேட்டிகள், முக்கியப் புள்ளிகளின் கருத்துகள் மூலமாக மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு எதிர் வினையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் நேரடியாக  மோதிப் பார்க்கத் துணிந்துள்ளது.    சமூக வலைத்தளங்களில் அத்து மீறும்  பாரதீய ஜனதக் கட்சியைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த புகாரில், பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.க-வில் மாநில அளவில் பொறுப்பிலிருக்கும் ஒருவர், இந்த தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அவர் கைதைக் கண்டித்து, மதுரையில் நீதிபதி வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய மாவட்ட பா.ஜ.க தலைவர் உட்பட 43 பேர்மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய புகாரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல, கொலை மிரட்டல் புகாரில் பா.ஜ.க-வின் நெசவாளர் அணியின் மாநிலச் செயலாளர் மின்ட் ரவி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் ரெளடிகள் பட்டியலை மாவட்டவாரியாக எடுத்திருக்கிறது உளவுத்துறை. இதுவரை 124 ரெளடிகள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது 630 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கொலை, கொள்ளை, கடத்தல் எனக் குற்றப் பின்னணி கொண்டவர்களையெல்லாம் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைக்கத் தீவிரமாகியிருக்கிறது தமிழக காவல்துறை.

  பொருளாதாரக் குற்றப் பிரிவின் விசாரணையிலிருக்கும் ஆருத்ரா வழக்கை வேகப்படுத்தி, அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பா.ஜ.க நிர்வாகிகளைக் கைதுசெய்யவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஹரீஷ் என்பவருக்கும், பா.ஜ.க மாநிலத் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருக்குமிடையேயான தொடர்புகள் விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும். கைதிலிருந்து தப்பிப்பதற்காக, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் பா.ஜ.க பிரமுகரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷை இந்தியா கொண்டுவரும் முயற்சிகளும் நடக்கின்றன. விரைவிலேயே, ஆருத்ரா நெருப்பு கமலாலயத்தைப் பற்றும்.

மற்ற மாநிலங்களில் இதுவரை செய்ததுபோல இங்கேயும் செய்யப் பார்க்கிறது பா.ஜ.க. அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவது, ஆளுநரை வைத்துக் குடைச்சல் கொடுப்பது, ஊழல் கட்சி என முத்திரை குத்துவது    இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென எங்களுக்குத் தெரியும் என திராவிட முன்னேற்றக் கழக த்தினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.க தலைவர் காட்டும் வேகத்தைக் கண்டு அஞ்சுகிறது பா.ஜ.க.

மோடியப்பற்றி அவதூறாக பதிவிட்ட திராவிட மூன்னேற்றக் கழகத் தொண்டனை கண்டித்த தலைமைஒ அதை நீக்கும்படி  உத்தரவிட்டது. குஷ்புவைப் பற்றி கேவலமாக  பேசிய  பேச்சாளரை திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நீக்கியது.

 அண்ணாமலையின் தொடர் அடாவடிப் பேச்சையும், செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையையும் ஸ்டாலின் மிக சீரியஸாகப் பார்க்கிறேர்.  . இது டெல்லியின் ஆசியில்லாமல் நடக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இதுபோலப் பல தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பா.ஜ.க-வுடன் இனி அனைத்து வகையிலும் தீவிரமாக மோதுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.  ஆளுநரோ, அண்ணாமலையோ, அமலாக்கத் துறையோ, அமித் ஷாவோ யாராவது  வரட்டும் மோதிப் பார்க்கலாம் என்பதுதான் தி.மு.க-வின் இப்போதைய முடிவு. அண்ணாமலைக்கும், தமிழக பா.ஜ.க-வுக்கும் பாடம் புகட்டவேண்டிய நேரமும் வந்துவிட்டது  என்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். 

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது சைதாப் பேட்டை நீதிமன்றம். இந்தச் சூழலில், புதுக் கோட்டை மாவட்டம், கல்லாக் கோட்டையிலிருக்கும் டி.ஆர்.பாலு தரப்புக்குச் சொந்தமான மது ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். போகிற போக்கைப் பார்த்தால், நாளொரு சவால், பொழுதொரு மோதல் என நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ரணகளமாகும்போலத் தெரிகிறது தமிழகம்.

 தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழலைப் பயன்படுத்தி, அரசியல் களத்தில் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்குமிடையேதான் சண்டை என்பதுபோலவும், தி.மு.க-வுக்கு நிகராக பா.ஜ.க வளர்ந்துவிட்டதைப்போலவும் ஒரு மாய்மாலம் காட்ட நினைக்கிறார்கள் டெல்லியை ஆள்பவர்கள். இதில் அ.தி.மு.க என்கிற ஒரு பெரிய கட்சியை, பேசுபொருளாகவே இல்லாமல் ஆக்கும் வியூகமும் இருக்கிறது. ஜூன் 23-ம் திகதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க-வும் கலந்துகொள்ளவிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி ஒன்று திரள ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தி.மு.க-வை ஓர் ஊழல் கட்சியாக முத்திரை குத்துவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம். அவர்களின் திட்டத்துக்கு ஏற்றாற்போல, செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளும் அமைந்துவிட்டன.

2ஜி  குற்றச் சாட்டின்  போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஊழல் புகார்  சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில்   குற்றச் சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவ்வில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்,  பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான  மோதலால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில்    தமிழக அரசியல் கள நிலமை மிகவும் சூடாகும்.

No comments: