Monday, June 12, 2023

பொருத்தமற்ற தலைவர்களை வெளியேற்ற வேண்டும்


 

அரசாங்கத்தை கோருகிறது. மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்

அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்லும் எந்தவொரு முயற்சியையும் முறியடிப்பதாக உறுதியளிக்கிறது

சமுதாயத்தில் சீர்கேட்டை உருவாக்க ஆட்சியாளர்கள் கைகோர்த்து செயல்படுகின்றனர்

மக்களின் குரல்களை செவிமடுக்கும் வகையில் தேர்தலை நடத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களுக்கான நல்லதைச் செய்யப்போவதாக உறுதியளித்து பதவியைப் பெறும்  அரசியல்வாதி காலப் போக்கில் மக்களை மறந்து விட்டு, தனது குடும்பம்,சுற்றம், உற்றார், உறவு, நட்பு ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கக  வாழத்தலைப் படுவார்கள். அப்போது அவர்கள் மக்களை மறந்து விடுவார்கள்.

கட்டானை புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர்மேலும் தெரிவிக்கையில் "உடனடியாக தேர்தல் நடத்தி மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்," என்று அவர் கூறினார். மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்லும் எந்தவொரு முயற்சியும் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசத்தின் தற்போதைய தலைவர்கள் சட்டத்தை சீர்கேடாக மாற்றுவதற்கும், சமூகத்தை வழிதவறச் செய்வதற்கும் நெருக்கமாக ஒத்துழைத்து, நாட்டை ஆளுவதற்கு தகுதியற்ற நபர்களாக மாற்றுகிறார்கள் என்று கார்டினல் மேலும் தெரிவித்தார்.

“இன்று, நாட்டின் தலைவர்கள் நீதியை அநீதியாக மாற்றவும், ஆட்சியை சர்வாதிகாரமாக மாற்றவும், சட்டத்தை மதிக்கும் சமூகத்திலிருந்து சட்டமற்ற நிலைக்கு இட்டுச் செல்லவும் கைகோர்த்து செயல்படுகிறார்கள். எனவே, அத்தகையவர்களை வெளியேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு நாம் தயாராக வேண்டும். இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆள தகுதியற்றவர்கள். அவர்களை வெளியேற்ற வேண்டும்,'' என்றார்.

பொருத்தமற்ற தலைவர்களை வெளியேற்றும் போராட்டம் இலங்கையில் கடந்த ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.

No comments: