Tuesday, June 20, 2023

25 கிண்ணங்களுடன் முதல் இடத்தில் அவுஸ்திரேலியா


 இங்கிலாந்தின் இலண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் தரவரிசை நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த அவுஸ்திரேலியா உலகின் 2வது டெஸ்ட் சம்பியனாக சாதனை படைத்தது.

கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா வெற்றிகரமான அணியாக ஜொலித்து வருகிறது. முன்னதாக 1980களில் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று அசுரனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீழ்ச்சிக்குப்பின் 1987இல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த அவுஸ்திரேலியா 1999, 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த 3 ஹட்ரிக் உலக கோப்பைகளை வென்ற முதல் அணியாக இன்றும் சாதனை படைத்துள்ளது.

2005, 2009 வருடங்களில் சாம்பியன்ஸ் டிராபி, 2021 டி20 உலக கோப்பையும் வென்ற அந்த அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் வென்றுள்ளதால் சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான உலகக் கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளது. அத்துடன் 9 சாம்பியன் பட்டங்களுடன் ஒட்டுமொத்த ஆடவர் கிரிக்கெட்டில் அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை அவுஸ்திரேலியா தொடர்ந்து தக்க வைத்துள்ளது. 2வது இடத்தில் இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் (தலா 5) ஆகியன  உள்ளன.

 அவுஸ்திரேலிய  மகளிரணி ஆடவருக்கு முன்னோடியாக 1978லயே உலக கோப்பையை வென்று விட்டது. அது போக மகளிர் ரி20 உலக கோப்பை, ஆடவர் அண்டர்௧9 உலகக்கோப்பை என உலகிலேயே மொத்தமாக 25 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி என்ற சரித்திர உலக சாதனையையும் தற்போது அவுஸ்திரேலியா படைத்துள்ளது.

 

1. 1978 மகளிர் உலகக் கோப்பை

2. 1982 மகளிர் உலகக் கோப்பை

 3. 1987 ஆடவர் உலகக் கோப்பை

4. 1988 மகளிர் உலகக் கோப்பை

 5. 1988 ஆடவர் அண்டர்௧9 உலக கோப்பை

6. 1997 மகளிர் உலகக் கோப்பை

7. 1999 ஆடவர் உலகக் கோப்பை

 8. 2002 அண்டர்௧9 ஆடவர் உலகக் கோப்பை

9. 2003 ஆடவர் உலகக் கோப்பை

10. 2005 மகளிர் உலகக் கோப்பை

11. 2006 சாம்பியன்ஸ் டிராபி

12. 2007 ஆடவர் உலகக் கோப்பை

13. 2009 சாம்பியன்ஸ் டிராபி -  

14. 2010 மகளிர் டி20 உலக கோப்பை

15. 2010 அண்டர்௧9 உலக கோப்பை

16. 2012 மகளிர் டி20 உலக கோப்பை

 17. 2013 மகளிர் உலக கோப்பை

18. 2014 மகளிர் டி20 உலக கோப்பை

19. 2015 ஆடவர் உலகக் கோப்பை

20. 2018 மகளிர் டி20 உலகக் கோப்பை

 21. 2020 மகளிர் டி20 உலக கோப்பை

22. 2021 ஆடவர் டி20 உலக கோப்பை

 23. 2022 மகளிர் உலகக் கோப்பை

24. 2023 மகளிர் டி20 உலக கோப்பை

 25. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்*

 

No comments: