கதாநாயகனுக்கு இணையாக நடித்த நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். திரைப்படத்தில் மட்டுமல்ல கூட்டமாக இருந்து கதைகும் போதும் அவர் வாயில் இருந்து வரும் காமெடிக்குப் பஞ்சமிருக்காது. கவுண்டர் என்றால் செந்திலும் இணைந்தே வருவார். இருவரும் சுமார் 450 படங்களில் நடித்துள்ளனர். இன்னொரு வாழைப்பழம், பெட்ரோமாக்ஸ் போன்ற பல வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. தேர்தல் காலத்தில் "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்ற மீம்ஸ் வைரலாகும். கVஉண்டமணியும், சத்தியராஜும் சேர்ந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும்.
கவுண்டமணியும் செந்திலும் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள்
இன்றுவரையில் தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் பிரபலமாயுள்ளன.அன்றைய நாட்கள்
குறித்து நினைவுகூர்ந்த நடிகர் செந்தில், வெறும் ஐயாயிரம் ரூபா சம்பளத்துடன் நடிக்கத்
தொடங்கி மக்களின் மனதில் இடம்பிடித்ததுவே பெரிய மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல்
அளித்த செந்தில், தனது நடிப்பு வாழ்வில் கவுண்டமணி இணைபிரியாத பாத்திரம் என்றும் தெரிவித்துள்ளார்
இலட்சம் சம்பளம் பேசப்பட்டபோதும்
அன்று ஐந்தாயிரம் சம்பளம் எடுத்து லட்சம் ரசிகர்களை பெற்ற நிலை இல்லை என தெரிவித்த
செந்தில். டிஜிட்டல் சினிமா இன்று எடுக்கப்படுகின்றது . அன்று பிலிம்ரோலில் சினிமா
எடுக்கப்பட்டபோது, அதிக தடவை நடித்து யார் பிலிம்ரோலை வீணாக்குவது என்று தயாரிப்பாளர்
கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்ட சுவாரசியமான அனுபவத்தையும் அவர் நினைகூர்ந்தார். “எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர், கவுண்டமணி ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி.” இவ்வாறு கூறும் நடிகர் செந்தில், அந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான்’ என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காரில் கவுண்டமணி படபிடிப்புக்குச் செல்வார் வருவார் என்ற செய்தி பலருக்கும் தெரியும், ஆனால் அவர் ஏன் அப்படி வந்தார் என்பதைப் பற்றி பலருக்கும் தெரியாது. கவுண்டமனி ஆரம்பத்தில் நடிக்க வந்த போது, பெரிய நடிகர்கள் என்றால் நல்ல காரில் அனுப்புவார்களாம். இவரை எல்லாம் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு வண்டியில் ஏற்றி விடுவார்களாம், இதனால் கவுண்டமனி சில நாட்கள் கோபத்தில் வீட்டிற்கு நடந்தே வருவாராம்.இதை பார்த்த ரஜினி ஒரு நாள் கவுண்டமணியுடன் சேர்ந்து நடந்து வந்த போது, ஒரு நாள் பாருங்க நீங்க வாரத்திற்கு 7 விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீர்கள் என்றாராம், அவர் சொன்னது கவுண்டமணி விஷயத்தில் அப்படியே நடந்தது.
கமல் நடிப்பில் வெளியான
சிங்கார வேலன் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதில் கவுண்டமனி செய்யும்
காமெடிகள் செமையாக இருக்கும்.அப்படி இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, கவுண்டமணியிடம்
ஒருவர் அண்ணே இப்பட்த்தில் செந்தில் இல்லையா? என்று கேட்க, அதற்கு கவுண்டமணி சிவப்பு
செந்தில் கமல் இருக்காரே என்று கூறினாராம்.இதை அறிந்த கமல், கவுண்டமணி மன்னிப்பு கேட்டால்
தான் நான் படப்பிடிப்பிற்கே வருவேன் என்று கூறிவிட்டாராம், பிறகு இந்த செய்தி கவுண்டமணி
காதுகளுக்கு வந்துள்ளது.உடனே அடுத்தநாள் பலரும் கூடியிருந்த கூட்டத்தில் கவுண்டமணி
கமல் சார் உங்களை சிவப்பு செந்தில் என்று சொன்னதற்கு மன்னித்துவிடுங்கள் என்று வெளிப்படையாக
கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கமல், என்ன செய்வது என்று தெரியாமல் அட விடுங்கண்ணே
என்று சமாளித்ததாக கூறப்படுகிறது
கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவின் மச்சான் வேடத்திற்கு கவுண்டமணியை வேண்டவே வேண்டாம் என்கிறார் பரதிராஜா. படத்துக்கு அந்தாள போட்டோம் சரி இந்த படத்துக்குலாம் அவன் வேண்டாம்யா,முடி இல்லாம சொட்டைத் தலையோட நல்லாருக்கமாட்டான்யா" என பாரதிராஜா சொன்னார். ஆனால் அஸிஸ்டெண்ட் டைரக்டர் பாக்யராஜ் விடாடிப்பிடியாக அந்த கேரக்டருக்கு கவுண்டமணியை பரிந்துரைக்க முதன்முறையாக ஒரு பெரிய கேரக்டர் கவுண்டமணிக்கு கிடைக்த்தது.
எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும்
நையண்டி சி மேன்ஷனில் கவுண்டமணி, சங்கிலி முருகன் ,கல்லாப்பெட்டி சிங்காரம் ,செந்தில்
,பாக்யாராஜ் என அனைவருமே ஒன்றாக தங்கியிருந்தார்கள்.இதில் பாக்யராஜை தவிர மற்ற அனைவருமே
நாடக நடிகர்கள். பின்னாளில் பாக்யராஜ் பெரிதாக ஜெயித்த பிறகு இவர்கள் எல்லாரையுமே தன்
படத்தில் பயன்படுத்தினார். கிழக்கே போகும்
ரயிலில் கவுண்டமணி பெரிதாக பேசப்பட பாக்யராஜின் கணிப்பு இங்கு சரியாகிறது.அதை தொடர்ந்து
பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாவிலும் கமலின் ஆபிஸில் குமாஸ்தாவாக கவுண்டமணி
நடித்தார்.
இதன்பிறகு திரும்பவும் பாரதிராஜாவின் நான்காவது படைப்பான புதிய
வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ் ஹீரோ.
இதில்தான் கவுண்டமணிக்கு ஒரு எக்ஸட்ரானரி கேரக்டரை பாரதிராஜாவும்
பாக்யராஜீம் உருவாக்கியிருப்பார்கள்.
இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் கவுண்டமணி ரசிகர்கள் எல்லாருமே
ஓர்தடவை புதிய வார்ப்புகள் கவுண்டமணியை ஒருதடவை பாக்கனும்.
அதன்பிறகு பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில்
வரும் காளியண்ணன் கேரக்டர் இன்னும் கவுண்டமணியை ஒருபடி மேலே எடுத்துச் சென்றது.முக்கியமா
சரோசா
என்ன டெய்லர்
குப்ப கொட்ரியா
ஆமா டெய்லர்
கொட்டு கொட்டு
என்கிற வசனம் அவ்வளவு கவுண்டமணிக்காகவே
எழுதப்பட்டது போல இருக்கும்.அவருக்கும் காஜா ஷெரீப் க்கும் இருக்கும் சின்ன சின்ன சண்டைகள்
இன்னும் நன்றாகவே வொர்கஅவுட் ஆகியிருக்கும்.அதற்கு முக்கிய காரணம் கவுண்டமணியின் வசனங்கள்.
இங்கே
பதினாறு வயதினிலே,கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள்,சுவரில்லாத
சித்திரங்கள்,பயணங்கள் முடிவதில்லை
என ஆரம்பகால கவுண்டணியின் படங்களில் அற்புதமான நகைச்சுவை கலந்த
ஒரு நல்ல குணச்சித்திர நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.அக்கால கவுண்டமணியை ரசிப்பதென்பது
இன்னும் அலாதியாகவே இருக்கும்.
அதன்பிறகே சிலவருடங்கள் கழித்து கவுண்டமணிக்கு செந்தில் என்னும்
ஓர் இணை கிடைத்து சகாப்தம் படைக்கிறார்கள்.அதிலும் என்னதான் காமெடியன் என்றாலும் கதையில்
ஓர் முக்கிய கேரக்டராகவே இருந்திருப்பார்.அதற்கு சின்னக்கவுண்டர் படத்தில் அவருக்கென
வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஓர் உதாரணம்.
100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட
கால் நூற்றாண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நய்யாண்டித்தன நகைச்சுவையாலும்
ஆட்சி செய்தவர், நடிகர் கவுண்டமணி. வயது பேதமில்லாமல், எல்லோராலும் கொண்டாடப்பட்ட வெகுசில
கலைஞர்களில் ஓர் அதிசயக் கலைஞர். இளம் வயதிலேயே நாடகங்கள், திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும்,
கிட்டத்தட்ட நடுத்தர வயதை எட்டும்போதுதான் கவுண்டமணிக்கு சரியான வாய்ப்புகள் வரத்தொடங்கின.
நாகேஷ் நடித்த `சர்வர் சுந்தரம்' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், எம்.ஜி.ஆர் நடித்த
`கண்ணன் என் காதலன்’ படத்தின் மூலம்தான் திரையில் `நட ஸ்டேஷனுக்கு!' என்ற தனது முதல்
வசனத்தைப் பதிவு செய்தார், கவுண்டமணி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின்
இருபெரும் துருவங்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த '16 வயதினிலே' படம்தான்
கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. அதில், அவர் பேசிய 'பத்த வெச்சிட்டியே
பரட்ட' வசனம் கொண்டாடப்பட்டது. பிறகுதான், கவுண்டமணிக்காகவே தனியாக காமெடி டிராக்ஸ்
உருவாக்கப்பட்டது.
கவுண்டமணியோடு இணைந்து நடிக்கும் கதாநாயகர்களெல்லாம் தவறாது சொல்லும்
ஒரு விஷயம், கவுண்டமணியின் டைமிங் சென்ஸ். காட்சியைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது
கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் அந்தளவிற்குக் கச்சிதமாக இருக்குமாம். அதேசமயத்தில், எப்பேர்ப்பட்ட
கதாநாயகர்களுக்கும் கவுண்டமணியுடன் நடிப்பதென்றால் சற்று பயம்தான். காரணம், காட்சி
படமாகிக் கொண்டிருக்கும்போதே கவுண்டமணி ஏதாவது கவுன்டர் அடித்துவிட, கதாநாயகர்களும்
அடக்க முடியாமல் சிரித்து விழ, அந்த ஷாட் மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமாம்.
கூடவே, கவுண்டமணி என்னதான் வயதில் மூத்தவராக இருந்தாலும், எல்லா இளம் கதாநாயகர்களுக்கும்
ஈடுகொடுத்து நடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருவகையில் பார்த்தால், அதுதான்
கவுண்டமணியின் வெற்றி.
ஆரம்ப காலங்களில் தனியாகவே நகைச்சுவை செய்து கொண்டிருந்த இவர், பின்னாள்களில் செந்திலுடன் இணைந்து பட்டையைக் கிளப்பினார். 80, 90-களிலிருந்து, இன்றுவரை... கவுண்டமணி - செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின் பொக்கிஷக் கூட்டணியாக இருக்கிறது. கதாநாயகர்களைத் தாண்டி, இவர்களது கூட்டணி மிகப்பெரிய வியாபார வாய்ப்பாகப் பார்க்கப்பட்ட காலமும் இருக்கிறது. 80-களிலிருந்து, 90-களின் இறுதிவரை பல படங்களின் பெயர்கள், தற்போதைய இளவட்டத்தின் நினைவுகளில் தேங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இந்தக் கூட்டணிதான்.
No comments:
Post a Comment