Monday, June 12, 2023

கஜேந்திரகுமார் கைது மிரட்டலா? பழிவாங்கலா?


 சிங்கள அரசியல் தலைவர்களூக்கு குடைச்சல் கொடுப்பவர்களில்  கஜேந்திரகுமார்  மிக முக்கியமானவர்.தினமும் ஏதோ ஒரு தலைப்புச் செய்தியில்    அவர்  பெயர் அடிபடும்.  கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.இந்தக் கைது விவகாரம் மிரட்டல பழிவாங்கலா என்ற வாதப் பிரதிவாரம்   நடை பெறுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை     கொள்ளுப்பிட்டியிலுள்ள வீட்டில்     கிளிநொச்சியிலிருந்துசென்ற பொலிஸ் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டார்.

 மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், பொலிஸாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் மக்கள் சந்திப்பொன்றை பாராளுமன்ற உறுப்பினர் நடத்த முயற்சித்திருந்தார். பரீட்சை நிலையத்திற்கு அருகில் மக்கள் சந்திப்பை நடத்துகின்றமை குறித்து, பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ்உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர். கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்ட  அன்றே ,ஒரு மாலையில்  கிளிநொச்சி நீதிமன்றத்தினால் ஐந்து இலட்சம் சரீரப்  பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


      எதிர்க் கட்சித்தலைவர் சஜித்  பிறேமதாச,சிரி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்  கக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணித்  தலைவர் மனோகணெசன், சிறி லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன்  பெனார்ன்டோ,ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற  உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன ஆகியோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.   ஆளும் கட்சி உறுப்பினர்கள்  கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை ஆளும் தரப்பு  உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய அரசாங்கமும் காவல்துறையினரும் காட்டிய அவசரத்தை டயனா கமகே விடயத்தில் ஏன் காண்பிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்தப்படுகிறதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் இரட்டை குடியுரிமை விவகார வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து பிற்போடப்படுகிறது. முறைகேடான முறையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ள விவகாரத்தில் டயனா கமகேவை கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரை இதுவரை கைது செய்யாததற்கான காரணம் என்ன?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு அரசும் காவல்துறையினரும் காட்டிய அக்கறை மற்றும் அவசரம் டயனா கமகே விவகாரத்தில் ஏன் காண்பிக்கப்படவில்லை?” எனக் கேட்டார்.

அரசாங்கத்துகு எதிரான  போராட்டங்களை வடக்கில் இருந்து கிழக்கு வரை முன்னெடுத்து வருகிறார் கஜேந்திரகுமார்.அவருடைய  போராட்டங்களை அரசாங்கம் இரசிக்கவில்லை. தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தினர்.அவருடைய  போராட்டங்களுக்குத் தடை ஏற்படுத்த விரும்பிய அரசாங்கத்துக்கு ஒரு துரும்பு கிடைத்துள்ளது.பரீட்சை நிலையத்தைச் சாட்டக அவைத்து கஜே தமிழ்  அரசியல் கட்சிகளுகிடையில் தனி ஆவர்த்தனம் செய்பவர் கஜேந்திரகுமார். பொலிஸ் அவரைக் கைது செய்து  பரபரப்பை உருவாக்கி விட்டது. சரிந்திருந்த கஜேந்திரகுமாரின் செல்வாக்கை  பொலிஸார்  சற்று உயர்த்தியுள்ளனர்.ந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.

No comments: