Sunday, June 25, 2023

முன்னாள் உலக சம்பியனை வீழ்த்திய ஸிம்பாப்வே


 இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண  தகுதிச் சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகளை எதிர்த்து விளையாடிய ஸிம்பாப்வே  35  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய்ச் சுழற்சியில்  வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஸிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்கள் சேர்த்தது.

ஸிம்பாப்வே அணியின் ராஸா 68, ரயான் புர்ல் 50 ஓட்டங்கள் எடுத்தனர்.

 268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மேற்கு இந்தியா  44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்கள் எடுத்தது.

ஸிம்பாப்வேக்கு எதிராக ஏழு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.  இதுவரை 50  ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இது ஸிம்பாப்வே அணிக்கு  11வது வெற்றியாகும்.

ஓமானை வீழ்த்திய  இலங்கை

உலக கிண்ண‌ தகுதி சுற்று ஸிம்மாப்வேயின் புலவாயோ ,ஹராரே ஆகிய இடங்களில் நடந்து வருகிறது 11வது லீக் ஆட்டத்தில் ஓமனை எதிர்கொண்டது இலங்கை. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை  ஓமானை துடுப்பெசுத்தாடும்படி பணித்தது.

30.2 ஓவர்ககளில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங் கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்களான கருணாரத்னே  பதும் நிசாங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 15 ஓவர்களில்  விக்கெட்  இழப்பின்றி 100 ஓட்டங்கள் அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஹசரங்க  5 விக்கெட்டுகளை எடுத்தார். இதற்கு முன்னால் நடந்த போட்டியில் ஹசரங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது

 

விளையாட்டு,கிறிக்கெற்,ஸிம்பாப்வே,மேற்கு இந்தியா,இலங்கை,ஓமான்

No comments: