ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதில் இருந்து பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகிறார். அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகளால் ஜனாதிபதிப் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அரசியல் தந்திரங்கலில் ஊறிப்போன ரணிலுக்கு இது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட
உள்ளூராட்சித் தேர்தல் பற்ரி இப்போது யாரும் கதைப்பதில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் தமது பலத்தை
நிரூபிக்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு நெருக்கடி கொடுக்கபப்ட்டால் அவர் பாராளுமன்றத்தைக்கலைஒத்து விடுவார் என்ற செய்ர்தி
கடந்த வாரம் முக்கியத்துவம் பெற்றது. ஆட்சியை
கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து
நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள்
குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும்,
இதனால் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை
கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவேளை
பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன்
இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க
மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும்
என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை, மொட்டுக் கட்சியினருக்கு
அமைச்சுப் பதவி மீது ஆசை. இப்படிப் பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி தற்போது பிளவடைந்துள்ளது.
மக்கள் ஆணையை இழந்த ரணில் - மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது. இது
வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணிலை மிரட்டுவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமையான சங்கதிதான்.இன்ரைய
நிலையில் தேர்தலுக்கு முகம் கொடுக்க மொட்டுக் கட்சிதயாராக இல்லை. இதனை நன்கு தெரிந்துகொண்ட ரணிலும் தன்பங்குக்கு
மொட்டுக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார். அமைச்சுப் பதவி வேண்டும் என மிரட்டிய மொட்டுக் கட்சியினர் அடங்கி
ஒடுங்கிப் போயுள்ளனர்.
ஜனாதிபதி ரணிலின் கரத்தைப் பலப்படுத்தப்போவதாக அறிக்கை விட்டுள்ளனர்.
மிரட்டல் அரசியல் சரிவராது என்பதனால் இணக்க அரசியலுக்கு மாறிவிட்டது மொட்டுக் கட்சி.
சில தொழிற்சங்கங்களும், தமது கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள்
சிலரும் அரசாங்கத்தின் கொள்கையில் முரண்படுவதாக பஷில் தெரிவித்துள்ளார். ரணிலுன்ட இனங்கிப் போவதன் சாதக சமிக்ஞையாக இதனைக் கருதலாம்.
ஆனால்,இது உறுதிமொழியல்ல சந்தர்ப்பவாத அரசியல். சந்தர்ப்பவாத அரசியலைக் கற்றுத் தேர்ந்த
ரணிலுக்கு முன்னால் இது எடுபடாது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் மொட்டுக் கட்சிக்கு பலத்த அசியாக இருக்கும்,ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதென்பது சந்தேகமே. இப்போதைக்கு ரணிலுடன் இணைந்து போவதைத் தவிர வேறு மார்க்கம் மொட்டிக் கட்சிக்கு இல்லை.
No comments:
Post a Comment