இலங்கை அரசியலில் அண்மைக் காலமாக 13 ஆவது திருத்தச் சட்டம் பேசுபொருளாகி உள்ளது. ஜனாதிபதி ரணில் 13 ஐ கையில் எடுத்துள்ளார்.அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 1987 ஆம் ஆண்டே தாமிழளர்களாலும் , சிங்களவர்களாழும் நிராகரிக்கப்படட 13 க்கு ஒடிஸிசன் கொடுக்க ரணில் முயற்சிக்கிறார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நே
சர்வகட்சி மாநாட்டை க் கூட்டி ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட் டைத் தெரிவித்தார்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும்
தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம்
எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித்
திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப்
பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும்
அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய
ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம்
பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும்,
இதனை பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் அ திகாரம் வேண்டும்
என்பதே தமிழ் அரசியல்வாதிகள் நிலைப்பாடு . பொலிஸ் அதிகாரம்
இல்லை என்கிறார்ரானில். இன்று பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பலர் 13 ஐ தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு திரிபு
படுத்துகின்றனர்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 1987 இல் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்றும் அது தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டம் பிரிவினை வாதத்தை உருவாக்கும் என்பது சரத் வீரசேகரவின்
கண்டுபிடிப்பு. அவருடைய கருத்துடன் பல சிங்களத் தலைவர்கள் ஒத்துப்போகின்றனர். 13 க்கு ரணில் உயிர் கொடுக்க
முயற்சிக்கிறார். சிங்களக் கடும் போக்குவாதிள் 13 ஐ மிக
கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இந்தியா மறந்து போன 13
ஐ ஞபகப்படுத்தி தமிழ் த் தலைவர்கள் இந்திய மத்திய அரசுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்கள். தமிழக முதல மை ச் சராக ஸ்டாலிளின்
பதவி ஏற்ற பின்னர் ஒரு நினைவுக் கடிதத்தை
அனுப்பினார்கள். அங்கிருந்து ஒரு சத்தமும் இங்கு வரவில்லை.
இலங்கையில் நடவ்த்து இனப்படுகொலையை இல்லையா என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் பட்டிமன்றம்
நடத்துகிறார்கள். இவ்த்தை விலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் தமிழ் மக்கள் சந்தோஷப் படமுடியாது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமித்
ஷா இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார். தமிழக வாக்குக்காக சொன்ன அமுத ஷா தேர்தல் முடிந்ததும் மற ந்துவிடுவார்.
ஜனாதிபதித் தேர்தல்வரை
13 வண்டி ஓடும்.
No comments:
Post a Comment