சதுரங்கத்தில் 2750 புள்ளிகளைக் கடந்த இளம் வீரர் என்ற பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறார் தமிழக வீரர் டி.குகேஷ். அதோடு உலகத் தரவரிசையில் 11-வது இடத்தையும் பெற்றுள்ளார். சமீபத்தில் துருக்கியில் ஜூலை 9 முதல் 20 வரை நடைபெற்ற சதுரங்க சூப்பர் லீக் 2023 போட்டியில் Türk Hava Yollari Spor Kulübü என்ற அணியில் விளையாடினார் குகேஷ்.
10
சுற்றுகளில் விளையாடி ஒரு சுற்றில் கூட தோற்காமல் 7.5 புள்ளிகள் பெற்றார். அவர் இறுதிச்
சுற்றில் கிராண்ட் மாஸ்டர் கிளெமெண்டி சிச்சேவை வென்று 2750 புள்ளிகள் என்ற இலக்கைத்
தாண்டினார். மேலும் இந்திய வீரர்களில் 2750 புள்ளிகளைக் கடந்த மூன்றாவது வீரராகியிருக்கிறார்
குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த் ,ஹரிகிரிஷ்ணா பெண்டேலா இவர்களுக்கு அடுத்து குகேஷ்தான்
2750 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறார்.
2750
என்ற புள்ளிகளை மேக்னஸ் கார்ல்சன் தனது 17 வருடம் 4 மாதம் என்ற வயதில் கடந்தார். குகேஷ்
தனது 17 வருடம் 1 மாதம் 3 வாரம் என்ற வயதில் 2750 புள்ளிகளைக் கடந்து இளம் வயதில்
2750 புள்ளிகளைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் உலகத் தரவரிசையில் 11-வது இடத்திற்கு வந்துள்ளார். தற்போது முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இந்திய வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது குகேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் சில புள்ளிகள் எடுத்தால் இந்தியாவின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் அவர் பிடிக்கலாம்.
No comments:
Post a Comment