உலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கும் அத்தியாவசியப் பொருட்கள்ல் ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது.காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருட்கள், தேனீர்க் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் பைகள் கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றன.
இலகுவாகக் கிடைக்கும் பிளாஸ்ரிக்கினால் உலகம் மாசடைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் உலக்ர்ங்கும்
பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.மழைகாலங்களில் வெள்ளம் தங்குவதர்கும், நீரோட்டம் தடைப்படுவதற்கும் பிளாஸ்ரிக்
முக்கியமானதாக உள்ளது. குறைந்த விலையில்
கிடைக்கும் பிளாஸ்ரிக்கை அழிப்பது இலகுவானதல்ல.
பிளாஸ்ரிக் பொருட்கள்
எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு சில நொடிகளில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு
பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது
கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.பிளாஸ்டிக்
என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது
அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.பிளாஸ்டிக்
என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக்
கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.
பிளாஸ்ரிக் மாசுபாட்டை
கட்டுப்படுத்துவதற்காக ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடன் இணைந்து அம்பாறையிலும் , கொழும்பிலும் இரண்டு அதிநவீன
Baling தளங்களை நிறுவுகிறது. இந்த மூலோபாய ஒத்துழைப்பு மாதத்திற்கு 25,000 கிலோகிராம்
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அவசர சிக்கலைச் சமாளிப்பதை
நோக்கமாகக் கொண்டுள்ளது. குழுமத்தின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பொறுப்பான
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதே முதன்மை இலக்காகும் என்று ஹேமாஸ்
கூறியதுடன், அதன் இறுதி நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவுகளை ஈடுகட்ட வலுவான அர்ப்பணிப்புடன்,
ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடனான இந்த கூட்டாண்மையை தங்களது முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க
மைல்கல்லாக கருதுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொறுப்புடன் அகற்ற வேண்டும்.
இந்த இரண்டு பேலிங் தளங்களில் முதலீடு செய்வதன் மூலம், நிறுவனம் அதன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், தேசிய தன்னார்வ விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) முயற்சிக்கு தீவிரமாக ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் ஒரு வட்ட பொருளாதார மாதிரியை வளர்ப்பதிலும், கழிவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதிலும், பொருட்கள் மற்றும் பொருட்களின் பயனுள்ள ஆயுளை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். கூடுதலாக, இரண்டு தளங்களை நிறுவுவது சுற்றியுள்ள சமூகங்களுக்கு, குறிப்பாக கழிவு சேகரிப்பவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும்.
No comments:
Post a Comment