நிலவைப் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி உணவு கொடுக்கும் நடைமுறை இன்றைக்கும் உள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்கு
ரஷ்யா முதலில் களம் இறங்கியது.ரஷ்யாவுடன் போட்டி
போடும் அமெரிக்காஅவின் பார்வையும் நிலவின் பக்கம் திரும்பியது. ரஷ்யாவும், அமெரிக்காவும் பல தோல்விகளைச் சந்தித்தன. நிலவில் மனிதனை இறக்கி அமெரிக்கா புதிய வரலாறு படைத்தது. ரஷ்யா அமெரிக்கா ஆகிய இஅரண்டு வல்லரசுகலும் நிலவைத் தேடிப்
போனதால் இன்னொரு வல்லரசான சீனாவும் நிலவை ஆராயப்
புறப்பட்டது. நான்காவது நாடாக இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின்
லூனா 2 விண்கலமே முதலில் நிலவைச் சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
விண்வெளி ஆய்வுகள் மறைமுக பனிப் போராக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் 'ஸ்புட்னிக் 1' எனும் முதன்
முறையாக மனிதரால் தயாரிக்கப்பட்ட கலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி புவியைச்
சுற்றிவர செலுத்தப்பட்டதும், 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்போல்லோ
11 விண்கலத்தின் முதல் நிலவு தரையிறக்கம் ஆகியவை இந்தத் துவக்கக்காலத்தின் எல்லைகளாக
பலமுறை கருதப்பட்டன. சோவியத் விண்வெளி திட்டமானது அதன் பல மைல்கற்களை சாதித்தது, அதன்
முதல் உயிருள்ள ஜீவராசியை 1957 ஆம் ஆண்டு புவி சுற்றுப்பாதையில் இட்டது, முதல் விண்வெளியில்
பயணித்த மனிதர் (யூரி காகரின் வாஸ்டாக் 1 இல் பயணித்தார்) 1961 ஆம் ஆண்டிலும், முதல்
விண்வெளி நடை 1965 ஆம் ஆண்டிலும் (அலெக்ஸி லியோனவ்னினால்) 1966 ஆம் ஆண்டில் மற்றொரு
வானுலக முக்கியப் பகுதியில் தானியங்கிமுறை தரை இறங்கியது மற்றும் 1971 ஆம் ஆண்டின்
முதல் விண்வெளி நிலையத்தின் துவக்கம் (சல்யூட் 1) போன்றவற்றை அதில் உள்ளிட்டிருந்தது.
1990 ஆம் ஆண்டுகளிலிருந்து
தனியார் துறையும் விண்வெளி சுற்றுலாவாண்மையை மேம்படுத்தவும் அதன் பிறகு நிலவிற்கான தனியார் விண்வெளி பயணத் திட்டத்தையும் துவங்கின
2000 ஆம் ஆண்டுகளில்,
சீனா மனிதர் இடம் பெற்ற விண்வெளி பயண திட்டத்தை வெற்றிகரமாக துவங்கியது. அதே போல, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ,இந்தியா ஆகியவையும் எதிர்காலத்தில் ம்மனிதர்களை
விண் வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் பார்வை
இப்போது செவ்வாயை நோக்கித் திரும்பி உள்ளது. ] சீனா,
ரஷ்யா, ஜப்பான் , இந்தியா ஆகியவை 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவிற்கு மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்காக பரிந்துரைத்துள்ளன. அதே போல ஐரோப்பிய ஒன்றியமும் 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவு ,செவ்வாய் ஆகிய இரண்டிற்கும்
மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்கு பரிந்துரைத்துள்ளன
இந்தியா
அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் ஏனைய நாடுகள் செலவிட்ட திகையை விட முகக்கு
குறைந்ததாகும். இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
இஸ்ரோவின்
இந்த சாதனை முயற்சியைத் தான் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுள்ளனர்.
சந்திரயான்௩
விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் நிலவின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
கடந்த
சில நாட்களாக இணையத்தில் நிலா தொடர்பான தேடல்கள் அதிகரித்துவருகின்றன. சந்திரன் தொடர்பான உங்களுக்குத் தெரியாத பத்து விஷயங்களை இங்கே சொல்கிறோம். ந்திரயான்௩
செயற்கைக்கோள் சென்றடைந்த நிலவின்
தென் துருவப் பகுதி மிகவும் வியப்பை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க
விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றின்படி, இந்த பகுதியில் பல ஆழமான குழிகளும்
மலைகளும் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி, சூரிய ஒளி பல பில்லியன் ஆண்டுகளாக
அந்த நிலப்பரப்புகளை அடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
விண்வெளியில்
இந்தியா புதியதொரு சரித்திரத்தைப் படைத்துள்ளது. உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம்
திரும்பி உள்ளது.
No comments:
Post a Comment