இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் தமது பலத்தைக் காட்ட தமிழக அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் அரசியல் செய்கிறார் எனக் குற்றம் சாட்டிய திராவிட முன்னேற்றக் கழகம் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
நீட்
தேர்வை அகற்றக் கோரி மத்திய அரசையும், , தமிழக ஆளுநரையும் கண்டித்து திராவிட முனேற்றக் கழக இளைஞர் அணி, மாணவர்
அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் வருகிற 20ஆம் திகதி அந்தந்த
மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை
மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகார போக்கில் உள்ள மத்திய
அரசையும் இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து
இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை
செய்து கொண்டார். அந்த துக்கம் தாளாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இது
மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், நீட் தேர்வை ஆதரிக்கும்
ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.
அதே ஆகஸ்ட் 20 ஆம் திகதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு மதுரையில் ந்டைபெற எற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என பெயர் வைக்கப்பட்டுள்ள
நிலையில் மேடை அமைப்பது, பந்தல் அமைப்பது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருபெரும் கட்சிகளின் மாநாடும், உண்ணாவிரதப் போராட்டமும் தமிழக அரசியலில் கவனம் பிடித்துள்ளன.
எடப்பாடியால் வீழ்த்தப்பட்ட ஓ. பன்னீர்ச்செல்வம் தாந்து பலத்தை நிரூபிப்பதற்காக சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அறிவிப்பு விடுத்துள்ளார். தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, பாத யாத்திரை நடத்துகிறார். பெரும் செலவில் நடத்தப்படும் பாதயாத்திரை வெற்றியளிக்கவில்லை. பாதயாத்திரையா கரவன் பவனியா என்ற விமர்சனமும் எழுந்துளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் திருப்பி அனுப்பி விட்டார். இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டதால், சட்டப்படி அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட்
தேர்வில் சித்தியடைந்த வைபவம் ஆளுநர் மாளிகையில்
நடந்தபோது நீட் மசோதாவுக்கு கையெழுத்திடாதது
ஏன் என பெற்றோர் ஒருவர் கேட்ட போது " கையெழுத்திட மாட்டேன்" எனத் திமிராகப் பேசினார்.
ஆளுநரின் பதிலை ஒட்டு மொத்த தமிழக மக்களும்
ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதீய ஜனதா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன மெளனம் காக்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சியின் விசுவாசியான
ஆளுநரின் பதிலுக்கு அந்தக் கட்சி வருத்தப்பட
மாட்டாது.
நீட்டுக்கு
எதிரான , நீட்டை விரும்பாத தமிழக மக்களின்
வாக்கைப் பெறும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அமைதியாக இருக்கும் அரசியலை மக்கள் அறிவார்கள்.
மதுரையில்
நடைபெறும் அண்ணா திராவிட முன்னெற்றக்
கழக மாநாட்டுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மதுரையில்
போராட்டம் நடத்தப்பட்டது.குறிப்பிட்ட ஒரு
சமூகத்தின் பாதுகாவலனாக எடப்பாடி
தன்னை வெளிப்படுவத்தை
எதிர்த்து நடைபெற்ற போராட்டம்
கவனம் பெற்றுள்ளது.
முக்குலத்தோர்
தேசியக் கழகம் என்ற பெயரில் மதுரையில்
ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ''தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா
நகருக்கு வராதே'' என எடப்பாடி
பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்றொரு அமைப்பு
சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி
பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளது. மதுரையில்
ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி
பழனிசாமிக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள்
கிளம்பினாலும் கூட மாநாடு நடைபெறும்
மதுரை புறநகர் பகுதி விழாக்கோலம்
பூண்டுள்ளது.
மதுரையில்
நடக்க உள்ள அதிமுக மாநாட்டிற்காக
எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறாராம். இதற்கான
ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே
இந்த மாநாட்டிற்கான ஜோதி ஓட்டம் சென்னையில்
இருந்து தொடங்கி நடந்து வருகிறது.
அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக,
அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை
உணர்த்தும் விதமாக மதுரையில் அவர்
பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக
கூறப்படுகிறது.
மதுரையில்
நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம்.
எடப்பாடி என்றால் கொங்கு மண்டல
தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது.
அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
கிட்டத்தட்டஇரண்டு லட்சம் பேர் இந்த
கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது தொண்டர்களின் தொகை இரண்டுகோடி எனவும்
எடப்பாடி அறிவித்துள்ளார்.
கார்களில் மட்டும் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம். எடப்பாடி கூட்டம் நடத்தும் அதே நாளில் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ பன்னீர்செல்வம் நடத்துகிறார். அதே நாளில் கோவையில் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட உள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம். அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment