Wednesday, August 2, 2023

ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்டவுண் ஆரம்பம்


 பரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான ஒரு வருட கவுண்ட்டவுன்   கடிகாஅரத்தை போர்ட் டி லா போர்டோனாய்ஸில்  ஈபிள் கோபுரத்துக்கு  அடியில், ஒமேகா தலைவரும் தலைமை நிர்வாகியுமான ரெனால்ட் அஸ்க்லிமன், தனது இரண்டு சிறப்பு விருந்தினர்களின் உதவியுடன், டைமரை இயக்கினார்.  சுவிஸ்  நாட்டைச் சேர்ந்த  ஒமேகா நிறுவனம்  விளையாட்டுகளின் அதிகாரப்பூர்வ நேரக் கண்காணிப்பாளர்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் , பாரிஸ் 2024 தலைவர் டோனி எஸ்டாங்குவெட் ஆகியோர் கலந்துகொண்டனர். 

பகலில் தெரியும் , இரவில் ஒளிரும், வகையில்  உருவாக்கப்பட்ட கவுண்ட்டவுன் கடிகாரம் பரிஸ் 2024 சின்னத்தில் இருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது, ஒரு தங்க வட்டத்தால் சூழப்பட்ட மையச் சுடர் வடிவமைப்பு.

  1932 ஆம் ஆன்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ கடிகாரமான விளங்கும்   ஒமேகாவின் 31வது கவுண்டவுணை ஆரம்பித்துள்ளது. 90 ஆண்டுகளுக்கும் மேலாக   விளையாட்டு வீரர்களின்   துல்லியமான முடிவுகளை ஒமேகா   உறுதிசெய்துள்ளது, அதனால் ஒமேகா ஒலிம்பிக் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 

No comments: