இந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்த I-N-D-I-A [இந்தியா] கூட்டணியால் பாரதீய ஜனதாக் கட்சி திர்ந்துபோயுள்ளது. வாஜ்பாய்,அத்வானி என்ற இரட்டைத் தலைமையால் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதாக் கட்சி. மோடி, அமித் ஷா எனும் இரட்டைத் தலைமை இன்று அசைக்க முடியாத கட்சியாக மிளிர்கிறது. மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சிகளை உடைத்து அரசியல் செய்யும் பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்ட எதிர்க் கட்சிகள் கைகோர்த்துள்ளன.
வட இந்தியாவில் குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாவுன் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. பஞ்சாப், மேற்குவங்கம், பீகார், மகாராஷ்டிரா, மணிப்பூர், டெல்லி போன்ற மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கு சரிந்துள்ளது. குஜராத், உத்தரப் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை நம்பியே பாரதீய ஜனதா இருக்கிறது. காங்கிரஸின் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி உதயமான பிறகு, பல மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் பலவீனமாக உள்ளது. தென்னிந்தியா முழுக்க பாஜகவின் தடமே தெரியவில்லை. அதுவும் தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர, பாஜக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இல்லாத கட்சிகள். அண்ணாமலைக்கும் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உரசல் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவைப் பற்றி அண்ணமலை அவதூறாகப் பேசியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒன்பது இருக்கிறது.
ஆனாலும், இப்போதே கூட்டணி அமைப்பதற்கான வியூகமும், இணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவதற்கான
செயல்திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் உருவாகியுள்ளது ரொம்ப ரொம்ப முக்கியமானது. தேசியக் கட்சிகளில்
ஒன்றான காங்கிரஸுடன் மாநிக கட்சிகள் படணம் செய்யாது என பாரதீய ஜனதா கணக்குப்
போட்டது. மோடியை பிரதமர் பதவியில் இருந்து
அகற்றுவதற்காக பலம் வாய்ந்த எதிர்க் கட்சிகள்
காங்கிரஸுடன் சேர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்குள்
இருக்கின்ற பல்வேறு முரண்பாடுகளை அடையாளம் கண்டு அதைச் சரிசெய்து கொள்ளுவதற்கான நிறையக்
கால அவகாசம் இருப்பதால், கூட்டணியை இன்னும்
வலுப்படும்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குரலில் மக்களின் முன்பாக எடுத்துவைக்கும் விசயம்
மிகமிக வெளிப்படையாக இருக்கிறது. உதாரணமாக, இந்த 'இந்தியா' கூட்டணி என்ன சொல்கிறது
என்றால் 'நாங்கள் அனைவரும் ஒன்று அல்ல; எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால்
அவற்றைக் கடந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படைக் காரணத்திற்காக நாங்கள் ஒன்று
சேர்ந்திருக்கிறோம். குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமான
நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்' என்று
அவர்கள் வெளிப்படையாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
'இந்தியா' கூட்டணியில் வேற்றுமை என்பது பெரிய விசயமே இல்லை. அவர்கள்
ஒன்றிணைவதற்கான விசயங்கள் என்ன என்பதைப் பற்றித்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
இவர்கள் ஒன்றிணைந்ததன் மூலம் கிடைத்துள்ள வெற்றி
வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த எதிர்க்கட்சிகளின்
பலமான ஒற்றுமையால்தான் இன்றைக்கு இரண்டு அவைகளையும் ஒத்திவைக்கவேண்டிய சூழல் ஒன்றிய
அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியால் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு
நிலைமை தீவிரமாகி இருக்கிறது. குறிப்பாக 2019க்குப் பிறகு வந்த ஒவ்வொரு நாடாளுமன்றக்
கூட்டத்தொடரிலும் 30 முதல் 40 மசோதாக்கள் எந்தவிதமான விவாதங்களும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த நாடாளுமன்றம் இன்றைக்கு நடத்தவே முடியாத
அளவுக்கு எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், அவர்களின் ஒற்றுமை.
இதுவே பாஜக ஆட்சியில், மீண்டும் ஜனநாயகத்தை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள
முயற்சிக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.
இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கே இதனால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கூட INDIA VS NDA என்பதில் NDA என்பதை National defenders of adani என்று புதிய விளக்கத்தை முன்வைத்து வருகிறார்கள். அது மிக அழகாக இருக்கிறது. ஆகவே, எப்படிப் பார்த்தாலும் Nda மீதான விமர்சனங்கள் கூர்மை அடைந்திருக்கிறது.
பல மாநிலங்களில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பலம் பெற்று வருகின்றன.
உதாரணமாக தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி பலமானதாக இருந்தது. ஆனால், விரைவில் நடைபெற
உள்ள தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கான முழு பலத்துடன் இருக்கிறது.
அதேபோல இடதுசாரிகள் 'இந்தியா' கூட்டணியில் இருப்பதால், கேரளாவில் அந்தக் கூட்டணி பலம்
பெற்றுவிடுகிறது. தமிழ்நாட்டில் திமுகதான் ஆளும் கட்சி. அது 'இந்தியா' கூட்டணியில்
இருப்பதால் இந்த மாநிலத்திலும் 'இந்தியா' கூட்டணிக்கு இயல்பாகவே பலம் கூடியுள்ளது.
அதைப்போலக் காங்கிரஸ்தான் இப்போது கர்நாடகாவில் ஆளும் கட்சி. ஆக, அங்கேயும் 'இந்தியா'
பலம் பெறுவது இயற்கை. இதில் வராமல் இருப்பது ஆந்திரா மட்டும்தான். அங்கே யாரை அழைப்பது
என்பதில் தடுமாற்றம் நிலவுகிறது. சந்திரபாபு நாயுடுவை அழைப்பதா? ஜெகன்மோகன் ரெட்டியை
அழைப்பதா? அதிலும்கூட ஜெகன்மோகன் சகோதரி மீண்டும் காங்கிரசுடன் இணைந்துவிட்டார். ஆகவே,
அங்கே போட்டி ஜெகன்மோகனா? அல்லது சந்திரபாபு நாயுடுவா? என்பதுதான் போட்டி. அங்கே பாஜக
என்ற கட்சிக்கு இடமே இல்லை. ஆகவே அதுவும்கூட 'இந்தியா' கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக
உள்ளது. ஒருவேளை இரண்டு பேர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றாலும் அவர் பாஜக கூட்டணிக்குச்
செல்ல வாய்ப்பு இல்லை. காரணம், வரும் தேர்தலில் பாஜக 100 இடங்களைத் தாண்டாது என்றே
பலரும் கணித்து வருகிறார்கள்.
வாஜ்பாய்- அத்வானி காலத்தில் என்.டி.ஏ. கூட்டணி அடைந்த தோல்வியைவிட,
இந்தத் தேர்தலில் மோடி- அமித்ஷாவின் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் தோல்வியைச் சந்திக்கும்
என்கிறார்கள். ஆகவே இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்திக்கப்போகின்ற பாஜகவுடன் நிச்சயம்
பல மாநிலக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்குப் பின் இணைய வாய்ப்பே இல்லை" என்கிறார் ஆய்வாளர்கள்.
இந்தியா கூட்டணி வெற்றி
பெற்றால் பிரதமர், துணை பிரதமர் பதவிக்கு அடிதடி
ஏற்படும் என பாரதீய ஜனதா கருதுகிறது.பிரதமர்
பதவிக்கு ஆசைப்படவில்லை என காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். ஆம் ஆத்மி, திரிணாமுல்
காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. சமீபத்தில் நடந்த
இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார்,
மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின்
இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. முதல் கூட்டம்
பீகார்.. இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின்
கூட்டணியான இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இந்த
நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக
சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. பாஜகவிற்கு இது கடும் அழுத்தத்தை கொடுத்து
உள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிகள் நெருக்கம் ஆகி வரும் நிலையில் இப்போதே அதில் துணை பிரதமர் பதவிக்கு அடிபோட டாப் தலைவர்கள் சிலர் முயன்று வருகிறார்களாம். அதன்படி ஒருவேளை லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் நிதிஷ் குமார் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் பிரதமர் பதவியில் ஆசை இல்லை என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஏற்கனவே நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆசை இருப்பதாக தேசிய அரசியல் பேச்சு உள்ளது. நிதிஷ் குமார் பிரதமர் ஆகும் பட்சத்தில் பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் பதவிக்கு ஒரு பக்கம் போட்டி உள்ள நிலையில் இப்போதே துணை பிரதமர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன. அதன்படி மாநில அளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் சில மாநில தலைவர்கள் துணை பிரதமர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக கூறப்படுகிறது. துணை பிரதமர் பதவி என்பதற்கு பெரிதாக அதிகாரப்பூர்வ பவர் எதுவும் இல்லை. ஆனாலும் தேசிய அரசியலில் இது இமேஜை உயர்த்தும், எதிர்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் வரும் என்பதால் இப்போதே சில மாநில தலைவர்கள் துணை பிரதமர் பதவிக்கு அச்சாரம் போட முயன்று வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மாநில அளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் சில மாநில தலைவர்கள்தான் இந்த துணை பிரதமர் பதவிக்கு காய் நகர்த்துவதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன.
No comments:
Post a Comment