ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் நம்பிக்கைக்குரியவரான யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புட்டினுக்கு ஆதரவாக உலகெங்கும் பல இரகசியத் தாக்குதலகளை நடத்திய வாக்ன கூலிப்படைத் தலைவர் பிரிகோஜினின் மரணம் விபத்து என்று சொல்லப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னர்
புட்டினை எதிர்த்து மொச்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படை நகர்ந்தது. பெலாரஸ் ஜனாதிபதி
தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். மொஸ்கோ மீதான தாக்குதலைக் கைவிட்டு பெலாரஸுக்குச் சென்றார்
மாஸ்கோவிற்கு வடக்கே விபத்துக்குள்ளான விமானத்தில் வாக்னர் குழுமத்
தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், அவரது தளபதி டிமிட்ரி உட்கின் ஆகியோர் இருந்தனர் என்று
ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.விபத்து நடந்த
இடத்தில் இதுவரை எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று றீஆமாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று [23] மாலை நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளில்
பிரிகோஜின், [62], வாக்னர் கமாண்டர் உட்கின்,[ 53], ஆகியோர் அடங்குவர் என்று வாக்னர்
குழுமத்துடன் இணைந்த டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது. ஆனால், வாக்னர் குழுமத் தலைவரின்
மரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக வாக்னர்
குழு புரட்சி செய்த இரண்டு மாதங்களின் பின்னர் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாக்னர் குழுவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது. பிரகோஜின் அதற்கு உடன்படவில்லை. வாக்னர் குழுக்கும் ரஷ்ய இராணுவத்துக்கும் முறுகல் நிலை தோன்றியது. பிரகோஜினுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி பகிரங்கமாகக் கருத்துச் சொன்னார். "துரோகி,முதுகில் குத்திவிட்டார்" என புட்டின் புலம்பினார்.
ரஷ்யாவுக்கு எத்கிரான வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்களை கொலை செய்வது,
வெளிநாட்டு போர்களில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்வது போன்ற பணிகளை வாக்னர் அமைப்பு
செய்து வந்தது. இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின்
1999 ௨009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில், உளவு பிரிவுகளில் வேலை பார்த்து
இருக்கிறார்.பின்னர் பிரிகோஜின் தலைவரானார்.
இவர் புட்டினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புட்டினின் உணவு தயாரிப்பாளராகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரகோஜினின் மரணத்திற்கு
பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது.
இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் பலியாகிவிட்டார். பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே
உலுக்கி உள்ளது. பிரகோஜினின் புரட்சியை புட்டின் விரும்பவில்லை என இந்த
விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர்.
புட்டினை எதிர்த்தால் புட்டின் கொன்றுவிட்டார்
என்று அமெரிக்க ராணுவ, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி
கொடுத்து வருகின்றனர்.
தமது நாட்டுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த பிரிகோஜின் மீது ரஷ்ய இராணுவம் கடும் கோபத்தில் உள்ளது. இது விமான விபத்து அல்ல திட்டமிட்ட சதி என சிலர் க ருதுகிரார்கள். புட்டின் அனுமதி இல்லாமல் எதுவும் நட்ந்திருக்காது . பிரகோஜினுக்கு ஆதரவான யோடு ரஷ்ய ராணுவம்தான் பிரிகோஜினை தீர்த்து கட்டி உள்ளது. ரஷ்ய ராணுவம் பிரிகோஜின் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை. ரஷ்யாவின் விமானப்படை தளபதி செர்கோய் கடந்த புதன்கிழமை காலையில் அவர் நீக்கப்பட்ட இரவே பிரிகோஜின் மரணம் அடைந்தது சந்தேகத்தை தருகிறது. ரஷ்யாவின் ராணுவம் மூலம் மிஸைல் ஏவி பிரிகோஜின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது. இவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. புட்டின் இதில் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. எனவே பிரிகோஜின் சாகவில்லை. வேறு எதோ செய்வதற்காக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். பிரிகோஜின் செத்து இருக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்த வேளை வாக்னர் கூலிப்படை முன்னணியில் இருந்தது. உக்ரைனின் பிரதான நகரங்களை வாக்னர் கூலிப்படை கைப்பற்றியது உகரைன் போரில் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்னர் படையில் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வாக்னர் கூலிப் படை போலர் உலகம் முழுக்க இப்படி பல தனியார்
கூலிப்படைகள் உள்ளன. இராணுவ வீரர்களுக்கு அதிக சம்பளம்
கொடுத்து பணிக்கு அமர்த்துவார்கள். கொலை செய்வது, ஆட்சியை கவிழ்ப்பது என்பன இவர்களின் முக்கிய பணி. திட்டம்
போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி
ஒரு கும்பல்தான் இந்த வாக்னர் குழு இந்த கும்பல் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமானது
. க ரஷ்ய இராணுவத்தால் செய்ய முடியாததை இவர்கள் மறைமுகமாக செய்வார்கள். 2017 கணக்குப்படி இந்த குழுவில் மொத்தம் 6000
பேஎர் இருப்பதா அதெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவும், உலகின் பல நாடுகளும் வாக்னர் குழு போன்ற கூலிப்படைகளைத் தடை செய்துள்ளன. லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா
போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை
, அரசியல் தலைவர்களை அழிக்க வாக்னர்
குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ௨018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு
ஜனாஅதிபதி பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக வாக்னர் குழு செயற்பட்டது. 2014ல் கிரிமியாவை உக்ரைனில் இருந்து பிரிப்பதர்கு
வாகனர் குழு கருவியாக இருந்தது.
ரஷ்யாவில் பொம்மை ஆட்சியைக் கொண்டு வருவதற்காக சி.ஐ.ஏ, பிரிகோஜினை உசுப்பிவிட்டதாக ரஷ்யா கருதுகிறது. மொஸ்கோவை முற்றுகையிட பிரிகோஜின் முயன்றபோது அவர் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க மாட்டார் எனக் கருதப்பட்டது. அதனை நிஜமாக்குவது போல் விமான விபத்தில் பிரிகோஜின் மரணமானார்.
அவரின் மரணத்திற்கு பின்
ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் எண்மற்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைக்கப்பட்ட சமூக
ஊடகங்கள் இது பற்றி கூறுகையில் பிரிகோஜின் தனிப்பட்ட விமானம் ரஷ்ய வான் படை மூலம் சுட்டு
வீழ்த்தப்பட்டதாக கூறுகிறது. அதாவது ரஷ்ய ராணுவம்தான் இதை திட்டமிட்டு செய்ததாக கூறி
உள்ளது. ஒரு காலத்தில் புட்டினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், புட்டினுக்கு உணவு
சமைத்து கொடுத்த அவரின் சமையல்காரராக இருந்தவர்தான் பிரிகோஜின். தற்போது அதே பிரிகோஜின் மரணத்திற்கு காரணமும் புட்டின்தான்
என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிக்ஸ் மாநாட்டில் புட்டின் பிசியாக இருக்கும்
போதுதான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ரஷ்யாவில் புட்டினுக்கு எதிராக பேசும் பலர் இப்படி
கொல்லப்படுவது வழக்கம். ரஷ்யாவின் உளவாளியான
அலெக்ஸ் நாவல்ணிக்கு மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவர் காப்பாற்றப்பட்டார்..
ரஷ்யாவின் மிக முக்கியமான
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவல்னி , புட்டினை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது தான்
திடீரென சைபீரியாவில் அவர் மீது கொலை முயற்சி நடந்தது. அவரது உள்ளாடையில் விஷம் வைக்கப்பட்டது.
அவருக்கு நரம்புகளை முடக்கும் நோவிச்சோக் என்ற கெமிக்கலை அளித்துள்ளனர். மருத்துவச்
சிகிச்சைக்காகக் கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் ஜேர்மனியில் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தார். பல
மாத சிகிச்சைக்குப் பிறகு அவராகவே முன்வந்து ரஷ்யாவுக்குத் திரும்பிய நிலையில், நவல்னி
கைது செய்யப்பட்டார். பல்வேறு குற்றச்சாடுகளில் அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய உளவுத் துறை அதிகாரியான செர்ஜி ஸ்கிரிபால், அந்நாட்டின் உளவுத் துறையை ஏமாற்றி
பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு ரகசியங்களை அனுப்பி வந்தார். இதனிடையே கடந்த 2018இல் செர்ஜி
ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் பிரிட்டனிலுள்ள கதீட்ரல் நகரமான சாலிஸ்பரியில்
உள்ள ஒரு ஷாப்பிங் சென்டருக்கு வெளியே மயக்கமடைந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தனர். நாவல்னிக்கு தரப்பட்ட நோவிச்சோக்
விஷம் தான் இவர்களுக்கும் தரப்பட்டு இருந்தது. இது சோவியத் ஒன்றியத்தால் 1970,
1980களில் டெவலப் செய்யப்பட்ட பாய்சன் ஆகும். இருப்பினும், தனக்கும் இதற்கும் எந்தவொரு
தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யாவில் இருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் காரா-முர்சா, ரஷ்யாவின் முன்னாள் உளவுத் துறை அலெக்சாண்டர் லிட்வினென்கோ ஆகியோர் கொலை முயற்சியில் இருந்து தீவிர சிகிச்சையின் பின் தப்பினார்கள். ரஷ்யாவின் பணமோசடி திட்டம் குறித்த சுவிஸ் விசாரணைக்கு உதவிய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி 2009 இல் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது.
உக்ரைன் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்த விக்டர் யுஷ்செங்கோ மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து
பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீவ் நகருக்கு வெளியே டின்னர் சாப்பிட்ட போது,
அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது . ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து செய்தியை
வெளியிட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா, கடந்த 2006இல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீடு
திரும்பிய போது அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரஷ்யாவில் இருந்த முக்கிய
எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் காரா-முர்சா, ரஷ்யாவின் முன்னாள் உளவுத் துறை அலெக்சாண்டர் லிட்வினென்கோ ஆகியோர் கொலை முயற்சியில் இருந்து தீவிர சிகிச்சையின் பின் தப்பினார்கள்.
ரஷ்யாவின் பணமோசடி திட்டம்
குறித்த சுவிஸ் விசாரணைக்கு உதவிய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி 2009 இல் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். அதன்
பிறகு சில ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது.
உக்ரைன் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்த விக்டர் யுஷ்செங்கோ மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து
பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீவ் நகருக்கு வெளியே டின்னர் சாப்பிட்ட போது,
அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது . ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து செய்தியை
வெளியிட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா, கடந்த 2006இல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீடு
திரும்பிய போது அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். ரஷ்யாவுக்கு எதிரானவர்களின் கொலை,கொலை முயற்சிகளின் பின்னணியில் தான் இல்லை ர்ன ரஷ்யா சத்தியம் செய்தது. அந்தப் பட்ட்டியலில் பிரகோஜினும்
இணைக்கப்பட்டு விட்டார்.
வர்மா
No comments:
Post a Comment