மகளிர் உலகக்கிண்ண அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, ஸ்பெய்னும் 20 ஆம் திகதி சிட்னியில் வடக்கும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பரபரப்பாக நடந்த அரை இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய அணிகள் பலப்பரீட் சை நடத்தின. 80 ஆவது நிமிடம் வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை எதிரணி வீரர்களும், கோல்கீப்பர்களும் முறியடித்தனர். 81வது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீராங்கனை சல்மா கோல் அடித்தார். பதிலுக்கு சுவீடன் வீராங்கனை ரெபெக்கா 88வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் சமநிலையை எட்டியது. சுவீடன் வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமடைந்த. அந்த உற்சாகம் அடுத்த நிமிடம் கரைந்துபோனது. 89 ஆவது நிமிடத்தில் கார்மோனா கோல் அடித்தார். 2003 இல் கனடாவின் காரா லாங்கிற்குப் பிறகு,சுவீடனுக்கு எதிராக மகளிர் உலகக்கிண்ண அரையிறுதியில் கோல் அடித்த இரண்டாவது இளம்பெண் என்ற பெருமையை கார்மோனா பெற்றார்.2-1 என்ற கோல்கணக்கில் ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது. அதுவே வெற்றிக் கோலாகியது.
போட்டிநேரத்தில் பந்து முழுவதும் ஸ்பெய்னின் ஆதிக்கத்திலேயே
இருந்தது. 13 முறை ஸ்பெய் னும், 6 முறை சு வீடனும்
கோல்கம்பத்தை நோக்கி அடித்தன. சுவீடன்
அடித்த இரண்டு கோல்களும், ஸ்பெய்ன் அடித்த மூன்று கோல்களும் தடுக்கப்படடன.டார்கெட்டை
நோக்கி 2 ஷாட்களை ஸ்பெயினும், 3 ஷாட்களை ஸ்வீடனும் செய்தன. ஸ்பெய்ன் வீராங்கனைகள்
6 முறையும் சுவீடன் வீராங்கனைகள் 13 முறையும் தவறு செய்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நாடைபெற்ற அரையிறுதியிலும், கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கடைசி நான்கிலும் தோல்வியடைந்த சுவீடன் , இந்த ஆண்டு மகளிர் அரை இறுதியிலும் தோல்வியடைந்தது . சுவீடன் ஐந்து அரையிறுதிப் போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வியடைந்துள்ளது நான்காவது முறையாக மூன்றாவது இடத்தைப் பிடிக்க முயற்சிக்கும்.
கடந்த ஆண்டு பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவுக்கு எதிராக
ஸ்பெய்ன் வீராங்கனைகள் கிளர்ச்சியைசெய்தனர்.
ஸ்பெய்னைச் சுற்றியுள்ள சர்ச்சை கடந்த செப்டம்பரில்
ஆரம்பமானது., பயிற்சியாளர் வில்டா வுக்கு எதிராகவும்
,தேசிய அணிக்கான நிலைமைகள் குறித்தும் புகார்
கடிதத்தில் 15 வீராங்கனைகள் கையெழுத்திட்டனர்.
அவர்களில் மூவர் இந்த உலகக் கிண்ண அணியில் உள்ளனர்,
இரண்டு முறை
பலோன் டி'ஓர் வென்ற ஸ்பெய்ன் வீராங்கனை அலெக்ஸியா
புட்டெல்லாஸ், மூன்றாவது உலகக் போட்டியில் விளையாடுகிறார்
சுவீடன் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. 2003 இல் ரன்னர்-அப் , மூன்று முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் சுவீடன் வெள்ளிப் பதக்கங்கம் வென்றது. மேலும் 2016 இல் பிறேஸிலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வென்றது.
சிட்னியில் நடை
பெற்ற மகளிர் உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து
விளையாடிய இங்கில்லாந்து 3-1 என்ற கோல்கணக்கில்
வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. முந்தைய இரண்டு உலகக்
கிண்ணப் போட்டிகளிலும் அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, கடந்த ஆண்டு ஐரோப்பிய
சம்பியன்ஷிப் வெற்றியுடன் உலகப் கிண்ணப் பட்டத்தை சேர்க்கும் முனைப்பில் ஞாயிற்றுக்கிழமை
ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதியை எட்டியுள்ளது. 2022 இல் யூரோ சம்பியனாகிய பின்னர் இரண்டாவது பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறது இங்கிலாந்து.
ஏப்ரலில் நடந்த நட்பு ஆட்டத்தில் இங்கிலாந்து
2-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவிடம்
தோல்வியடைந்தது, சரீனா விக்மேன் பயிற்சியாளர் இடத்தைப் பிடித்த பிறகு அவர்கள் பெற்ற
ஒரே தோல்வி. இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள
இரு அணிகளும் இதுவரை சம்பியனாகத அணிகள்.
எதிர் வரும் 20-ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரமாண்டமான இறுதிப் போட்டியில் ஸ்பெய் ன் அணி இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இங்கிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதால், இறுதிப் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து அணி ரசிகர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment