ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டு 8 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி நியூயார்க் நகரில் ஜூன் 5ஆம் திகதி இரவு நடைபெற்றது.
நாணயச்
சுழற்சியி ல் வெற்றி பெற்ற இந்திய
கப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அயர்லாந்து
அணிக்கு ஆரம்பத்திலேயே திணறிய கப்டன் பால் ஸ்டர்லிங்கை 2 , ஆண்டி
பால்பரின் 5, நிதானமாக
விளையாட முயற்சித்த லார்கன் டுக்கர் 10 ஓடங்களில்
ஆட்டமிழந்தனர்.
ஹேரி
டெக்டர் 4 அதிரடி
காட்ட முயற்சி குர்ட்டிஸ் கேம்பர் 12 , ஜார்ஜ் டாக்ரேல் 3 , மார்க்
அடைர் 3 ,ஜோஸ்வா
லிட்டில் 14, ஓட்டங்களில் ஆடமிழந்தனர். கெராத்
டிலானி அதிரடியாக விளையாடி 26 (14) ஓட்டங்கள்
எடுத்து ரன் அவுட்டானார். 16 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து 96 ஓட்டங்கள்
எடுத்தது. இந்தியா சார்பில் ஹர்டிக்
பாண்டியா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
முகமது
சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மேலும் இப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 3 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 6 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ரி20
கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 11 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற புதிய உலக சாதனையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்கள் வீசியதே முந்தைய சாதனையாகும்.
97 ஓட்டங்களை
துரத்திய இந்தியாவுக்கு களமிறங்கிய
விராட் கோலி தடுமாற்றமாக விளையாடி ஒரு ஓட்டத்துடன் மார்க்
அடைர் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் சவாலான பிட்ச்சில் எதிர்ப்புறம் கப்டன் ரோகித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்த ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார். இரண்டாவது
விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் குவித்த இந்த ஜோடியில் கப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (37) ஓட்டங்கள் அடித்தபோது ஹெல்மெட்டில்
பந்து பட்டதால் அசௌகரியமாக உணர்ந்த அவர் பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 600 சிக்சர்களைக் கடந்தார். சர்வதேச
கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெயில் (553) இரண்டாவது இடத்தில் உள்ளார். அது போக விராட் கோலி,பாபர் அசாமுக்கு பின் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த 3வது வீரராகவும் ரோகித் சர்மா சாதனை படைத்தார். ரிஷப்
பண்ட் 36* ஓட்டங்கள்
அடித்தார். 12.2 ஓவர்களில் இந்தியாவை
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியிலேயே வென்ற இந்திய கிரிக்கெட் அணி குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் +3.02 என்ற வலுவான ரன்ரேட் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment