அவுஸ்திரேலிய வீரர் வானர் ஓமன் அணியின்
ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில்,
தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மேற்கு இந்திய பார்படாஸ் பிரிட்ஜ்டவுன்
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் குரூப் பி-யில் இடம்
பெற்றுள்ள அவுஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
ஓமன் அணியை வீழ்த்தியது.
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான
டேவிட் வானர், சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த
அணியின் முன்னாள் கப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120ஓட்டங்களை
எடுத்திருக்கிறார். இதனை வானர் முறியடித்துள்ளார்.
ஓமன் அணிக்கு எதிரான போட்டியில்,
56 ஓட்டங்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வானர், மொத்தம் 104 போட்டிகளில்
விளையாடி 3,155 ஓட்டங்களை குவித்திருக்கிறார். வானர், 34.28 பேட்டிங் சராசரி வைத்திருப்பதுடன்,
142.53 ஸ்டிரைக் ரேட்டும் வைத்திருக்கிறார்.
இந்த போட்டியில், வானர் மற்றொரு சாதனையையும்
படைத்துள்ளார். அவர், 27-வது அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் மேற்கு இந்திய அணியின்
தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார். கெயில்
110 அரை சதம் அடித்திருக்கிறார். வானர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று,
இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம்
எடுத்துள்ளார்.
ஓமனுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக
விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த வானர், 51 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது அவர் தனது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி நடந்து கொண்டிருந்தார். படிகட்டுகள்
சிலவற்றை ஏறிக் கடந்த பின் தான் அவர் எதிரணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை நோக்கி செல்கிறார்
என்று அங்கு இருந்தவர்கள் அவரிடம் அறிவுறுத்தி உள்ளார்கள். இதனையடுத்து. மீண்டும் கீழே
இறங்கி வந்த அவர் அவுஸ்திரேலியாவின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார்.
வானர் ஓமன் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் ஆடிய வார்னருக்கு வந்த சோதனை என ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment