Friday, June 14, 2024

யூரோ உதைபந்தாட்ட சம்பியன் போட்டி ஜேர்மனியில் ஆரம்பம்

உதைபந்தாட்ட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய  ஐரோப்பிய நடுகள் பங்குபற்றும் யூரோ உதைபந்தாட்டப் போட்டி 15 ஆம் திகதி நேற்று சனிக்கிழமை ஜேர்மனியில் ஆரம்பமானது.  யூரோ 2024 சம்பியன்  போட்டியில் 24 நாடுகள் பங்கு பெறுகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி பேர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியனில் நடைபெறும்.

கடைசியாக நடந்த யூரோ போட்டியில்  இங்கிலாந்தை பெனால்டியில் வீழ்த்தி  இத்தாலி சம்பியனாகியது.

1990  ஆம் ஆண்டு ஜேர்மனி  ஒன்றிணைந்த பின்னர் முதன் முதலாக யூரோ போட்டி நடை பெறுகிறது.   1988 ஆம் ஆண்டு  அப்போதைய மேற்கு ஜேர்மனியில் யூரோ போட்டி நடை பெற்றது.

2018 இல் சுவிட்சர்லாந்தின் நியோனில் நடந்த ஐரோப்பிய  உதைபந்தாட்ட  செயற்குழு கூட்டத்தில்  துருக்கியுடன்  போட்டிபோட்டு ஜேர்மனி  யூரோ போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.

போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்கள்

⚽ பேர்லின்: ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லின்   [71,000)

⚽ கொலோன்: கொலோன் ஸ்டேடியம் (43,000)

⚽ டார்ட்மண்ட்: BVB ஸ்டேடியன் டார்ட்மண்ட் (62,000)

 

டுசெல்டார்ஃப்

: ஃபர்ட் 000) 47,000)

 

கெல்சென்கிர்சென்: அரினா ஆஃப் ஷால்கே (50,000 )

⚽ ஹாம்பர்க்: வோக்ஸ்பார்க்ஸ்டேடியன் ஹாம்பர்க் (49,000)

⚽ லீப்ஜிக்: லீப்ஜிக் ஸ்டேடியம் (40,000)

⚽ முனிச்: முனிச் கால்பந்து அரங்கம் (66,000)

⚽ ஸ்டட்கார்ட்: ஸ்டட்கார்ட் அரங்கம் (51,000)

இவற்றில்   ஒன்பது  மைதானங்களில் 2006 ஆம் ஆண்டு  உலகக்  போட்டி நடைபெற்றது.

இருபத்து நான்கு அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும். மொத்தம் 51 போட்டிகள் நடைபெறும்.

 

⚽ குழு  A : ஜேர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து

⚽ குழு B: ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா

⚽ குழு C: ஸ்லோவேனியா, டென்மார்க், சேர்பியா, இங்கிலாந்து

⚽ குழு D: போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ்

⚽ குழு E : ஸ்லோவாக்கியா, ருமேனியா, உக்ரைன்

⚽ குழு F: துருக்கி, ஜோர்ஜியா, போத்துல், செக் குடியரசு

 

ஜோர்ஜியா யுரோ கிண்ணப் போட்டியில் ஜோர்ஜியா முதன் முதலில் விளையாடுகிறது. உக்ரைனும் போலந்தும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றன.

பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, போத்துகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் யூரோ சம்பியனாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தகுதிச் சுற்றில் தோல்வியடையாத அணியாக  போத்துகல் இருக்கிறது.    பிரான்ஸ் , இங்கிலாந்து ஆகிய நாடுகள் தோற்கடிக்கப்படவில்லை. தோற்கடிக்கப்படவில்லை .ஸ்பெயின் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தன.

2022 உலகக்  கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறாத  ஜேர்மனி யூரோ போட்டியை நடத்தும் நாடு என்பதனால் போட்டியிடமல் நேரடியாகத் தகுதி பெற்றது.  

சுவீடன் ,நோர்வே  ஆகியன யூரோ 2024க்கு தகுதிபெறத் தவறிய இரண்டு பெரிய நாடுகளாகும். 2000-க்குப் பிறகு நோர்வே யூரோ கிண்ணத்தைத் தவறவிடுகிறது.  1996 ஆம் ஆண்டு யூரோ கிண்ணப் போட்டிக்கு சுவீடன் தகுதி பெறவில்லை.

1960 இல் நடந்த முதலாவது யூரோ கிண்ணப் போட்டியில் சோவியத் யூனியன் கால்பந்து அணி    பட்டத்தை 

யூரோ கிண்ணப் போட்டியில் ஜேர்மனி அதிக முறை சம்பியனகி சாதனை செய்துள்ளது. 

 

சம்பியன்                          ரன்னர் அப்

ஜேர்மனி 3 (1972, 1980, 1996)           3 (1976, 1992, 2008)

ஸ்பெயின் 3 (1964, 2008, 2012)            1 (1984)

இத்தாலி 2 (1968, 2020)                   2 (2000, 2012)

பிரான்ஸ் 2 (1984, 2000)                   1 (2016)

ரஷ்யா 1 (1960)                        3 (1964, 1972, 1988)

செக் குடியரசு 1 (1976)                  1 (1996)

போத்துகல் 1 (2016)                    1 (2004)

நெதர்லாந்து  1 (1988)

டென்மார்க் 1 (1992) —

கிரீஸ் 1 (2004) —

சேர்பியா — 2 (1960, 1968)

பெல்ஜியம் — 1 (1980)

இங்கிலாந்து - 1 (2020)

பங்கேற்கும் வீரர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைப் பெறுவதில்லை.பங்கேற்கும் 24 அணிகளின்  உறுப்பினர்கள், போட்டியில் விளையாடுவதற்கு ஊதியம் வழங்க தங்கள் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். பணம் செலுத்துவதற்கு இரண்டு வடிவங்கள் உள்ளன: ஒரு நாள் மற்றும் போனஸ்.

வீட்டிலிருந்து விலகி', அதாவது பயிற்சியில் செலவழித்த நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தினசரி ஊதியம் பொதுவாக வழங்கப்படுகிறது. போனஸ்கள் செயல்திறன் அடிப்படையிலானது.  ஜேர்மன் தேசிய அணியின் வீரர்கள்,    ஐரோப்பிய சம்பியன்ஷிப்பை வென்றால், ஒவ்வொருவரும் 400,000 யூரோக்கள்   பெறுவார்கள் .

 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வெற்றிகள் மற்றும் நாக் அவுட் சுற்றுகளை எட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகை யூரோ 2020: 331 மில்லியன் யூரோக்கள். அந்த பணத்தின் விநியோகம் பின்வருமாறு இருக்கும்:

பங்கேற்பதற்கு: 9.25 மில்லியன் யூரோக்கள்

போட்டி போனஸ்: ஒரு வெற்றிக்கு 1 மில்லியன் யூரோக்கள் மற்றும் டிராவிற்கு 500,000 யூரோக்கள்.

16 சுற்றுக்கான தகுதி: 1.5 மில்லியன் யூரோக்கள்

கால் இறுதிக்கான தகுதி: 2.5 மில்லியன் யூரோக்கள்

அரையிறுதிக்கான தகுதி: 4 மில்லியன் யூரோக்கள்

இறுதிப் போட்டியாளர் (இறுதிப் போட்டியில் தோற்றவர்): 5 மில்லியன் யூரோக்கள்

சம்பியன்: 8 மில்லியன் யூரோக்கள்

 யூரோ சம்பியன் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய அதிகபட்ச பணம் 28.25 மில்லியன் யூரோக்கள்.

ரமணி

No comments: