Sunday, June 9, 2024

இந்தியாவில் தொங்கு நாடாளுமன்றம் கூட்டணியின் உதவியுடன் பிரதமராகிறார் மோடி


 இந்திய அரசியல் வரலாற்றில்  மூன்றாவது முறை பிரதமராகும்  இரண்டாவது அரசியல் தலைவர் என்ற சாதனையை  மோடி  ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக நேரு மூன்று முறை பிரதமராக கடமையாற்றி உள்ளார்.

வாஜ்பாய், அத்வானி ஆகியோரை விட கவர்ச்சிகரமான தலைவராக உள்ளார் மோடி. தனிப் பெரும்பன்மையுடன் கடந்த 10 வருடங்களாக பிரதமராக வலம் வந்த மோடி, இம்முறை அறுதிப் பெரும்பான்மை  இல்லததால்  கூட்டனிக் கட்சிகளின் தயவுடன் பிரதமராகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி 243 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றன. மத்தியில் ஆட்சி செய்வதற்கு அருதிப் பெருமபான்மை 272 ஆகும். பாரதீய ஜனதா 240  தொகுதிகளில் மட்டும்  வெற்றி பெற்றதால்  கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடி உள்ளார். 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை  மோடி பிரதமராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனதிபதி  ரணில் விக்ரமசிங்கே நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.     8000க்கும் மேற்பட்ட பிரமுகர்களும், பாஜக தொண்டர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

 பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமாரும், ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகிய  இருவரும் பழுத்த அரசியல்வாதிகள். அவர்களின் நிபந்தனைகள்   மோடிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை

. சந்திரபாபு நாயுடுவிடம் 16 எம்பிக்களும், நிதிஷ் குமாரிடம் 12 எம்பிக்களும் உள்ளனர். இதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

 சந்திரபாபு நாயுடு லோக்சபா சபாநாயகர் பொறுப்பு உள்பட சில முக்கிய துறையின் அமைச்சர் பதவியை கேட்கிறார். அதேபோல் நிதிஷ் குமாரும் சபாநாயகர் பதவி மீது கண்வைத்துள்ளதோடு முக்கிய இலாக்காக்களை குறிவைத்துள்ளார். இதுதவிர நிதிஷ் குமார் பீகாருக்கும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளது. இவர்களின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைப்பது சிரமம் என்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது இல்லாவிட்டால் அவர்களை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

  ஆந்திராவை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பு அந்தஸ்து கேட்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா புதிய மாநிலமாக 2014ல் பிரிக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு வழங்கப்பட்டது. இது ஆந்திராவுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திராவை மேம்படுத்த சிறப்பு அந்தஸ்து வழங்க தொடர்ந்து சந்திரபாபு நாயுடுகேட்டார். கடந்த 2014 முதல் 2018 சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்தார். ஆனால் மத்தியில் ஆண்ட பிரதமர் மோடி அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார்.

 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் பாஜக சிறப்பு அந்தஸ்து கொடுக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுஇந்தியா' கூட்டணிக்கு மாறலாம்.இதனால் பாஜக இக்கட்டில் சிக்கி உள்ளது.  பீகாரின் நிதிநிலைமையை மேம்படுத்த நிதிஷ் குமாரும் சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்.

 சிறப்பு அந்தஸ்து என்பது சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் நிலஅமைப்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு ஒரு அந்தஸ்தாகும். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு தான் வழங்கும். பாஜக கூட்டணிக்கு தாவும் உத்தவ் தாக்கரே? ‛இந்தியாகூட்டணி மீட்டிங் புறக்கணிப்பு.. பெரிய ட்விஸ்ட் இந்த சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.   அசாம், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியுள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக குரலெழுப்பியுள்ளன. பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருக்கும் ஐக்கிய ஜனதாளத்தின் தலைவர்களின் ஒருவரான கே.சி.தியாகி, "அக்னிபாத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.  லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

 பாஜக ஆட்சி அமைக்காத நிலையில், அதற்குள் கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியருப்பது பாஜக தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  ராகுல் காந்தியைத் தோற்கடித்த  ஸ்மிருதி ராணி, இம்முறை காங்கிரஸ் கட்சித் தொண்டரிடம் தோல்வியடைந்துள்ளார்.   கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட  இம்முறை முறைந்த வக்குகளையே மோடி பெற்றுள்ளார். அதிக  தொகுதிகளில்  பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும் அதன் செல்வாக்கு சரிந்துள்ளது.  11 அமைச்சர்கள்  தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். கடந்த  தேர்தலை விட அதிக தொகுதிகளில்  வெற்றி பெற்ற காங்கிரஸ்  வளர்ச்சியடைந்துள்ளது.அதிக   இடங்களில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றதால் தொண்டர்கள்  மகிழ்ச்சியாக  இருக்கின்றனர்

தமிழகத்தில்  அசைக்க முடையாத சக்தியாக ஸ்டாலின்

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் 40 ம் நமக்கே  என்ற கோஷத்துடன், திமுக, அதிமுக, பாரதீய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் களம்  இறங்கின. தமிழகத்தில் தாமரை மலரும் என அண்ணாமலை அடித்துச் சொன்னார். தமிழக மக்கள்  பாரதீய ஜனதாவைப் புறம் தள்ளுவார்கள் என ஸ்டலின்  பிரசாரம் செய்தார். எப்படித்தான் பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் தாமரைக்கு இடம்  இல்லை எனப்தை  மக்கள் பகிரங்கப் படுத்தியுளனர்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த முறை தமிழகத்தில் பா...வின் குரல் ஓங்கி ஒலித்தது. அதுவும், பொதுவாக ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகைத் தரும் நாட்டின் பிரதம அமைச்சர், தேர்தலுக்கு முன்பு கடந்த 4 மாதங்களில் மட்டும், 8 முறை தமிழகத்திற்கு வந்தார். கடைசியாக தியானம் செய்வதற்கு வந்ததையும் சேர்த்தால், சாதனை அளவாக 9 முறை தமிழகம் வந்திருக்கிறார் மோடி. அப்படியொரு திடீர் பாசம் தமிழகத்தின் மீது பாஜக-விற்கு வந்தது, தேர்தல் காரணமாக என்றால் தவறில்லை.

இந்த முறை தேர்தலில், தமிழகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு படையே களமிறங்கியது. தி.மு.., .தி.மு..விற்குச் சவால்விடும் வகையில், வீடு, வீடாக ஆதரவு கோருவது முதல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி விடயங்களைப் பெரிதாக்குவது வரை, அனைத்திலும், திராவிட கட்சிகளுடன் மல்லுக் கட்டியது. அமைச்சர் முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, தமிழக பாரதீய ஜ்னதாத் தலைவர்  அண்ணாமலை ஆகியோர் படுதோல்வியடைந்தனர்.

 பா...வின் கூட்டணி கட்சிகளின் பிரமுகர்களான   பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன், செளமியா அன்புமணி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

  தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிய பிறகு, 19 இடங்களில் பா... நேரடியாகப் போட்டியிட்டது. அதுமட்டுமின்றி, பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகிய கட்சித் தலைவர்களும் பா...வின் சின்னத்தில் என தாமரை சின்னத்தில் மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.

தாமரை சின்னத்தில் போட்டியிட்டவர்களில், தமிழகத்தில் மட்டும் இந்த முறை 11 பேர் கட்டுப்பணத்தை இழந்தனர்.    தாமரை சின்னத்தில் போட்டியிட்ட 23 இடங்களில், 9 இடங்களில் 2-ம் இடத்திற்கு வந்தனர்.

தனிப் பெரும் தலைவராக  உருவெடுக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி  தொடர்ந்து 10 ஆவது தேர்தலில் படுதோல்வியடைந்தார். திமுகவில் இருந்து  பன்னீர்ச்செல்வம்  வெளியேறியது, பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து வெளியேரியது போன்ற காரணங்களினால்  அதிமுக தோல்வியடைந்தது.

அதிமுக, பாரதீய ஜனதா ஆகிய  இரண்டு கட்சிகளின் தோல்விக்கு  அண்ணாமலைதான் முக்கிய காரணம். பாரதீய ஜனதாவின் மூத்த த்லைவரான எச். ராஜா , தனது கட்சியின் தோல்வியை பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார்.

மோடி 1.0, மோடி 2.0 போன்று இல்லாமல் மோடி 3.0 அமைச்சரவை அமைப்பதில் பாஜக-விற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், சந்திரபாபு  நாயுடு , நிதீஷ்குமார் அகியஇரு பெரும் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வகையில், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டிய நிலைக்கு மோடியும், அமித் ஷா வும்  தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் முடிவுகளுககுப் பிந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டத்தில், இந்தச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படுமா, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், டெல்லியில் இருந்து வரும் தகவல்கள், கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் பாஜக தலைமை உறுதியாக இருப்பதாகவும், மோடி தலைமையில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்பதால்,  கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்றே தெரிகிறது.

முதல் இரண்டு காலக் கட்டங்களைப் போல், மோடி 3.0,  ஆட்சியில், பிரதமர் மோடியால் முழு வேகத்துடன், அவர் பாணியில் நினைத்ததை நிறைவேற்றும் வகையில் செயல்பட முடியுமா அல்லது கூட்டணி கட்சிகள் செக் வைத்து, சிக்கல்களைத் தருவார்களா என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். அதேபோல், சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் தொடர்ந்து ஆதரவு தருவார்களா என்பதும் பல மில்லியன் டாலர் கேள்வி என்றால் மிகையில்லை.

 

ரமணி

No comments: