Monday, June 17, 2024

அடங்க மறுத்த அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்


 ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில்  3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது பாகிஸ்தான். சூப்பர் 8 க்குத் தகுதி பெறாத பாகிஸ்தான் ஆறுதல்  வெற்றிக்காகப் போராடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீசைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெட்த்தாடிய அயர்லாந்து 6.3 ஓவர்களில் 6 விக்கெகளை இழந்து 32  ஓட்டங்கள் எடுத்தது.   அயர்லாந்து 50 ஓட்டங்கலைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அப்போது கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31    அடுத்ததாக வந்த மார்க் அடைர் 15,  மெக்கார்த்தி 2  ஓட்டங்களில் ஆடமிழந்தனர்.

  அயர்லாந்து 100  ஓட்டங்களைத் தாண்டாது  என்று நம்பப்பட்டபோது.  கடைசி நேரத்தில் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜோஸ்வா லிட்டில் 22* (18) ஓட்டங்கள் குவித்தார். அவருடன் பெஞ்சமின் 5* (20) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவரில் முழுமையாக தாக்குப் பிடித்த அயர்லாந்து  9  விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் எடுத்தனர்.

107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு  5 விக்கெற்களை இழந்து 57  ஓட்டங்கள் எடுத்து தோல்வியை  நோக்கிச் சென்றபோது  3வது இடத்தில் களமிறங்கிய கப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடினார். இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய அப்பாஸ் அப்ரிடி 17 ஓட்டங்ளுடன்  முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதனால் மீண்டும் வெற்றி கேள்விக்குறியான போது ஷாகின் அப்ரிடி 2 சிக்ஸருடன் 13* (5) ஓட்டங்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பாபர் அசாம் 32* (34)  ஓட்டங்கள் எடுத்ததால் 18.5 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த உலகக் கிண்ணப் போட்டி  பாகிஸ்தானுக்கு வேதனையாகவும் ரணகளமாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 32*  ஓட்டங்களையும் சேர்த்து ரி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் கப்டனாக 549 ஓட்டங்கள் குவித்துள்ளார். ரிடி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்கள் அடித்த  இந்தியாவின்கப்டன்    எம்எஸ் டோனி சாதனையை உடைத்த பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

No comments: