தமிழக
அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் பலராலும் மதிக்கப்படுஅவர் தமிழிசை செளந்தரராஜன்.
கங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து
பாரதீய ஜனதாவில் இணைந்து அரசியல் களமாடி
வருகிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா
மேடைய்ல் அமர்ந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா, முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவருமான
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே கடுமையாக கண்டிப்பது போன்று பேசிய
வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர்
தமிழிசை செளந்தரராஜனை, அமித் ஷா கண்டித்தாரா அல்லது ஏதாவது சொல்லி அதிருப்தியை வெளியிட்டாரா
அல்லது எதற்காவாவது எச்சரித்தாரா என்று விவாதங்கள் சூடுபறக்கின்றன.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவிற்காக, விஜயவாடா விமான நிலையம்
அருகே உள்ள கேசரபல்லி என்னும் இடத்தில் பிரம்மாண்ட
அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாவில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் கலந்து
கொண்டார். மேடைக்கு வந்த டாக்டர் தமிழிசை அங்கு அமர்ந்திருந்த முன்னாள் துணைக் குடியரசுத்
தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோரை நோகி கையைக்கூப்பி வணக்கம்
சொன்னார். அவர்களும் பதிலுக்கு வணக்கம் சொன்னார்கள்.
அமித்ஷாவைக்
கடந்து தமிழிசை சென்றதும் அவரை அழைத்த அமித்ஷா
கடுகடுப்பான முகத்துடன் ஒற்றை விரலைக் காட்டி எச்சரிக்கும் தொனியுடன் ஏதோசொன்னார். தமிழிசை பணிவாக மறுப்புத் தெரிவித்தார். தமிழிசை சொன்னதை ஏற்காத அமித்ஷா மறுத்தார்.
முதலில்
புன்னகைத்த முகத்துடன் கேட்டுக் கொண்ட தமிழிசை, ஏதோ விளக்கம் சொல்வது போல கூறினார்.
அதை ஏற்க மறுத்த அமித்ஷா, நோ நோ என்று கூறியபடி மீண்டும் தான் சொன்னதை அவரிடம் சொன்னார்.
அதன் பிறகு தமிழிசை பேசவில்லை. அமைதியாக அவர் கூறியதைக் கேட்டு விட்டு நகர்ந்து சென்றார்.
இது
பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் தமிழிசையிடம் அமித்ஷா
என்ன சொன்னார். ஏன் கோப முகத்தைக் காட்டினார். தமிழிசையிடம் அவர் ஏதாவது கோபமாக கூறினாரா
அல்லது அதிருப்தியை வெளியிட்டாரா அல்லது எச்சரித்தாரா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
நாடாளுமன்றத்
தேர்தலில் பாரதீய ஜனதா தமிழகத்தில் தோல்வியடைந்ததற்கு
அண்ணாமலைதான் காரணம் என தமிழிசை பொது வெளியில்
கருத்துத் தெரிவித்தார்.அண்ணாமலையின்
விசுவாசிகள் தமிழிசைக்கு எதிராக போர்க்கொடி
தூக்கி உள்ளனர். இதனால் தமிழ்க பாரதீயஜனதா
பிளவு பட்டுள்ளது. அமித்ஷாவின் கோபத்துக்கு இது காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தமிழிசையை கடுமையாக கண்டித்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிவுகள் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்தும் தமிழிசை பேசியிருந்தார். இதனால் மேலும் பரபரப்பு கூடியது.
இந்த
சூழலில்தான் ஆந்திரா சம்பவம் நடந்துள்ளது. அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக தமிழிசையை,
அமித்ஷா கண்டித்ததாகவும், இனிமேல் தமிழிசை இதுபோல பேசக் கூடாது என்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள்
சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.
அமித்ஷா
என்ன சொன்னார் என்பதை தமிழிசையே வந்து விளக்கினால்தான் உண்டு. அதேசமயம், மூத்த தலைவர்களில்
ஒருவரான, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மிக முக்கியமான ஸ்திரத்தன்மையை கொண்டு வந்ததில்
முக்கியப் பங்காற்றியவரும், தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற உத்வேகமான முழக்கத்தைக்
கொடுத்தவருமான தமிழிசையை பொது வெளியில் வைத்து இப்படி விரல் நீட்டி கண்டிப்பது போல
பேசியதை தமிழ்கக கசித் தலைவர்கள் பலரும் கண்டிக்கின்றனர்.
அமித்ஷாவின் ஆணாதிக்க செயற்பாடு எனவும் சிலர் பதிவிட்டுளனர்.தமிழகத்தில்
பாரதீய ஜனதாவை வளர்த்ததில் தமிழிசையின்பங்கு
முக்கியமானது. தமிழகத்தில் தாமரை மலரும் என்ற
ஒற்றைச் சொல்லுடன் பாரதீய ஜனதா தமிழகத்தில்
காலூன்ற கடுமையாக உழைத்தவர்.
தமிழ்நாடு
பாஜகவில் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையே
ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி
சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது. தாமரையை தூக்கி சுமந்தவரையே பாஜக தலைமை அசிங்கப்படுத்துகிறது.
அண்ணாமலையால்
தமிழக பாரதீய ஜனதா வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும் தமிழிசை சுட்டி காட்டியுள்ளார்.
குற்றவாளிகளும் ரெளடிகளும் பாஜகவில் இருபதாகவும்
அவர்களை அண்ணாமலை சேர்த்ததாகவும் தமிழிசை கூறியதால்
அண்ணாமலை கொதித்துப் போயுள்ளார்.
தமிழிசைக்கு பொதுவில் நடந்தது. அண்ணாமலைக்கு ரகசியமாக
நடந்து இருக்கும். அண்ணாமலையையும் அமித் ஷா கண்டித்திருப்பார்.அண்ணாமலை சொல்வது போல
கட்சி வளரவில்லை. அண்ணாமலை வரிசையாக தோல்வி அடைகிறார். ஆனால், பாஜக வளர்கிறது என்று
சொல்கிறார். ஆனால் தமிழிசை இருந்ஹபோது கட்சி
வலுவாக இருந்தது. பாஜகவில் பல ரவுடிகள் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் பலர் கைதாகி உள்ளனர். பாஜக வாக்கு வங்கி எல்லாம் உயரவில்லை. பாஜக அதிக இடங்களில்
போட்டியிட்டு உள்ளது. அதனால் அதிக வாக்கு வங்கி வந்துள்ளது. நான் தலைவராக இருக்கும்
வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலை சொல்கிறார். அதை அவர் சொல்ல முடியாது.
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமைதான் அதனைச் சொல்ல வேண்டும். அதைச் ஒல்வதர்கு
அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை. தான்
அதிகாரி எனவும் மனேஜர் இல்லை எனவும் அண்ணாமலை
சொன்னார்.
அண்ணாமலை
சொன்ன அனைத்தையும் டெல்லித் தலைவர்கள் நம்பினார்கள். அண்ணாமலைக்காக
பன்னீரையும், எட்ப்பாடியையும் க்கைவிட்டார்கள். கால தாமதமாக உணர்ந்து
கொண்ட அமித்ஷா கதவி, யன்னல் எல்லாம் திறந்திருப்பதாக அறிவித்தார். எடப்பாடி
அசரவில்லை. தேர்தல் முடிவு அண்ணாமலையின் கணிப்பு
பொய் என்பதை நிரூபித்தது.
பஞ்சாப்பில்
பாஜக ஸீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஸீரோ
எடுத்துள்ளது. இதனால் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை
மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம். அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி
கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
மத்தியில்
கூட்டணி ஆட்சி என்பதால் கூட்டணித் தலைவர்களைத்
தாஜா செய்வதில் கவனம் செலுத்தும் பாரதீய ஜனதா இப்போதைக்கு மாநிலத் தலைவர்கள் மீது கைவைக்காது.
விக்ரவாண்டி இடைத்
தேர்தலுகுத்
தயாராகும்
தமிழகம்
இந்திய
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதன் வெற்றி தோல்வி பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
விக்கிரவாண்டி
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி இறந்ததை அடுத்து,
அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூலை 10ம் திகதி
இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் திகதி தொடங்கி ஜூன் 21 ஆம் திகதி வரை நடைபெறும்.
விக்ரவாண்டித் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்கிறார்கள். ஆனால், அண்மைய தேர்தல் முடிவுகள் அதனைச் சிதறடிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலும், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
விக்கிரவாண்டியில் 2011 முதல் இங்கு தேர்தல் நடந்து வருகிறது. முதல்
தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் இரண்டு
முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு முறை அதிமுக வென்றுள்ளது. அதிகபட்சமாக
திமுக இரண்டு முறை இங்கு வெற்றி பெற்றுள்ளது.
கடந்த
2021 சட்டசபைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி 48.69 சதவீத
வாக்குகள் பெற்று வென்றார். 2வது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்
43.72 சதவீத வாக்குகளைப் பெற்றார். கடும் போட்டியைக் கொடுத்தவர் முத்தமிழ்ச்செல்வன்.
இவர்கள் இருவர் தவிர நாம் தமிழர் கட்சி 3வது இடத்தையும், அமமுக 4வது இடத்தையும் பிடித்தனர்.
வெறும் 9573 வாக்குகள் வித்தியாசத்தில்தான் புகழேந்தி வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 72,188 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 65,365 வாக்குகளையும், பாமக வேட்பாளர் முரளி சங்கர் 32,198 வாக்குகளையும்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 8352 வாக்குகளையும் பெற்றனர்.
6823 வாக்குகளால் திமுக கூட்டணி வேட்பாளர்
வெற்ரி பெற்றார். இது நிச்சயம் திமுகவுக்கு சாதகமானதாக இல்லை.
கடந்த
முறை அதிமுக இங்கு போட்டியிட்டதால் இந்த முறையும் அக்கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும்.
நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தொல்வியைச் சந்தித்த பாஜக போட்டியிடாமல் பாமகவை
தள்ளி விடும் வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே
அறிவித்து விட்டது. வாக்குகள் பிரியப் போவது நிச்சயம். தோல்வியடைந்த பாரதீய ஜனதாவைக் கைவிட்டு
அதிமுகவுடன், பாஜக இணந்தால் திமுகவுக்கு
சிக்கலாகிவிடும்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள
நிலையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என முதல்வர்
மு க ஸ்டாலின் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி
தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா கூட்டணி கட்சிகளின்
ஆதரவுடன் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி
தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளள அன்னியூர் சிவா, திமுகவின் விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளராக இருந்து வருகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தனது வேட்பாளரை
அறிவித்து விட்டது.
நாடாளுமன்றத்
தேர்தலில் 40 தொகுதிகளையும் அள்ளிய திமுக
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை எளிதாக எடுத்துக் கொள்ள
மாட்டாது. பிரமாண்டமான வெற்றியைத் தக்க வைக்க கடுமையாகப் போராடும் என்பது நிச்சயம்.
நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - பாமக வேட்பாளர்களுக்குக் கிடைத்த வாக்குகளைக் கூட்டினால், அது விசிக வேட்பாளருக்குக் கிடைத்ததை விட அதிகமாக வருகிறது. எனவே கூட்டணி அமைத்துப் போட்டியிட அதிமுக - பாஜக தரப்பிலிருந்து முயற்சிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் இந்த தேர்தலுக்கு மட்டுமாவது அதிமுக - பாமக கூடடணி அமைக்கவும் முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தத் தேர்தலில் மட்டும் பாமக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இரு கட்சிகளிலும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment