Saturday, June 22, 2024

ரசிகர்களின் அடாவடியால் அல்பேனிய, சேர்பிய அணிகளுக்கு நெருக்கடி


 யூரோ கிண்ணப் போட்டியில்  தேசியவாத வரைபடங்களுடன் கூடிய பதாகைகளை ரசிகர்கள் காட்டியதால்  அல்பேனிய ,சேர்பிய கால்பந்து கூட்டமைப்புகளுக்கு   புதன்கிழமை தலா 10,000 யூரோக்கள் ($10,700) அபராதம் விதிக்கப்பட்டது. ஏனெனில் மைதானங்களில்  ரசிகர்களின் நடத்தைக்கு அணிகளே பொறுப்பேற்க வேண்டும்.

 டார்ட்மண்டில் சனிக்கிழமை இத்தாலிக்கு எதிரான 2-1 தோல்வியின் போது  அல்பேனியா ரசிகர்கள் தங்கள் நாட்டின் வரைபடத்துடன் அதன் எல்லைகளை அண்டை நாடுகளின் எல்லைக்குள் விரிவுபடுத்தும் பேனரைக் காட்சிப்படுத்தினர்.

 கெல்சென்கிர்சனில் இங்கிலாந்துக்கு எதிர போட்டியின் போது  சேர்பியா ரசிகர்களின் பேனரில் கொசோவோவின் சுதந்திரப் பகுதியும், "சரணடைய வேண்டாம்" என்ற கோஷமும் இருந்தது. 2022 உலகக் கோப்பையில் பிறேஸிலுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் லாக்கர் அறையில் இதேபோன்ற பேனருடன் புகைப்படம் எடுத்தபோது பீபாவால் வழக்கு தொடரப்பட்டது.

 

No comments: