ரி20 2024 இல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்கா அடுத்த ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடி தகுதி பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அடுத்த
ரி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20
உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த
ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான்,
பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, அயர்லாந்து , பாகிஸ்தான் ஆகியன நேரடியாக தகுதி பெற்றுள்ளன..
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது,ஐ.சி.சி. ரி20 தரவரிசை அடிப்படையில் இந்த அணிகள்
நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
12
அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். அவை தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடி
உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். அடுத்த ரி20 உலகக் கிண்ணப்
போட்டி இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற உள்ளது.
டி20 உலகக் கிண்ணப் போட்டியை முதன் முதலாக நடத்தும்
வாய்ப்பை பெற்ற அமெரிக்க அணி, இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து என வலுவான
அணிகள் இருந்த பிரிவில் இடம்பெற்றிருந்தது.
லீக்
சுற்றிலே வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை அதிரடியாக
வீழ்த்தியது. அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி
பெற்றது. அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட இந்திய அணியுடன் இணைந்து சூப்பர்
8 சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அடுத்த ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளில் இலங்கை, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment