Tuesday, June 18, 2024

நிக்கோலஸ் பூரானின் வெறியாட்டத்தால் கலங்கி நின்ற ஆப்கானிஸ்தான்

ரி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று  கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள்  104  ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  ஆப்கானிஸ்தான் அணியின் கேடன் ரஷீத் கான் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். முதலில் விளையாடிய  மேற்கு இந்திய அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய பிரெண்டன் கிங் 7 ஓட்டங்களில் வெளியேற மூன்றாவது வீரராக களம் புகுந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியில் வெளுத்து வாங்கினார்.

 நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தை பார்த்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் கதி கலங்கிவிட்டனர். இந்த போட்டியில் 53 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 98 ஓட்டங்கள் குவித்து பயம் காட்டினார்.

கடைசி ஓவரின் போது அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பாராவிதமாக ரன் அவுட்டாகி அவர் வெளியேறினார். 

 20 ஓவர்கள் விளையாடிய  மேற்கு இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 218  ஓட்டங்கள் எடுத்தது.

219 என்ற பிரமாண்ட  வெற்றி என்ற மாபெரும் இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமேஎடுத்தது. 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  மேற்கு இந்திய  அணி அபார வெற்றி பெற்றது.

No comments: