Saturday, June 22, 2024

திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விகிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது அதிமுக‌. திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விக்ரவாண்டி இடைத் தேர்தலில் திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக  அன்னியூர் சிவா,  நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக     அன்புமணி  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நேர்மையாகத்  தேர்தலை நடத்தாது என அவை கூறியுள்ளன.  இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். இதில் மாநில அரசுக்கு எந்த்த தொடர்பும் இல்லை. இதைப் பற்றித் தெரிந்துகொண்டும் இரண்டு கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசுக்கும் இடைத்தேர்தலும் எதுவித தொடர்பும் இல்லை.

  விஜயகாந்த் இருந்தவரை எந்தத் தேர்தலையும் அவர் புறக்கணிப்பு செய்ததில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட அவர் துணிச்சலாக போட்டியிடுவார். ஆனால் அதற்கு முற்றிலும் நேர் மாறாக பிரேமலதா   முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்கும் எடப்பாடியின் முடிவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பத்துத் தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடியார் பதினோராவது தேர்தல் தோல்வியைத் தவிர்த்துள்ளதாக எதிரணியினர்  கேலி பண்ணுகின்றனர்.  இடைத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றிக் கொடியை உயர்த்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலைக் கண்டு பயப்படுகிறது.

 ஜெயலலிதாவே     இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையு  மாறிமாறிச் சந்தித்தவர் ஜெயலலிதா. அனால், எடப்படியார் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்து நிலை குலைந்து போயுள்ளார். சகல தேர்தல்களிலும் வெற்றி  அல்லது இரண்டாம்  இடம்  பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்    கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் மூன்றாம், நான்காம்  இடங்களுக்குத் தள்ளப்பட்டது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மூன்றாம்  இடத்துத் தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் எடப்பாடிக்கு எழுந்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என  இருந்த தமிழக அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் பாரதீய ஜனதாக் கட்சி என  மாற்றுவதற்கு  அண்ணாமலை முயற்சி செய்தார்.தமிழகத்தில்  பாரதீய ஜனதவின் வாக்கு வங்கி உயர்ந்து விட்டது, தமிழகத்தில் தாமரை மலரும் என  அண்ணாமலை  முழக்கமிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் உண்மையை வெளிச்சம்  போட்டுக் காட்டியது. விகிக்ரவாண்டி இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா  போட்டியிடாமல்  ஒதுங்கியதால் பாட்டாளி  மக்கள் கட்சி களத்தில் இறங்கியது.

திராவிட முன்னேற்றக் கழ்கத்தைத் தோற்கடிப்பதற்காக தமிழக எதிர்க் கட்சிகள் அனைத்தும்  ஒன்று பட்டு பொது  வேட்பாளரை நிறுத்தி உள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. அந்தக் கட்சிகளின் தொண்டர்கள்  தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை. இடைத் தேர்தலில் வாகளிக்க வேண்டாம் என எடப்பாடியும், பிரேமலதாவும் சொல்லப் போவதில்லை.  அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  வாகளிக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழ்கமே அந்தா வாக்குகளை அறுவடை செய்யும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 நாடாளுமன்றத் தேர்தலின் போது    கோவை தொகுதியில் அதுதான் நடந்தது. அங்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள்  குறைந்தன. அதேசமயம், பாஜகவின்பாரதீய ஜனதாவின் வாக்குகள் அதிகரிக்கவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற்றது.    விக்கிரவாண்டியிலும் அதுவே நடக்க வாய்ப்புள்ளது.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக தேமுதிக வாக்குகள் பாமகவுக்குப் போய் பாமக வெற்றி பெற்றால் அல்லது கணிசமான தாக்கத்தை திமுகவுக்குக் கொடுத்தால் எதிர்காலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைக்கும் முடிவுக்கு அதிமுக பாஜக போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாக விக்கிரவாண்டியை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுகவின் இந்த முடிவை  மற்றவர்களை விட திமுகதான் சீரியஸாக எடுத்துக் கொள்ளும். தனது உத்திகளை மேலும் வலுவாக்க திமுக திட்டமிடும்,வாக்குகள் சிதறிப் போய் விடாமல் ஒருங்கிணைத்து சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இப்போது திமுகவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பால் அதிருப்திக்குள்ளான அதிமுகவினரை வளைக்கவும் திமுக முயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிகவினரின் வாக்குகளும் இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளது. அவர்களின் வாக்குகளுக்கும் திமுக குறி வைக்கும்.

தமிழக அரசின்மீது மக்கள் கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மண்ணைக்  கெளவும் என எதிர்க்கட்சிகள் முழங்கின. தமிழக மக்கள் லட்டுபோல 40 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டதை எதிர்க் கட்சிகள்  மறந்து விட்டன.

ரமணி

No comments: