இந்தியப்
பிரதமர் மோடியின் செயற்பாடுகள் அனைத்தும் தேர்தலைக் குறிவைத்தே நகர்த்தப்படுகின்றன. தமிழகத்தில் மோடி செய்த தியானமும் தேர்தல் பரப்புரையின் ஒரு
கட்டம் என எதிர்க் கட்சிகள்
குற்றம் சாட்டுகின்றன.
இந்திய இறுதிக்
கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் திகதி நடைபெற்றது.தேர்தல் பிரசாரம் அனைத்தும் முடிவடைந்த பின்னர்
கன்யாகுமரியில் உள்ள விவேகானந்த பாறையில் மோடி மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
தியானம் என்பது அமைதியானது,விளம்பரம் இல்லாதது இல்லாதது. ஆனால்
மோடியின் தியானம் கட்டணம் இல்லாத
விளம்பரம் அதுவும் அரசாங்கத்தின் செலவில் என எதிர்க் கட்சிகள்
வறுத்தெடுக்கின்றன. அடிக்கடி மயமலையில் தியானம்
செய்யும் ரஜினியும் புகைப் படங்களை வெளியிட்டு மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பார். கடசிக் கட்ட தேர்தலுக்கு முன்பாக மோடி தியானம் செய்வது அரசியல்தான் என்பதே எதிர்க் கட்சிகளின்
குற்றச் சாட்டு.
கன்னியாகுமரி
விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்
செய்த படங்களும் வீடியோக்களும் வெளியாகி
சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தியாவின்
தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறையில் சுவாமி
விவேகானந்தர் தியானம் செய்த தியான மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த
வியாழக்கிழமை மாலை
தொடங்கி 45 மணி நேரத்துக்கு தியானம் செய்தார்.
காலையில்
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி காவி உடை அணிந்திருந்தார். கையில் ருத்திராட்ச மாலை வைத்திருந்தார். சூரிய உதயத்தின்போது, கமண்டலத்தில் இருந்து நீர்வார்த்து வணங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. சூரிய
உதயத்தை குமரி முனையில் தரிசித்த பிரதமர் மோடி, அதன்பிறகு மீண்டும் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார். தியானத்திற்கு
இடையே, இளநீர், பழச்சாறு அருந்தினார். விவேகானந்தர்
சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
நெற்றியில் விபூதி பட்டை - குங்குமம் அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி கைகூப்பி வணங்கியவாறு பிரதமர் மோடி சம்மனம் இட்டு அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டது.
மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது.
பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி
கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும், இந்திய கடற்படையினரும், கடலோர குழும பொலிஸாரும்
தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால்
கன்னியாகுமரி காட்சி முனை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய பகுதிகளுக்கு படகுகளில் செல்லவும், சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்குமிடங்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ளவர்கள் குறித்து பொலிஸார்தீவிரமாக விசாரணை நடத்தி னர்.
இந்நிலையில் கன்னியாகுமரி
மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இவை
எல்லாவற்றையும் மீறி மோடியின் தியானம் வெற்றிகரமாக நடைபெற்றது.
மோடியின்
தியானத்தால் சுற்றுலாப்பயணிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின்
கன்னியாகுமரி ஸ்ரீபாத பாறையில் 142 ஆண்டுகளுக்கு முன்னர் நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தியானமிருந்தார். தற்போது நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள்
தவமிருந்தார் . கன்னியாகுமரி கடற்பரப்பில் சிறியதும் பெரியதுமான பாறைகள் உள்ளன. இதில் ஒன்று ஸ்ரீபாத பாறை. ஆன்மீக அடிப்படையில் சிவபெருமானை மணப்பதற்காக ஸ்ரீபகவதி அம்மன் இப்பாறையில் தவமிருந்தார் என்பது புராணக் கதை. இப்பாறையில் பகவதி அம்மன் பாதத் தடம் இருக்கிறது என்பது ஆன்மீக நம்பிக்கை. இதனால் இதற்கு ஸ்ரீபாத பாறை என பெயரிட்டு அழைத்து
வந்தனர்.
1882-ம் ஆண்டு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நரேந்திரநாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் தவமிருக்க விரும்பினார். இதற்காக கன்னியாகுமரி மீனவர்களிடம் உதவி கேட்டார். ஆனால் பணம் கொடுத்தால் படகில் ஸ்ரீபாத பாறைக்கு அழைத்துச் செல்வோம் என மீனவர்கள் கூறியதாக
செவி வழிச் செய்தி உலாவுகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் கடலில் நீந்தியபடியே ஸ்ரீபாத பாறைக்கு சென்று 3 நாட்கள் விவேகானந்தர் தவமிருந்து திரும்பினார் என்பது ஒரு தகவல். இதனடிப்படையில் இந்த ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு விவேகானந்தர்
நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் விவேகானந்தரின் படங்கள், புத்தகங்கள் ஆகியவையும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
1882-ம் ஆண்டு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நரேந்திரநாத் தத்தா என்ற சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்குக்குச் சென்றார். அப்போது ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் தவமிருக்க விரும்பினார். இதற்காக கன்னியாகுமரி மீனவர்களிடம் உதவி கேட்டார். ஆனால் பணம் கொடுத்தால் படகில் ஸ்ரீபாத பாறைக்கு அழைத்துச் செல்வோம் என மீனவர்கள் கூறியதாக
செவி வழிச் செய்தி உலாவுகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் கடலில் நீந்தியபடியே ஸ்ரீபாத பாறைக்கு சென்று மூன்று3 நாட்கள் விவேகானந்தர் தவமிருந்து திரும்பினார் என்பது ஒரு தகவல். இதனடிப்படையில் இந்த ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு விவேகானந்தர்
நினைவு மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் விவேகானந்தரின் படங்கள், புத்தகங்கள் ஆகியவையும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
கன்யாகுமரியில்
தியானம் செய்த பின்னர் சிக்காக்கோவில்
பிரசங்கம் செய்த விவேகானந்தரின் புகழ் உலகெல்லாம்
பரவியது. மூன்று நாட்கள் தியானத்தின் பின்னர் தனது புகழ் உலகெங்கும் பரவும்
என மோடி எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தையும்
தமிழ் மக்களையும் மிகக் கேவலமான முறையில் தாக்கிப் பேசிய மோடி, தியானம் செய்வதற்கு தமிழகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கும் அரசியல் பின்
புலம் உள்ளது. மோடியின் தியானத்துக்கு எதிரான தமிழகத்தின் குரல் இறுதிக் கட்ட தேர்தல் வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மோடி
நம்புகிறார்.
தேர்தலுக்கு பிந்தைய
பிரதமர்
மோடியின்
தியானங்கள்
2019 தேர்தல் பிரச்சாரத்திற்குப்
பிறகு பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் இதேபோன்ற தியானம் செய்தார்.
மே
18, 2019 அன்று ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இமயமலை புனித தலங்களுக்கான தனது இரண்டு நாள் யாத்திரையின் போது, கேதார்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள புனித குகையில் தியானம் செய்தார்.
2019 தேர்தல்
பிரச்சாரத்திற்குப் பிறகு கேதார்நாத் குகையில் இதேபோன்று தியானம் செய்தார். சாம்பல்
பாரம்பரிய பஹாரி உடையில் மோடி
சுமார் 30 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார் மற்றும் மந்தாகினி ஆற்றின் அருகே 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் சன்னதியை சுற்றி வந்தார். பின்னர் பிரதமர் கோயிலுக்கு அருகில் உள்ள குகைக்குள் சென்றார். குங்குமச் சால்வை அணிந்து, புனித குகையில் தியானத்தில் இருந்த மோடி
காணப்பட்டார். சுமார் 17 மணி நேரம் புனித குகையில் செலவிட்டார், இது இப்போது "ருத்ரா குகை" என்று அழைக்கப்படும் 'தியான முகாம்' என்று நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மாநில அரசாங்கமான கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் (GMVN) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
பிரதமர்
நரேந்திர மோடி மே 18, 2019 அன்று கேதார்நாத் கோயிலுக்குச் சென்றபோது கதர்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள குகையில் தியானம் செய்தார்.
"ஆன்மீகம், கலாச்சார
பாரம்பரியம் மற்றும் அவரது தனிப்பட்ட நம்பிக்கை" ஆகியவற்றில் . மோடியின்
முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி, இந்த விஜயத்தை ஊடகங்கள் வெளியிட்டன. தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் "மத உணர்வுகளை ஈர்க்கும்
வகையில் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் ஸ்டண்ட்" என்று பிரசாரம்
செய்தனர்.
பிரதமர்
தியானம் செய்யும் பாறை, விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், துறவியின் வாழ்க்கையில் கவுதம புத்தருக்கு சாரநாத் போன்ற முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். விவேகானந்தர் நாடு முழுவதும் அலைந்து திரிந்து, மூன்று நாட்கள் தியானம் செய்து, வளர்ந்த இந்தியாவைக் காணும் தரிசனம் இங்குதான் வந்ததாகச் சொன்னார்கள்.
ஒரு
தசாப்தத்திற்கு முன்பு, 2024 லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை இலக்காகக் கொண்ட மோடி,
2014 இல் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியை ஒரு துவக்கமாகத் தேர்ந்தெடுத்தார். பிரச்சாரத்தின் முடிவில், மகாராஷ்டிராவில் உள்ள பிரதாப்கரை அவர் பார்வையிட்டார், அங்கு 17 ஆம் நூற்றாண்டில் சிவாஜி தலைமையிலான மராட்டியப் படைகள் முகலாயப் பேரரசுக்கு எதிரான வரலாற்றுப் போரில் வெற்றி பெற்றன.
தமிழகத்தில் அமித்ஷா
நாடாளுமன்ற
மக்களவை தேர்தலுக்கான பரப்புரை நாடு முழுவதும் நிறைவடைந்த
நிலையில் பாரதீய ஜனதாவின் சக்தி மிகு தலைவரான அமித்ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவரை வழிபட்டார். இதனால்,
இந்தியாவின் ஒட்டு மொத்த கவனமும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது.
கோட்டை
பைரவரையும் சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரில் எழுந்திருக்கும் சிவனையும் தரிசிக்க அமித்ஷா திருமயம் சென்றார்.உள்ளூர எழும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டவர் பைரவர் என்ற நம்பிக்கை இந்துக்கள் மத்தியில் உள்ளது.
பாதுகாப்பு
தந்து, தன்னை வழிபடுபவருக்கு வெற்றியை தரும் சக்தி திருமயம் கோட்டை பைரவருக்கு இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர்.
தேர்தல் நடந்து வரும் நிலையில், தான் நினைத்தது நடக்க வேண்டும், தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவே மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா திருமயம் சென்றார்.
கடந்த
ஏப்ரல் மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் பீகாரில் அமித் ஷா ஹெலிகாப்டரில் புறப்படவிருந்த
நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சூழலில்,
கோட்டை பைரவை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மூலம் கேள்விபட்டு அவரை வழிபட அமித்ஷா சென்றதாகக் கூறப்படுகிறது. எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பயணம் நல்லபடியாக முடிய வரம் கொடுப்பவராக திருமயம் கோட்டை பைரவர் இருக்கிறார் என மக்கள் நம்புகிறார்கள்.
பலரும்
தங்களது பயணத்திற்கு முன்னர் ங்கு சிதறு
தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே நீண்ட பயணங்களை துவக்குவதை வழக்கமாக வைத்துள்ளர். அப்படி கோட்டை பைரவரை வழிபட்டு சென்றால், பயணங்களின்போது விபத்தோ அல்லது எந்த விரும்பத்தகாத நிகழ்வோ நடைபெறாமல் பாதுகாப்பாய் பைரவர் வருவார் என்பது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே கோட்டை பைரவரை வணங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சென்றார்.
மோடி
,அமித்ஷா ஆகிய இருவரும் தமிழகத்தில் இருப்பதால் இந்திய
ஊடகங்களின் கவனம் அங்கு திரும்பி உள்ளது. இவர்களின் தமிழகப் பயணம் வெற்றியா தோல்வியா என்பதை தேர்தல்
முடிவு வெளிப்படுத்தும்.
ரமணி
No comments:
Post a Comment