Showing posts with label அதிமுக‌. Show all posts
Showing posts with label அதிமுக‌. Show all posts

Friday, June 24, 2022

பன்னீரை வெளியேற்றிய ஒற்றைத் தலைமைக் கோஷம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கடந்த  ஒரு வாரமாக  நிலவிய பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது.   எடப்படி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் அகியோரின்  இரட்டைத் தலைமையில் செயற்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல்களில் பலத்த தோல்விகளைச் சந்தித்தது. தோல்வியில் இருந்து  மீண்டு வருவதர்குறிய  திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காமல் கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் எடப்பாடி  வெற்றி பெற்று விட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  இரட்டை தலைவர்களாக எடப்பாடியும், பனீரும் ஈபிஎஸ் இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கை அனுமதித்துக் கொண்டிருந்த எடப்பாடி, கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கைப்பற்றிக் கொள்வதில் படுவேகம் காட்டினார். வட்டார, மாவட்ட தலவர்களாக எடப்படியின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டனர். பன்னீரின் பக்கத்தில் இருந்தவர்கள் கடந்த மூன்று நாட்களில் எடப்பாடியின் பக்கம் சாய்ந்து விட்டனர். இத்தனைகும் எடப்பாடி அரசியல் சானக்கியன் அல்ல. தன்னை ஒரு தலைவராக அவர் நிரூபிக்கவில்லை. எடப்பாடி தரபினறின் ஆசைவார்த்தைகளும், பெட்டி மாரியமையும் -பின்னணியில் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவின்  மறைவின் பின்னர் எடப்பாடி ஆட்சி செய்தார். அப்போது பதவி பலம் இருந்தது. இப்போது எதிர்க் கட்சித் தலைவராக எடப்பாடி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அண்ணாமலையும், அன்புமணியும் போட்டி போடுகிறார்கள்.

சென்னையில்  பொதுக்குழு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் எடப்பாடியை பொதுச் செயலாளராக்க வேண்டும்  என்ற கோஷம்  முன் வைக்கப்பட்ட‌து. அந்த  கோஷம் விஸ்வரூபம் எடுத்து பன்னீருக்கு எதிரான கோஷமாக  உரு  மாறியது.  ஒற்றைத் தலைமை என்ற நிகழ்ச்சி நிரல் ஓங்கி ஒலித்தது. இதனால் பன்னீர் கொதித்துப் போனார். அதனை எதிர்ப்பதற்கு  சக பாடிகளுடன் கலந்துரையாடினார்.

 இதனை ஏற்றுக் கொள்ள முடியாதபன்னீர்ச்செல்வம் முதலில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டார்; பின்னர் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டார்.. பொலிஸுக்கும் போனார்; நீதிமன்ற படிகளிலும் ஏறினார்.. இது தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் முதலில், பொதுக்குழு தீர்மானங்களில் தலையிட முடியாது என்றது; பின்னர் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றது.  இதனால் பன்னீர் தரப்பு ஆறுதலடைந்தது.

  இந்த பரபரப்புக்கு நடுவேகடந்த வியாழக்கிழமை   காலை அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவின் தொடக்கமாக அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவருமே தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி அவைத்தலைவர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு தர வேண்டும் என்பதில் முடிவெடுக்கக் கூடியவர்களில் அவைத் தலைவரும் ஒருவர். அவைத்தலைவர்தான் பொதுவாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டுவது அதிமுக மரபு.

ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருதரப்பும் ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதன்பின்னர்தான் காட்சிகளை திட்டமிட்டபடி அரங்கேற்றியது எடப்பாடி தரப்பு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க முடியாது; நிராகரிக்கிறோம் என முதலில் சிவி சண்முகமும் பின்னர் கேபிமுனுசாமியும் அறிவித்தனர். இதில் கேபி முனுசாமி, முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர். உயர்நீதிமன்றத்தில் சொன்னபடி தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் இதனை நிராகரித்துவிட்டனர். ஆகையால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடாது என்பது எடப்பாடி அணியின் கருத்து.

அத்துடன் நிற்காமல் அடுத்த அதிரடியாக  2190 உறுப்பினர்களின் கோரிக்கை மனு ஒன்றையும் சிவி சண்முகம் வாசித்தார்.2190 உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாக சிவி சண்முகம் குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைதான் இது.. தீர்மானம் அல்ல என்கிற சட்ட விளக்கத்துக்காகவே இப்படி கூறினாராம் சிவி சண்முகம். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, புதிய பொதுக்குழு ஜூலை 11-ல் கூடும் என முறைப்படி அறிவித்திருக்கிறார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதனை ஏற்க முடியாமல்தான்  பன்னீர்ச்செல்வமும், வைத்திலிங்கமும் வெளிநடப்புச் செய்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணப்பாளராக  இருந்தபோது கட்சியின் நலனுக்காக பனீர்ச்சேல்வம்  பல பிரச்சினைகளை பெரிது படுத்தவில்லை.   எடப்பாடி பழனிசாமி தரப்பு தமக்கான பலத்தை வலுவாக்கிக்கொண்டேதான் வந்தது. அதிமுகவின் வேட்பாளர் தேர்வு, சசிகலா விவகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என இத்தனை படிநிலைகளிலும் ஓபிஎஸ் தோற்றுக் கொண்டே வந்தார். இப்போது கடைசியாக ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறிகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ்ஸை தள்ளிவிட்டிருக்கிறது எடப்பாடி கோஷ்டி. தொடக்கத்திலேயே ஓபிஎஸ் தரப்பு உஷாராகி இருந்திருந்தால் இத்தனை அவமானங்களையும் அத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீருக்கு எதிராக  ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் கோஷம் போட்டனர். பன்னீரின்  மீது  போத்தல் வீசப்பட்டது. பன்னீர்  முதலமைச்சராக இருந்தபோது கூழைக் கும்பிடு போட்டவர்கள்  இப்போ குத்துக் கரணம் அடித்து அவரை வ் எளியேறுமாறு ஆவேசத்துடன் கூக்குரலிட்டனர்.

ஒருங்கிணைப்பாளரும் ,துணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கதிரை தள்ளி அமர்ந்திருந்தனர்.  ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அண்ணன் என பன்னீரை வாஞ்சையுடன் அழைத்தவர்கள்  மறுபுறம் திரும்பினர். ஆனால் ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட தான் அதே தொண்டர்கள் நிர்வாகிகளால் இப்படி அவமானப்படுத்தப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்ட மண்டபத்துக்கு ஓபிஎஸ் வந்த போது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார்.

இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முட்டல் மோதல்கள், பஞ்சாயத்துகள், உச்சகட்ட சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிய , நிரந்த அவைத்தலைவர் என குறிப்பிட்டார் கே.பி.முனுசாமி. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவியை கைப்பற்றியுள்ளார்.

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.

 அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநராக இருந்த போது எம்ஜிஆர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதை அறிந்து பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தவர் தமிழ்மகன் உசேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளார். எம்ஜிஆர் மன்றத்திலேயே நீண்டகாலம் பணியாற்றி வந்த தமிழ்மகன் உசேன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுசூதனன் மறைவிற்குப் பிறகு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் நடுநிலை வகித்து வந்த அவர் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்குவரை அறிந்து அவரது தரப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய சூழலில் பொதுக்குழு கூட்டம் யாருக்கு லாபமோ இல்லையோ தமிழ்மகன் உசேன் எனக்கு நூறு சதவீதம் லாபம் தான்.

பல்வேறு கட்ட போராட்டங்கள், சர்ச்சைகள், தீர்ப்புகளுக்குப் பிறகு தொடங்கிய அதிமுக பொதுக் குழு அதே வேகத்திலேயே ஒரு முடிவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்காத நிலையில் , ஓபிஎஸ் நினைத்ததும் ஓரளவு நடந்திருக்கிறது. ஆனால் சத்தமில்லாமல் நிரந்தர அவைத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் தமிழ் மகன் உசேன்.

ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றியதற்குப் பிறகு அதிமுக வரலாற்றில் இப்படி ஒரு பொதுக்குழு கூட்டத்தை தொண்டர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு தண்ணீர் பாட்டில் வீச்சு, பஞ்சய் செய்யப்பட்ட டயர் என அல்லோலகல்லப்பட்டு முடிந்திருக்கிறது.

 

Sunday, June 19, 2022

கசந்தது இரட்டைத் தலைமை ஒலிக்கிறது ஒற்றைத் தலைமை கோஷம்

கோஷ்டிப் பூசல் இல்லாத  அரசியல் கட்சி எது எனக் கேட்டால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்ம் என  தயங்காமல் பதில் சொல்லிவிடலாம்ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த இடத்தை இழந்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.இரும்புப் பெண்மணி  ஜெயலலிதாவின் மரணம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் அதிகாரப் போதையை  வெளிப்படுத்தையது.அப்போதைக்கு அமுக்கமாக இருந்த அதிகாரப் போட்டி இப்போது பூதாகரமாகக் கிழம்பிவிட்டது.

முதல்வர் பதவி பரிக்கப்பட்டபின்னர் தர்ம யுத்தம் செய்த . பன்னீர்ச்செல்வம் கழகம் பிரியக்கூடாது என்றஒரே நோக்கத்துக்காக இணங்கிப் போனார்.   பன்னீரின் இணக்கத்தின் பின்னணியில்  பிரதமர்  மோடி பிரதான பங்கு வகித்தார்அவமானங்கள், துரோகங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டு கட்சியின் நலனுக்காக அரசியலில்தொடர்ந்தா பன்னீர்ச்செல்வம். பன்னீருடன் நின்றவர்கள் பதவிக்காக எடப்பாடியின் பக்கம் சென்றார்கள்.

 தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினுள்  தலைமைக்கான யுத்தம் உச்சத்தை எட்டியிருக்கிறது. இரட்டைத் தலைமை திறமையாகச் செயர்படுகிறது எனத் தெரிவித்தவர்கள் இப்போது ஒற்றைத் தலைமை வேன்டும் என முழங்குகிறார்கள். எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஒற்றைத்தலைமை வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார்கள். பன்னீரின் ஆதர்வாளர்கள்  அதர்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

 கட்சி நிர்வாகிகள் மாறிமாறி சந்தித்து வரும் நிலையில், சுமுக முடிவு எட்டப்படுமா, இல்லை கட்சியில் பிளவு வருமா என்கிற அளவுக்கு அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நிர்வாகிகள், `ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகள் கட்சியில் நடந்துவருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன' என வெளிப்படையாகச் சொல்லிவிட்ட பின்னரும், .பி.எஸ் ஆதரவாளர்கள் மட்டும் ஒற்றைத் தலைமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என மிகவும் உக்கிரமாக முழங்கி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள கழக  தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14‍ம் திகதி நடைபெற்றது. அப்போது கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கைகள் பெருவாரியான மாவட்டச் செயலாளர்களால் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. எம்.ஜி.ஆர் மாளிகையின் மேல்தளத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஒரு குழுவும், .பன்னீர்செல்வம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்  தலைமை ஏற்கவேண்டும் என ஒரு குழுவும் மாறிமாறி கீழ்தளத்தில் கோஷங்களை எழுப்ப அந்த இடம் சிறிதுநேரம் பரபரப்பானது.

திடீரென எழுந்த ஒற்றைத் தலமைக் கோஷம் பன்னீரைக் கொதிப்படைய வைத்தது. இந்தக் கோஷத்தின் பின்னணியில் எடப்பாடி இருபாபது அனைவருக்கும் தெரிந்த பரகசியம்பெண்கள்தான் முதலில் கோஷம் செய்தார்கள். எல்லாம் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டதுஒற்றைத் தலைமைப் பிரச்சினை வெளியில் தெரியக்கூடாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தொலைபேசிகள் வாயிலில் ஒப்படைக்கப்பட்டன. இதர்கு எதிர்ப்புத் தெரிவித்த மைத்திரேயன்  கோபத்துடன் சென்று விட்டார்.

கூட்டம் முடிந்து, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ` மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் .தி.மு.-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதுவும் எடப்பாடியின் உள்ளக அரசியலின் காட்சிகளில் ஒன்று. எம்பி பதவிய எதிர்பார்த்த ஜெயகுமாருக்கு பன்னீர்  தடையாக இருந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயக்குமார், வளர்மதி, சென்னை மாவட்டச் செயலாளர்களான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, விருகை ரவி உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பன்னீர்ச்செல்வத்தின்  வீட்டில், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர். இவர்களில் ஆர்.பி.உதயகுமாரும், திண்டுக்கல் சீனிவாசனும் .பி.எஸ்& .பி.எஸ் இருவரின் வீடுகளிலுமே ஆலோசனை நடத்தினர். இம்முறை பன்னீர்  இறங்கிவரமாட்டார் ஆவ்ர் பத்திரிகையாளரின் முன்னால் தனது கருத்தைத் தெரிவித்து விட்டு எடப்பாடியை நோக்கி  கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம், மூத்த தலைவர்கள் செம்மலை, பொன்னையன், கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட 11 பேர்கொண்ட தீர்மானக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

 கட்சி அலுவலகத்துக்கு .பி.எஸ் வருகை தரவிருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலோசனைக்கூட்டத்தை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மற்றவர்களுடன் .பி.எஸ் அலோசனையில் ஈடுபட்டார். பரபரப்புக்கும்,விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசியல் அதிரடிகள்  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை  மையமிட்டு அரங்கேறி வருகின்றன.

``முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆதரவாளர்களுக்கு எம்.எல். சீட் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக .பி.எஸ் பல்வேறு விஷயங்களை விட்டுக்கொடுத்தார். உட்கட்சித் தேர்தல் நடந்துபோதுகூட முதலில், சரிபாதி மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் இடங்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்கிற முடிவில் இருந்தவர், கட்சி நலனுக்காக, கட்சியில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பெரும்பாலானவர்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான் எனத் தெரிந்தபோதும், ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களே தொடர்வதற்கு அனுமதித்தார். கட்சியில் தொடர் தோல்விகளால், பலர் .பி.எஸ் பக்கம் சாயத் தொடங்கியிருந்த நிலையில், சரியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தி அதையும் எடப்பாடி தனக்குச் சாதகமாக்கினார். இப்போது சரியாக, ஒற்றைத் தலைமைக்கான விவகாரத்தையும் கையிலெடுத்துத் தெளிவாகக் காய் நகர்த்தி வருகிறார். அதனால் `கட்சிக்கு நான் எந்த துரோகமும் செய்யலயே. ஏன் என்னை இப்படி நடத்துறாங்க' என தனக்கு நெருக்கமானவர்களிடம் கலங்கியிருக்கிறார் .பி.எஸ்.

பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர், 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அண்னா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக . பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இருவருக்குமான அதிகார போட்டி நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்தது. இந்நிலையில் காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால்   ஒற்றை தலைமையை நோக்கி பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.

 கட்சித் தலைமையை எடப்பாடி கைப்பற்றினாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  இரட்டை இலைச் சின்னமும்  பன்னீரிடம் இருக்கிறதுஅவர் நினைத்தால்  முடக்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததோடு, தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் கட்சி  சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது

அதாவது 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து சட்ட திருத்தம் மேற்கொள்வதோடு அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்தில் பெற வேண்டி உள்ளது. இதற்கிடையில் கட்சியின் பெயரும் சின்னமும் .பன்னீர்செல்வம் அணியிடம் இருப்பதால் ஒற்றைத்தலைமை என்பது தற்போதய காலத்தில் சாத்தியமில்லை. அதற்கும் பன்னீரின் கையெழுத்து தேவை.

எதிர்கட்சியாக நாம் இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர இந்த நேரத்தில் இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதனால், இனி பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம் என்ற பன்னீரின் ருத்து தொண்டர்களுக்கு விடுத்த அழைப்பாகும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமைப் போட்டி பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக மைந்து விடுமோ என்றஅச்சமும் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி இறங்கி வர வேண்டும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க  பன்னீர் தயாராக  இருக்கிறார்.