40,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்று சாதனை படைத்த சிட்னி மரதன் போட்டியில் எத்தியோப்பிய தடகள வீராங்கனை அடிசு கோபெனா, கென்ய தடகள வீரர் பெரஸ் ஜெப்சிர்சிர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆண்கள் பந்தயத்தில் இரண்டு மணிநேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளில் கோபெனா வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்
எத்தியோப்பியாவைச் சேர்ந்த சிம்டெசா டெபெலே குடெட்டா 2:04:46 நேரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் லெசோதோவின் டெபெல்லோ ராமகோங்கோனா 2:04:57 நேரத்தில் ஓடி மூன்றாவட்து இடத்தைப் பிடித்தார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளரான ஜெப்சிர்சிர், பெண்களுக்கான பந்தயத்தில் 2:18:31 நேரத்தில் ஓடி வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து, அவரது சக நாட்டவரான ஐரீன் செப்டாய் 2:22:11 நேரத்தில் இரண்டாம் இடத்தையும், எத்தியோப்பியாவின் ஷுரே டெமிஸ் வேர் 2:22:33 நேரத்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சிட்னி மரதன், நவம்பர் 2024-ல் ஏழாவது அபோட் உலக மரதன் மேஜர் என அறிவிக்கப்பட்டு, 2025-ல் அதிகாரபூர்வமாக இந்தத் தொடரில் இணைந்தது

