Showing posts with label இரட்டையர். Show all posts
Showing posts with label இரட்டையர். Show all posts

Thursday, August 27, 2026

ஜூனியர் டைவிங் உலகப் போட்டியில் தங்கம் வென்ற இரட்டையர்


 மெக்சிகோவைச் சேர்ந்த இரட்டையர்களான மியா குவேவா லொபாட்டோ ,லியா குவேவா லொபாட்டோ ஆகியோர் பெண்களுக்கான சின்க்ரோனைஸ்டு 3மீ ஸ்பிரிங்போர்டு பட்டத்தை வென்றனர்.

15 வயதான லொபாட்டோ சகோதரிகள் 283.02 புள்ளிகளைப் பெற்று, இந்தப் போட்டிகளில் மெக்சிகோவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை உறுதி செய்தனர். ரஷ்யாவின் விக்டோரியா கசான்ட்சேவா ,நடேழ்தா ட்ரிஃபோனோவா வெள்ளிப் பதக்கத்தையும், கனடாவின் லிலா ஸ்டீவர்ட் மற்றும் மெக்கன்சி-மாய் வான் ஹவுட்-காசெரோ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஏழு ஆண்டுகளாக ஒன்றாக டைவிங் செய்து வரும் மியா , லியா, பெண்கள் குரூப் பி 1மீ ஸ்பிரிங்போர்டு பிரிவில் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். அவர்களின் மூத்த சகோதரி சூரி குவேவா லொபாட்டோவும் பெண்கள் சின்க்ரோனைஸ்டு பிளாட்ஃபார்ம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.