கோஷ்டிப் பூசல் இல்லாத அரசியல் கட்சி எது எனக் கேட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்ம் என தயங்காமல் பதில் சொல்லிவிடலாம். ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த இடத்தை இழந்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் மரணம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் அதிகாரப் போதையை வெளிப்படுத்தையது.அப்போதைக்கு அமுக்கமாக இருந்த அதிகாரப் போட்டி இப்போது பூதாகரமாகக் கிழம்பிவிட்டது.
முதல்வர் பதவி பரிக்கப்பட்டபின்னர் தர்ம
யுத்தம் செய்த ஓ. பன்னீர்ச்செல்வம்
கழகம் பிரியக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்காக
இணங்கிப் போனார். பன்னீரின்
இணக்கத்தின் பின்னணியில் பிரதமர் மோடி
பிரதான பங்கு வகித்தார். அவமானங்கள், துரோகங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டு கட்சியின் நலனுக்காக அரசியலில்தொடர்ந்தா பன்னீர்ச்செல்வம். பன்னீருடன் நின்றவர்கள் பதவிக்காக எடப்பாடியின் பக்கம் சென்றார்கள்.
தமிழ்நாட்டின்
பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக்த்தினுள் தலைமைக்கான
யுத்தம் உச்சத்தை எட்டியிருக்கிறது. இரட்டைத் தலைமை திறமையாகச் செயர்படுகிறது
எனத் தெரிவித்தவர்கள் இப்போது ஒற்றைத் தலைமை
வேன்டும் என முழங்குகிறார்கள். எடப்பாடியின்
ஆதரவாளர்கள் ஒற்றைத்தலைமை வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார்கள்.
பன்னீரின் ஆதர்வாளர்கள் அதர்கு
எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
கட்சி
நிர்வாகிகள் மாறிமாறி சந்தித்து வரும் நிலையில், சுமுக
முடிவு எட்டப்படுமா, இல்லை கட்சியில் பிளவு
வருமா என்கிற அளவுக்கு அனல்
பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நிர்வாகிகள், `ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகள்
கட்சியில் நடந்துவருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன'
என வெளிப்படையாகச் சொல்லிவிட்ட பின்னரும், ஓ.பி.எஸ்
ஆதரவாளர்கள் மட்டும் ஒற்றைத் தலைமை
என்கிற பேச்சுக்கே இடமில்லை என மிகவும் உக்கிரமாக
முழங்கி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள கழக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14ம் திகதி நடைபெற்றது. அப்போது கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கைகள் பெருவாரியான மாவட்டச் செயலாளர்களால் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. எம்.ஜி.ஆர் மாளிகையின் மேல்தளத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஒரு குழுவும், ஓ.பன்னீர்செல்வம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை ஏற்கவேண்டும் என ஒரு குழுவும் மாறிமாறி கீழ்தளத்தில் கோஷங்களை எழுப்ப அந்த இடம் சிறிதுநேரம் பரபரப்பானது.
திடீரென எழுந்த ஒற்றைத்
தலமைக் கோஷம் பன்னீரைக் கொதிப்படைய
வைத்தது. இந்தக் கோஷத்தின் பின்னணியில்
எடப்பாடி இருபாபது அனைவருக்கும்
தெரிந்த பரகசியம். பெண்கள்தான்
முதலில் கோஷம் செய்தார்கள். எல்லாம்
மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
ஒற்றைத் தலைமைப் பிரச்சினை வெளியில்
தெரியக்கூடாது என கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தொலைபேசிகள்
வாயிலில் ஒப்படைக்கப்பட்டன. இதர்கு எதிர்ப்புத் தெரிவித்த
மைத்திரேயன் கோபத்துடன்
சென்று விட்டார்.
கூட்டம் முடிந்து, வெளியில்
வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ` மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து
விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள்,
மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத்
தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்'
என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதுவும் எடப்பாடியின் உள்ளக
அரசியலின் காட்சிகளில் ஒன்று. எம்பி பதவிய
எதிர்பார்த்த ஜெயகுமாருக்கு பன்னீர் தடையாக
இருந்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில்
உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயக்குமார், வளர்மதி,
சென்னை மாவட்டச் செயலாளர்களான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு,
விருகை ரவி உள்ளிட்டவர்கள் ஆலோசனை
நடத்தினர்.
பன்னீர்ச்செல்வத்தின் வீட்டில்,
வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், மனோஜ்
பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர். இவர்களில்
ஆர்.பி.உதயகுமாரும், திண்டுக்கல்
சீனிவாசனும் ஓ.பி.எஸ்&
இ.பி.எஸ்
இருவரின் வீடுகளிலுமே ஆலோசனை நடத்தினர். இம்முறை
பன்னீர் இறங்கிவரமாட்டார்
ஆவ்ர் பத்திரிகையாளரின் முன்னால் தனது
கருத்தைத் தெரிவித்து விட்டு எடப்பாடியை நோக்கி கேள்வி
எழுப்பி உள்ளார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில்
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம்,
மூத்த தலைவர்கள் செம்மலை, பொன்னையன், கொள்கை பரப்புச் செயலாளர்
வைகைச்செல்வன் உள்ளிட்ட 11 பேர்கொண்ட தீர்மானக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
கட்சி அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருகை தரவிருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலோசனைக்கூட்டத்தை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மற்றவர்களுடன் ஓ.பி.எஸ் அலோசனையில் ஈடுபட்டார். பரபரப்புக்கும்,விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசியல் அதிரடிகள் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை மையமிட்டு அரங்கேறி வருகின்றன.
``முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆதரவாளர்களுக்கு
எம்.எல்.ஏ சீட்
உள்ளிட்ட பல விஷயங்களில் ஆரம்பத்தில்
இருந்தே கட்சிக்காக ஓ.பி.எஸ்
பல்வேறு விஷயங்களை விட்டுக்கொடுத்தார். உட்கட்சித் தேர்தல் நடந்துபோதுகூட முதலில்,
சரிபாதி மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் இடங்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்கிற முடிவில் இருந்தவர்,
கட்சி நலனுக்காக, கட்சியில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காக, பெரும்பாலானவர்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான் எனத் தெரிந்தபோதும், ஏற்கெனவே
பதவியில் இருப்பவர்களே தொடர்வதற்கு அனுமதித்தார். கட்சியில் தொடர் தோல்விகளால், பலர்
ஓ.பி.எஸ்
பக்கம் சாயத் தொடங்கியிருந்த நிலையில்,
சரியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை
நடத்தி அதையும் எடப்பாடி தனக்குச்
சாதகமாக்கினார். இப்போது சரியாக, ஒற்றைத்
தலைமைக்கான விவகாரத்தையும் கையிலெடுத்துத் தெளிவாகக் காய் நகர்த்தி வருகிறார்.
அதனால் `கட்சிக்கு நான் எந்த துரோகமும்
செய்யலயே. ஏன் என்னை இப்படி
நடத்துறாங்க' என தனக்கு நெருக்கமானவர்களிடம்
கலங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ்.
பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை
தொடர்ந்து சசிகலா அக்கட்சியின் பொதுச்
செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சொத்து
குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற
பின்னர், 2017 ஆம் ஆண்டு டிசம்பரில்
நடைபெற்ற அண்னா திராவிட முன்னேற்றக்
கழக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான
அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில்
திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை
ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும்
அவர்கள் இருவருக்குமான அதிகார போட்டி நீறு
பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்தது. இந்நிலையில் காலச்சூழலுக்கு
ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை
என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை
விடுக்கின்றனர். ஆனால் ஒற்றை
தலைமையை நோக்கி பயணிப்பது அவ்வளவு
எளிதல்ல.
கட்சித்
தலைமையை எடப்பாடி கைப்பற்றினாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகமும் இரட்டை
இலைச் சின்னமும் பன்னீரிடம் இருக்கிறது.
அவர் நினைத்தால் முடக்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததோடு, தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் கட்சி சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதாவது 2017 ஆம் ஆண்டு கொண்டு
வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து
சட்ட திருத்தம் மேற்கொள்வதோடு அதற்கான அனுமதியை தேர்தல்
ஆணையத்தில் பெற வேண்டி உள்ளது.
இதற்கிடையில் கட்சியின் பெயரும் சின்னமும் ஓ.பன்னீர்செல்வம் அணியிடம் இருப்பதால் ஒற்றைத்தலைமை என்பது தற்போதய காலத்தில்
சாத்தியமில்லை. அதற்கும் பன்னீரின் கையெழுத்து தேவை.
எதிர்கட்சியாக நாம் இருக்கிறோம். நாம்
ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த
பணியாற்ற வேண்டுமே தவிர இந்த நேரத்தில்
இந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை
தேவைதானா? பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று
பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அதனால், இனி பொதுச்செயலாளர்
பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு
வருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம் என்ற
பன்னீரின் கருத்து தொண்டர்களுக்கு
விடுத்த அழைப்பாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தினுள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமைப்
போட்டி பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக மைந்து விடுமோ
என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி இறங்கி வர வேண்டும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பன்னீர் தயாராக இருக்கிறார்.
No comments:
Post a Comment