அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கடந்த ஒரு வாரமாக நிலவிய பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது. எடப்படி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் அகியோரின் இரட்டைத் தலைமையில் செயற்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல்களில் பலத்த தோல்விகளைச் சந்தித்தது. தோல்வியில் இருந்து மீண்டு வருவதர்குறிய திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காமல் கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் எடப்பாடி வெற்றி பெற்று விட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை தலைவர்களாக எடப்பாடியும், பனீரும் ஈபிஎஸ் இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கை அனுமதித்துக் கொண்டிருந்த எடப்பாடி, கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கைப்பற்றிக் கொள்வதில் படுவேகம் காட்டினார். வட்டார, மாவட்ட தலவர்களாக எடப்படியின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டனர். பன்னீரின் பக்கத்தில் இருந்தவர்கள் கடந்த மூன்று நாட்களில் எடப்பாடியின் பக்கம் சாய்ந்து விட்டனர். இத்தனைகும் எடப்பாடி அரசியல் சானக்கியன் அல்ல. தன்னை ஒரு தலைவராக அவர் நிரூபிக்கவில்லை. எடப்பாடி தரபினறின் ஆசைவார்த்தைகளும், பெட்டி மாரியமையும் -பின்னணியில் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் எடப்பாடி ஆட்சி செய்தார். அப்போது பதவி பலம் இருந்தது. இப்போது எதிர்க் கட்சித் தலைவராக எடப்பாடி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அண்ணாமலையும், அன்புமணியும் போட்டி போடுகிறார்கள்.
சென்னையில்
பொதுக்குழு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் எடப்பாடியை
பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. அந்த கோஷம் விஸ்வரூபம் எடுத்து பன்னீருக்கு எதிரான கோஷமாக உரு மாறியது. ஒற்றைத் தலைமை என்ற நிகழ்ச்சி நிரல் ஓங்கி ஒலித்தது.
இதனால் பன்னீர் கொதித்துப் போனார். அதனை எதிர்ப்பதற்கு சக பாடிகளுடன் கலந்துரையாடினார்.
இதனை ஏற்றுக்
கொள்ள முடியாதபன்னீர்ச்செல்வம் முதலில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டார்; பின்னர் பொதுக்குழு
தீர்மானங்களுக்கு தடை கேட்டார்.. பொலிஸுக்கும் போனார்; நீதிமன்ற படிகளிலும் ஏறினார்..
இது தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் முதலில், பொதுக்குழு தீர்மானங்களில்
தலையிட முடியாது என்றது; பின்னர் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்
கூடாது என்றது. இதனால் பன்னீர் தரப்பு ஆறுதலடைந்தது.
இந்த பரபரப்புக்கு
நடுவேகடந்த வியாழக்கிழமை காலை அதிமுக பொதுக்குழு
கூடியது. பொதுக்குழுவின் தொடக்கமாக அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர்
ஈபிஎஸ் இருவருமே தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர்
பதவிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி அவைத்தலைவர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை
யாருக்கு தர வேண்டும் என்பதில் முடிவெடுக்கக் கூடியவர்களில் அவைத் தலைவரும் ஒருவர்.
அவைத்தலைவர்தான் பொதுவாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டுவது அதிமுக மரபு.
ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருதரப்பும் ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர்
தமிழ் மகன் உசேன். இதன்பின்னர்தான் காட்சிகளை திட்டமிட்டபடி அரங்கேற்றியது எடப்பாடி
தரப்பு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க முடியாது; நிராகரிக்கிறோம் என முதலில்
சிவி சண்முகமும் பின்னர் கேபிமுனுசாமியும் அறிவித்தனர். இதில் கேபி முனுசாமி, முன்பு
ஓபிஎஸ் ஆதரவாளர். உயர்நீதிமன்றத்தில் சொன்னபடி தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் இதனை நிராகரித்துவிட்டனர். ஆகையால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடாது
என்பது எடப்பாடி அணியின் கருத்து.
அத்துடன் நிற்காமல் அடுத்த அதிரடியாக 2190 உறுப்பினர்களின் கோரிக்கை மனு ஒன்றையும் சிவி சண்முகம் வாசித்தார்.2190 உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாக சிவி சண்முகம் குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைதான் இது.. தீர்மானம் அல்ல என்கிற சட்ட விளக்கத்துக்காகவே இப்படி கூறினாராம் சிவி சண்முகம். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, புதிய பொதுக்குழு ஜூலை 11-ல் கூடும் என முறைப்படி அறிவித்திருக்கிறார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதனை ஏற்க முடியாமல்தான் பன்னீர்ச்செல்வமும், வைத்திலிங்கமும் வெளிநடப்புச் செய்தனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணப்பாளராக இருந்தபோது கட்சியின் நலனுக்காக பனீர்ச்சேல்வம் பல பிரச்சினைகளை பெரிது படுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு தமக்கான பலத்தை வலுவாக்கிக்கொண்டேதான்
வந்தது. அதிமுகவின் வேட்பாளர் தேர்வு, சசிகலா விவகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித்
தலைவர் பதவி என இத்தனை படிநிலைகளிலும் ஓபிஎஸ் தோற்றுக் கொண்டே வந்தார். இப்போது கடைசியாக
ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறிகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ்ஸை தள்ளிவிட்டிருக்கிறது
எடப்பாடி கோஷ்டி. தொடக்கத்திலேயே ஓபிஎஸ் தரப்பு உஷாராகி இருந்திருந்தால் இத்தனை அவமானங்களையும்
அத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது
என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீருக்கு எதிராக ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் கோஷம் போட்டனர். பன்னீரின் மீது போத்தல்
வீசப்பட்டது. பன்னீர் முதலமைச்சராக இருந்தபோது
கூழைக் கும்பிடு போட்டவர்கள் இப்போ குத்துக்
கரணம் அடித்து அவரை வ் எளியேறுமாறு ஆவேசத்துடன் கூக்குரலிட்டனர்.
ஒருங்கிணைப்பாளரும் ,துணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு
கதிரை தள்ளி அமர்ந்திருந்தனர். ஒருவரை ஒருவர்
பார்க்கவில்லை. அண்ணன் என பன்னீரை வாஞ்சையுடன் அழைத்தவர்கள் மறுபுறம் திரும்பினர். ஆனால் ஜெயலலிதா காலத்தில்
அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட தான் அதே தொண்டர்கள் நிர்வாகிகளால்
இப்படி அவமானப்படுத்தப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பொதுக்குழு கூட்டம்
கூட்டப்பட்ட மண்டபத்துக்கு ஓபிஎஸ் வந்த போது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள்
தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு
காரணமாக கீழே இறங்கினார்.
இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முட்டல் மோதல்கள், பஞ்சாயத்துகள், உச்சகட்ட சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிய , நிரந்த அவைத்தலைவர் என குறிப்பிட்டார் கே.பி.முனுசாமி. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவியை கைப்பற்றியுள்ளார்.
அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட
பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை
அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி
அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம்
ஆகியோர்தான் தொடர்கின்றனர்.
அதிமுக அவைத்
தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க
அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர்
தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக
எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.
அரசு பேருந்து ஓட்டுநராக இருந்த போது எம்ஜிஆர் கட்சியைவிட்டு
நீக்கப்பட்டதை அறிந்து பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தவர்
தமிழ்மகன் உசேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளார். எம்ஜிஆர் மன்றத்திலேயே
நீண்டகாலம் பணியாற்றி வந்த தமிழ்மகன் உசேன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுசூதனன்
மறைவிற்குப் பிறகு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் நடுநிலை
வகித்து வந்த அவர் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்குவரை அறிந்து அவரது தரப்பில்
தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய சூழலில் பொதுக்குழு கூட்டம் யாருக்கு லாபமோ இல்லையோ
தமிழ்மகன் உசேன் எனக்கு நூறு சதவீதம் லாபம் தான்.
பல்வேறு கட்ட போராட்டங்கள், சர்ச்சைகள், தீர்ப்புகளுக்குப்
பிறகு தொடங்கிய அதிமுக பொதுக் குழு அதே வேகத்திலேயே ஒரு முடிவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது.
சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்காத நிலையில் , ஓபிஎஸ் நினைத்ததும் ஓரளவு நடந்திருக்கிறது.
ஆனால் சத்தமில்லாமல் நிரந்தர அவைத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் தமிழ் மகன்
உசேன்.
ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றியதற்குப் பிறகு அதிமுக
வரலாற்றில் இப்படி ஒரு பொதுக்குழு கூட்டத்தை தொண்டர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்
என்ற அளவுக்கு தண்ணீர் பாட்டில் வீச்சு, பஞ்சய் செய்யப்பட்ட டயர் என அல்லோலகல்லப்பட்டு
முடிந்திருக்கிறது.
No comments:
Post a Comment